Wednesday, February 3, 2021

உங்கள்_தெருவிலுள்ள_ஆக்கிரமிப்புகளை_அகற்ற


உங்கள் தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முதலில் துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல் நடவடிக்கையாக, அதற்கு உரிய அரசு அலுவலகத்தில் எழுத்து மூலமாக புகார் அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே அகற்றிவிட வேண்டும். சகித்துக் கொள்ளக்கூடாது. அதிகமாக ஆக்கிரமிப்பு செய்ய அனுமதித்தால் அதனை அகற்ற அதிக சக்தியை செலவழிக்க நேரிடும்.
*#புகார்_அளிப்பதற்கு_முன்னர்_என்ன_செய்ய_வேண்டும்?*
புகார் அளிப்பதற்கு முன்பாக தங்களுடைய தெருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியின் வரைபடத்தை வைத்து அந்த தெருவின் அகலம் ஏற்கனவே எவ்வளவு இருந்தது என்பதை அறிந்து கொண்டால் புகாரை தெளிவாக எழுத முடியும். கிராமப்புறமாக இருந்தால் இதற்கான பகுதி வரைபடத்தை (FMB SKETCH) கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அதைக்கொண்டு தங்களுடைய தெருவின் உண்மையான அகலம் எவ்வளவு என்பதை அறிந்து அதற்கேற்ப உங்களது புகார் மனுவைத் நீங்கள் தயாரிக்கலாம்.
*#யாரிடத்தில்_புகார்_அளிக்க_வேண்டும்?*
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்டதாக இருந்தால் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், பேரூராட்சி அல்லது நகராட்சியாக இருந்தால் சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி அலுவலகத்திலுள்ள நகரமைப்புப் பிரிவிலும் எழுத்து மூலமாக உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்க வேண்டும். நேரில் சென்று கொடுப்பதைவிட பதிவுத்தபால் மூலமாக புகாரை அனுப்புவது நல்லது. அதன் மூலம் புகார் அளித்ததற்கான ஆதாரம் நம்மிடம் இருக்கும்.
*#மாநகராட்சிப்_பகுதியாக_இருந்தால்..?*
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் அந்தப் பகுதியைச் சேர்ந்த வார்டு எந்த மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது என்பதை அறிந்து, அந்த மண்டல அலுவலகத்திலுள்ள உதவி ஆணையர் அல்லது உதவி நகரமைப்பு அலுவலர் அவர்களிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கலாம். அதில் ஏதும் நடவடிக்கை இல்லாதபட்சத்தில் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் புகார் தெரிவிக்கலாம். 
*#எங்குமே_எந்த_நடவடிக்கையும்_எடுக்கவில்லை_என்றால்,*
ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடக்கும் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் மனு அளிக்கலாம். அங்கு புகார் பெறப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்குவார்கள்.
*#நீதிமன்றத்திற்கு_எப்போது_செல்ல_வேண்டும்?*
அரசு அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையுமே இல்லையென்றால் மட்டுமே நீதிமன்றம் செல்ல வேண்டும். எடுத்த எடுப்பிலேயே நீதிமன்றம் செல்லக்கூடாது. அரசு அதிகாரிகளிடம்  புகார் அளித்ததற்கான அனைத்து ஆதாரங்களுடன் உயர்நீதி மன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யலாம்.
*#பொதுநல_வழக்குகளை_தனிநபர்_தாக்கல்_செய்யலாமா?*
செலவு, பாதுகாப்பு மற்றும் வழக்கை வலுப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக. ஆக்கிரமிப்பு சார்ந்த பொதுநல மனுக்களை நீதிமன்றத்தில்  தனிநபராகத் தாக்கல் செய்வதைவிட, ஏதேனும் ஓர் அமைப்பு சார்ந்தோ, குடியிருப்போர் சங்கங்கள் சார்ந்தோ தாக்கல் செய்வது நல்லது.

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்



1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.

• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.

• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.

1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.

12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.



பத்திரப்பதிவு தொடர்பான சந்தேகங்களும் அதற்கான பதில்களும்



1. சொத்தின் மதிப்பில் எத்தனை சதவிகிதம், பத்திரம் பதிய செலவாகும்? 

 பதில்: நீங்கள் என்ன வகை ஆவணம் என்பதை இங்கே குறிப்பிடவில்லை. ஆகையால் விற்பனை ஆவணம் (Sale Deed) என்று எடுத்துக்கொண்டால், அந்தச் சொத்தின் சந்தை மதிப்பில் (அரசு வழிகாட்டி மதிப்பு) 7 சதவிகிதம் முத்திரை கட்டணமாகவும், 1 சதவிகிதம் பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.  

2. சொத்தின் மதிப்பு எவ்வளவுக்கு அதிகமாக இருந்தால், அந்தச் சொத்தை பதிவு செய்ய வேண்டும்? 

பதில்: ரூ. 100 க்கு அதிகமான மதிப்பு கொண்ட அசையாத சொத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும்.  

3. குறிப்பிட்ட மதிப்புக்கு கீழ் இருந்தால், மனையை பதிவு செய்ய கட்டணம் கிடையாது என்று என் நண்பன் சொன்னான். அந்தத் தொகை எவ்வளவு என்று குறிப்பிட முடியுமா? 

பதில்: ஆம், அந்தக் குறிப்பிட்ட தொகை ரூ. 25,000. 

4. நான் வாங்கப் போகிற மனையின் அரசு மதிப்பு சதுர அடி ரூ. 1,000. சந்தை விலை ரூ. 500. எந்த மதிப்புக்கு நான் பத்திரம் பதிவு செய்ய வேண்டும்?

பதில்: நீங்கள் அரசு வழிகாட்டி மதிப்புக்குத்தான் ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் குறைந்த மதிப்பிற்குப் பதிவு செய்திருந்தால் சார் பதிவாளர் அந்த ஆவணத்தை, சிறப்பு துணை மாவட்ட ஆ ட்சியர் (முத்திரைத்தாள்) அலுவலகத்திற்கு அந்தச் சொத்தின் சந்தை மதிப்பை அறிய அனுப்பி வைப்பார். அவர் கண்டறிந்த மதிப்பும் நீங்கள் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள மதிப்பும் ஒன்றாக இருந்தால், உங்கள் ஆவணம் உங்களிடம் ஒப்படைக்கப்படும். ஒருவேளை அந்த மதிப்பு நீங்கள் குறிப்பிட்டுள்ள மதிப்பை விட அதிகமாக இருந்தால், கூடுதல் மதிப்புக்கு முத்திரை, பதிவு கட்டணம் நீங்கள் தனியே செலுத்த வேண்டியிருக்கும். மேலும், சில நேரங்களில் அப்போதைய சந்தை நிலவரத்தை வைத்து சந்தை மதிப்பை சிறப்பு துணை மாவட்ட ஆட்சியர் அரசு வழிகாட்டி மதிப்பை விட அதிகமாகக் கணக்கிட வாய்ப்பும் உள்ளது. 

5. கடந்த 5 வருடங்களுக்கு முன் வீட்டு மனை ஒன்று வாங்கினேன். அதனை இப்போது விற்க முயற்சிக்கும் போது சர்வே எண் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதற்கு திருத்தல் பத்திரம் போட வேண்டும் என்கிறார்கள். 2010-ல் சதுர அடி அரசு மதிப்பு 1000 ரூபாய். இப்போது ரூ. 2,000. வித்தியாசப்படும் தொகைக்கு முத்திரைத் தீர்வை பதிவு கட்டணம் அலுவலகத்தில் கட்டச் சொல்கிறார்கள். இந்தத் தொகையை எனக்கு தவறாக பதிவு செய்து கொடுத்த எனக்கு இடத்தை விற்றவரிடம் கேட்க முடியுமா?

பதில்: பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் எந்தத் திருத்தம் செய்யப்படுவதாக இருந்தாலும் பிழை திருத்தல் ஆவணம் மூலம் தான் செய்யப்படும். எல்லா பிழை திருத்தல் ஆவணத்திற்கும், அதிலுள்ள கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகளுக்காக கூடுதல் முத்திரை வரியோ கட்டணமோ வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் தாய் பத்திரத்தில் சர்வே எண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் ஆகிய மற்ற குறிப்பிட்ட விஷயங்கள் தாய் பத்திரத்தில் உள்ளபடியே இருந்தால், பிழை திருத்துவதற்கு ரூ. 200 முதல் 300 வரை செலவாகலாம். ஒருவேளை ஆவண மதிப்பில் உள்ள புதிய விகிதப்படி சார் பதிவாளர், கூடுதல் முத்திரை கட்டணத்தை கட்ட சொன்னால், நீங்கள் உயர் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்யலாம். உங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

6. புதிதாக ஃபிளாட் பதிவு செய்யும்போது, பத்திரப் பதிவுக்கு என்னென்ன கட்டணங்கள் செலுத்த வேண்டி இருக்கும்? விரிவாக விளக்கவும்.

புதிய ஃபிளாட்டுக்கு, முதலில் நீங்கள் கட்டுமான உடன்படிக்கைப் பத்திரத்தைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு கட்டட மதிப்பில் 1 சதவிகிதம் முத்திரை கட்டணமாகவும், 1 சதவிகிதம் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். பின்னர், பிரிபடாத மனை விற்பனை ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பிரிபடாத மனை (யூடிஎஸ்) வழிகாட்டி மதிப்பில் 7 சதவிகிதத்தை முத்திரை கட்டணமாகவும் 1 சதவிகிதத்தைப் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.  

7. நான்கு வருட பழைய அடுக்குமாடி குடியிருப்பை வாங்குகிறேன். வீட்டின் பரப்பு 1000 சதுர அடி. யூடிஎஸ் 600 சதுர அடி. வீட்டை 35 லட்ச ரூபாய்க்கு வாங்குகிறேன். எனக்கு பத்திரப் பதிவுக்கு எவ்வளவு செலவாகும்?

 

நீங்கள் வாங்கும் கட்டடம் எவ்வளவு பழையதாக இருந்தாலும், பொதுப்பணி துறையினர் வழங்கியுள்ள மதிப்பின் அடிப்படையில் உங்கள் கட்டடம் மதிப்பிடப்படும். இந்த மதிப்பு ஒவ்வொரு வருடமும் இவ்வாறு கணக்கிடப்படும். இதன் விவர அட்டவணை சார் பதிவாளரிடம் இருக்கும். இதன்படி சொத்தின் தற்போதைய மதிப்புக்கு 7% முத்திரை கட்டணமும் 1% பதிவு கட்டணமும் செலுத்த வேண்டும்.

முதலில் நீங்கள் அந்த நிலத்தின் பிரிபடாத பங்கின் அரசு வழிகாட்டி மதிப்பையும் அந்தக் கட்டத்தின் ஒரு சதுர அடிக்கான விலையையும் கேட்டு அறிந்து அதற்கேற்ப பத்திரத்தை உருவாக்க வேண்டும். அந்த பழைய ஃப்ளாட்டை பதிவிற்கு பின் சார் பதிவாளர் நேரில் வந்து சோதனை செய்வார். அவர் இடும் மதிப்பு ஆவண மதிப்பை விட கூடுதலாக இருந்தால் அதற்கு எவ்வளவு கூடுதல் முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை சொல்வார். மதிப்பு சரியாக இருந்தால் ஆவணத்தை அப்படியே திருப்பி தருவார். 

8. என் பெயரில் இருக்கும் சொத்தை என் மனைவிக்கு தானமாக கொடுக்க விரும்புகிறேன். சொத்தின் மதிப்பு ரூ. 40 லட்சம். என் மனைவியின் பெயருக்கு சொத்தை மாற்ற எவ்வளவு செலவாகும்? 

 

அசையாத சொத்து மனைவி பெயருக்கு மாற்றப்படும்போது, அதன் மதிப்பு ரூ 40 லட்சமாக இருந்தால் ரூ. 25,000 முத்திரை கட்டணமாகவும், ரூ. 5,000 பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். 

9. நான் வாங்கும் சொத்துக்கு அரசு வழிகாட்டி மதிப்பு, சந்தை மதிப்பை விட இரு மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனை குறைத்து, சரியான சந்தை மதிப்பில் பத்திரம் பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?

பதில்: 4வது கேள்விக்கான பதிலை பார்க்கவும். 

10. நான் புதிதாக ஒரு வீடு வாங்க இருக்கிறேன், வீட்டின் மதிப்பு 50 லட்சம் ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவுக் கட்டணமாக சொத்து மதிப்பில் 12 சதவிகிதம் பில்டர் கேட்கிறார். சரி தானா? 

 

பதில்: 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டுக்கு முத்திரைக் கட்டணம் 3,50,000 ரூபாய், பதிவுக் கட்டணம் 50,000 ரூபாய் மட்டுமே. 

11. நான் 28 வருடங்களுக்கு முன் ஒரு வீட்டை என் பெயரில் வாங்கினேன், தற்போது என் மகனின் பெயருக்கு அதை மாற்றி பதிவு செய்ய வேண்டும் அதற்கு என்ன நடைமுறைகள் என்று விளக்கவும்? அதோடு எவ்வளவு செலவாகும் என்பதையும் குறிப்பிடவும்.

 

பதில்: உங்கள் பெயரில் உள்ள வீட்டை உங்களுடைய மகன் பெயருக்கு மாற்ற தான ஏற்பாடு பத்திரம் எழுதி பதிவு செய்ய வேண்டும். இதற்கு முத்திரைக் கட்டணம் தற்போதைய சந்தை மதிப்பில் 1 சதவிகிதமாக இருக்கும். ஆனால், இந்த கட்டணம் அதிகபட்சம் 25,000 ரூபாய் மட்டுமே. இதைத் தவிர்த்து சொத்து மதிப்பில் 1 சதவிகிதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் அதிகபட்சம் 5,000 ரூபாய் மட்டுமே. 

12. சொத்து பதிவு மற்றும் முத்திரைக் கட்டணம் யாருக்கு செல்கிறது. இதனால், பொது மக்களுக்கு என்ன நன்மை?

 

பதில்: முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் அரசின் வருவாய்க்கு செல்கிறது. இது பொது நோக்கங்களுக்காக வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) மூலம் செலவழிக்கப்படுகிறது. 

 

13. நில மோசடிகளில் கிரிமினல் வழக்கு எப்படி தொடுப்பது? எந்தெந்த சட்டப் பிரிவுகளில் தொடுப்பது?

 

பதில்: நில மோசடி, நில அபகரிப்பு ஆகியவற்றில் இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி)பிரிவு 120 பி (குற்றச்சதி), பிரிவுகள் 405, 406 (நம்பிக்கை மோசடி), பிரிவுகள் 441, 447 (குற்ற ஆக்கிரமிப்பு), பிரிவுகள் 465, 466, 468 (ஃபோர்ஜரி) பிரிவுகள் 472, 473, 474, 475, 476 (போலி உருவாக்கல்), 416, 419 (ஆள்மாறாட்டம்), பதிவுச்சட்டம் பிரிவு 81, 82, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் முதலில் காவல் நிலையத்தில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகாரை சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்தால் அவர் அதை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அருகில் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பார். 

14. நான் ஒரு ஆவணத்தைக் கையெழுத்து வாங்கி உடனடியாக பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது. இந்த ஆவணம் எதுவரை செல்லுபடி ஆகும்?

 

ஒரு ஆவணத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்துப் போட்டுவிட்டால் நான்கு மாதங்களுக்குள் சார் பதிவாளர் முன்பாக பதிவுக்கு தாக்கல் செய்யவேண்டும். இயலாதவர்கள் அரசு விதித்த விகிதச்சாரப்படி அபராதம் கட்டி மேலும் நான்கு மாத காலம் முடிவதற்குள் தாக்கல் செய்துகொள்ளலாம். ஆவணத்தை எழுதிக்கொடுத்தவர்களில் எவராவது சார் பதிவாளர் முன்பு தோன்றி ஒப்புதல் கையெழுத்து செய்யவும், ரேகை பதிவு செய்யவும் இயலாவிட்டால் மேலும் நான்கு மாதங்கள் அபராதம் கட்டுவதன் மூலம் காலத்தை நீட்டிக்கலாம். எனவே ஆவணத்தைத் தாக்கல் செய்வதற்கு எட்டு மாதங்களும் சார் பதிவாளர் முன்பு தோன்றுவதற்கு நான்கு மாதங்களும் ஆகமொத்தம் ஒரு ஆவணத்தின் ஆயுள் ஒரு ஆண்டு காலம் ஆகும். கையெழுத்து போடப்பட்டு எட்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் சார் பதிவாளர் தாக்கல் செய்யப்படாத ஆவணம் செல்லாமல் போய்விடும். அதே போல் சார் பதிவாளர் முன் தாக்கல் செய்யப்பட்ட பின் நான்கு மாதங்களுக்குள் கையெழுத்திட்ட அனைவரும் வந்து ஒப்புதல் கையெழுத்து, கைரேகை இடுதல் முதலியன செய்யாவிட்டால் ஆவணம் பதிவு செய்ய மறுக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும். 

15. பதிவு செய்த விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா?

பதிவு செய்த ஆவணத்தை ஒருதலைபட்சமாக விற்பவர் மட்டும் வந்து ரத்து செய்ய இயலாது. விற்றவர், வாங்கியவர் இருவரும் வந்து ரத்து செய்தாலும் கூட அந்த ரத்து முறைப்படியான மறுவிற்பனை ஆவணத்தின் மூலமே செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மேற்படி பதிவானது, சட்டப்படி நடைமுறைப்படுத்தப்படாது என்று ஆவணத்தில் மேற்குறிப்பு செய்யப்படும். 

 

16. நில அபகரிப்பைப் பற்றி காவல் துறையில் புகார் செய்யும்போது சிவில் கேஸ் என்று சொல்லி சிவில் கோர்ட்டுக்கு போங்கள் என்று சொல்கிறார்கள், இது சரியா?   

 

பதில்: சில நிகழ்வுகளில் இது சரியாக இருக்கலாம். ஒரு சொத்தின் மீது பங்காளி சண்டை இருந்தால் அந்தச் சொத்தின் மீது உரிமையுள்ள ஒருவர் தனக்கு மட்டும் நிலத்தை அபகரித்துக்கொண்டு மற்றவர்களை விரட்ட முயற்சி செய்தால் அதில் யாருக்கு உண்மையான உரிமை உள்ளது என்பதை சிவில் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாத ஒருவர் உங்கள் சொத்தை ஃபோர்ஜரி, ஆள்மாறாட்டம், போலி ஆவணம் முதலிய வழிகளில் அபகரிக்க முயற்சிக்கும்போது அது முழுக்க முழுக்க கிரிமினல் குற்றம் ஆகும்.  

17. மைனர் சொத்தை அவரது தந்தை அல்லது காப்பாளர் விற்பனை செய்தால் வாங்கலாமா?

 

இளையவர் சொத்தை நீதிமன்றத்தின் அனுமதியோடுதான் விற்பனை செய்ய முடியும். அதே போல் அறக்கட்டளைகள் சொத்தையும் நீதிமன்ற அனுமதியோடுதான் விற்பனை செய்ய முடியும்.

 

18. என் வீட்டின் உண்மையான மதிப்பு 32 லட்சம் தான் ஆனால் சந்தை விலை 41 லட்சமாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த பிரச்னையை யாரிடம் சொல்லி புரிய வைத்து என் வீட்டின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய முடியும்?

 

விடை கேள்வி 4-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

19. இரண்டு மாதங்களுக்கு முன், என் வீட்டின் சந்தை மதிப்பை விட 5 லட்சத்திற்கு கூடுதலாக பதிவு மற்றும் முத்திரைக் கட்டணத்தை செலுத்திவிட்டேன். இதை திரும்பப் பெற வழி இருக்கிறதா? 

 

நீங்களாக முன் வந்து வற்புறுத்தலின்றி செலுத்தியிருந்தால் அதைத் திரும்பப் பெற சாத்தியமில்லை. மாறாக வலியுறுத்தலின் பேரில் எதிர் உணர்வின் அடிப்படையில் (under protest) செலுத்தியிருந்தால் மேலதிகாரிக்கு முறையீடு செய்து திருப்புத் தொகை (refund) பெறலாம். 

20 என் மனைவியின் அப்பா எனக்கு 10 சென்ட் வீட்டு மனையை தருவதாக சொல்கிறார். இதற்கு நான் எப்படி முத்திரை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்?

 

உங்கள் மனைவியின் பெயரிலோ அல்லது உங்கள் பிள்ளைகள் பெயரிலோ சொத்தை எழுதிக்கொடுப்பதாக இருந்தால், கேள்வி 8-க்கான பதிலை பார்க்கவும். 

உங்களுக்கு நேரடியாக எழுதிக்கொடுப்பதாக இருந்தால் கேள்வி 1-க்கான பதிலைப் பார்க்கவும்.

 

21. அரசு மதிப்பை விட மனையின் சந்தை விலை குறைவாக இருந்தால், எந்த மதிப்புக்கு நான் பதிவு செய்வது?

 

கேள்வி 4-க்கான பதிலைப் பார்க்கவும்

 

22.பதிவு செய்த விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. கட்டிய முத்திரை மற்றும் பதிவு கட்டணம் திரும்பக் கிடைக்குமா?

 

ஒரு ஆவணம் பதிவு செய்யப்பட்டுவிட்டால் முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது. ஆவணம் பதிவு செய்யப்படாமல் நிலுவை ஆவணமாக வைக்கப்பட்டு அப்படியே திருப்பி பெறப்பட்டால் முத்திரைத்தீர்வை பதிவுக் கட்டணத்திற்கு திருப்பு தொகை பெறலாம்.

23.பத்திரப் பதிவிற்கு செல்லும்போது சார்பதிவாளர்கள் அதைக் கொண்டு வா? இதை கொண்டு வா என்று அழைக்கழிக்கிறார்கள். பதிவிற்கு நாம் என்னென்ன கையில் கொண்டு செல்ல வேண்டும்?

அ. தயாரிக்கப்பட்ட ஆவணம்

ஆ. வீடு இருந்தால் அதன் முழு விவரம் அடங்கிய படிவம், வரைபடம், மனைப்பிரிவின் அங்கீகாரம் பெற்ற நிலப்படம்.

இ. ஆவணதாரர்களின், சாட்சிகளின் புகைப்பட அரசு/அரசுசார்பு அடையாள அட்டைகள் அசலில் மற்றும் சீராக்கப்படிவத்துடன்.

ஈ. பதிவுக் கட்டணம் ரூ. 1000/-க்கு மேல் இருந்தால் கேட்பு காசோலை, முத்திரைத் தீர்வை இட்டது குறைவாக இருப்பின் குறைவுத் தொகை ரூ. 1000/-க்கு மிகுமானால் அதற்கான கேட்பு காசோலை

உ. ஆவணரதாரர்களை நன்கு அறிந்த இரண்டு சாட்சிகள் (சாட்சிகளை அழைக்காது சென்றுவிட்டு யாரிடமாவது ரூ. 50, ரூ 100 கொடுத்து சாட்சி கையெழுத்து போட வைக்க வேண்டாம். ஏனெனில் பின்னர் சொத்துப் பிரச்சனை வந்தால் சாட்சி சொல்ல ஆளைத் தேடிப் போனால் கிடைக்கமாட்டார்கள். கிடைத்தாலும் சாட்சி சொல்ல ரூ. 1 லட்சம் கொடு ரூ. 2 லட்சம் கொடு என்று கேட்ட முன் உதாரணங்கள் உண்டு)

ஊ. தாய்ப்பத்திரங்கள் அல்லது தாய்ப்பத்திரங்கள் வங்கியில் இருப்பின் அதற்கான வங்கிச்சான்று மற்றும் தொலைந்து போயிருந்தால் அதற்கான காவல்துறை சான்று

எ. விவசாய நிலம் என்றால் அரசு வழங்கிய பட்டா முதலிய வருவாய்த்துறை சான்றுகள்

ஏ. வீடு என்றால் விற்பவர், எழுதிக்கொடுப்பவர் பெயரில் உள்ள சொத்துவரி முதலிய விவரங்கள்.

ஐ. வாரிசு முறைப்படி சொத்து வந்திருந்தால் சொத்து உரிமையாளரின் வாரிசு இவர்தான் என்பதை நிலைநாட்ட வாரிசுச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ்

ஒ. சொத்து பற்றிய நடப்பு வில்லங்கச் சான்று விற்பவர், எழுதிக்கொடுப்பவர் பெயரில் இருக்க வேண்டும் (கடந்த 10 நாட்களுக்குள் வாங்கி இருக்க வேண்டும்)

ஓ. ஆலய, வக்பு நிலம் என்றால் தடையின்மைச் சான்று (NOC)

ஒள. விவசாய நிலம் மனைப் பிரிவு ஆக்கப்படுமானால் மாவட்ட ஆட்சியரின் தடையின்மை சான்று 

ஃ. மனைப்பிரிவுக்கான DTCP/CMDA ஏற்பளிப்பு.

அஅ. ஆவணதாரர்களில் வயோதிகம் காரணமாக வர இயலாதவர்கள் மருத்துவமனைகளில் உள்ளவர்கள் பொருட்டு பதிவாளர் அங்கே வர வேண்டுமென்றால் முன்பே மருத்துவர்களிடம் சான்று பெற்று உரிய கட்டணம் செலுத்தி பதிவாளரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று இருக்க வேண்டும்.

அஆ. குறைவு முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டுமென்றால் அதற்கு தனியான விண்ணப்பம்

அஇ. இரண்டாம், மூன்றாம் படி ஆவணங்கள் (Duplicate,Triplicate) பதிவு செய்ய தனியே விண்ணப்பம்.

அஈ. ஆவணதாரர்களில் எவரேனும் பதிவு அன்று வர இயலாவிட்டால் அவர்களுக்காக ஆவணத்தை (வந்தவர்கள் பொறுத்து பதிவை முடித்து) நிலுவையில் வைக்க தனியே விண்ணப்பம்.

அஉ. பொது அதிகார ஆவணத்தின் மூலம் பதிவு செய்ய வரும்பொழுது பொது அதிகாரம் வழங்கிய முதல்வர் (பிரின்சிபால்) உயிரோடிருக்கிறார் என்பதற்கான சான்று.

24. எனக்கு கிரயம் எழுதிக்கொடுத்தவர் எழுதிக்கொடுத்த பின் பின் வாங்குகிறார். என்ன செய்வது?

எழுதிக்கொடுத்தவர் திடீரென பின்வாங்கினால் பதற வேண்டாம். ஆவணத்தை எழுதி வாங்கியவர் அதைத் தாக்கல் செய்து வராமலிருப்பவருக்கு அழைப்பானை அனுப்பும் "கட்டாயப் பதிவு" என்று அழைக்கப்படும் நடைமுறையைப் பின்பற்றலாம். இதில் எழுதிக்கொடுத்தவர் சார் பதிவாளர் முன்பு வந்து எழுதிக்கொடுத்தது உண்மைதான் ஆனால் இப்பொழுது எனக்கு விற்க சம்மதமில்லை அல்லது கூடுதல் தொகை வேண்டும் என்று கேட்பாரானால் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் ஒப்புதல் கையெழுத்து போடாமலேயே ஆவணத்தைப் பதிவு செய்து வில்லங்கச் சான்றில் இடம்பெறச் செய்ய சட்டத்தில் வழி உள்ளது.    

 

25. உயிலை எழுதி வைத்தவர் அதனை பதிவு செய்யாமலேயே இறந்துவிட்டார். அதனை தற்போது பதிவு செய்ய இயலுமா?

 

உயில் மட்டுமல்ல கிரயம் போன்ற ஆவணங்களைக் கூட எழுதிக்கொடுத்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களது சட்டபூர்வமான வாரிசுகள், சாட்சிகள், ஆவண எழுத்தர் முதலியவர்களை அழைத்து விசாரித்து ஆவணம் இறந்து போனவரால்தான் எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது குறித்து பதிவாளர் மனநிறைவடைந்தால் அந்த உயிலையோ அல்லது கிரய ஆவணத்தையோ பதிவு செய்து வில்லங்கச் சான்றில் ஏற்ற முடியும்.

 

26. வில்லங்கம், வில்லங்கச் சான்று என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன?

 

உங்கள் அசையாச் சொத்தின் மீது எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் வில்லங்கக் குறிப்பு என்றே அழைக்கப்படும். அது வில்லங்கச் சான்றில் குறிக்கப்படும். உதாரணமாக உங்கள் தந்தை பூர்விகமாக அனுபவித்து வந்த ஒருவரிடமிருந்து அறுபது ஆண்டுகளுக்கு முன் சொத்து ஒன்றை வாங்கியிருந்தால் அந்தக் குறிப்பும் அதன் பின் உங்கள் தந்தையார் வாங்கிய கடன் மீதான அடைமானம், அது செல்லடித்ததற்கான ரசீது அனைத்தும் பதிவு செய்யப்பட்டால் வில்லங்கச் சான்றில் இடம்பெறும். இதே சொத்தை அவர் உங்களுக்கு தான பத்திரம் எழுதி கைமாற்றிக்கொடுத்திருந்தால் அதுவும் வில்லங்கச் சான்றில் இடம்பெறும். எனவே சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், அவர் சம்மதம் இல்லாமல் சொத்தின் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதுதான் உண்மையான வில்லங்கம் ஆகும். மற்றவையெல்லாம் சாதாரண பதிவு குறிப்புகளே. எனவே வில்லங்கச் சான்றை பதிவு குறிப்பு சான்று என்று அழைப்பதே சரி.

சட்ட வார்த்தைகள் தெரிந்து கொள்வோம்..!



1 உச்சநீதிமன்றம் - Supreme Court
2 உயர்நீதிமன்றம் - High Court
3 நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Judicial Magistrate Court

4 மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் - District Munsif Court

5 தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Chief Judicial Magistrate Court

6 சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Special Judicial Magistrate Court

7 அமர்வு நீதிமன்றம் - Sessions Court
8 உரிமையியல் வழக்குகள் - Civil Cases
9 குற்றவியல் வழக்குகள் - Criminal Cases
10  எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி - Defendant

11 வாதி / மனுதாரர் /புகார்தாரர் - Plaintiff / Complainant /Petitioner
12 குற்றஞ்சாட்டப்பட்டவர் - Accused
13 பாதிக்கப்பட்ட தரப்பு - Adverse Party
14 கட்சிக்காரர் - Client
15 சங்கதி - Fact 
16 மறு விசாரனை - Re Examination 
17  ஆபத்தான கேள்வி - Risky Question
18 தடாலடி பதில் - Fatal Reply
19 குறுக்கு விசாரனை - Cross Examination 
20 உண்மை உறுதிமொழி ஆவணம் - Affidavit
21 குற்றவாளி - Offender
22 குற்றச்சாட்டு - Charge
23 மெய்ப்பிப்பு - Proof
24 சொத்து - Property
25 குற்றம் - Offense
26 கட்டைவிரல் ரேகைப்பதிவு - Thumb Impression
27 திருட்டு வழக்கு - Theft Case
28 திருட்டுப் பொருள் - Stolen Property
29 பைத்தியம் - Insanity
30 சான்றொப்பம் - Attestation
31 சச்சரவு - Affray
32 தீர்ப்பு - Sentence
33 அவசர தன்மை மனு - Emergent Petition
34 கீழமை நீதிமன்றம் - Lower court
35 பரிகாரம் - Remedy
36 உறுத்துக் கட்டளை - Injection Order
37 நிரந்தர உறுத்துக் கட்டளை - Permanent Injection Order

38 வழக்கின் மதிப்பு - Suit Valuation 
39 வழக்குரை - Plaint
40 வழக்குரையில் திருத்தம் - Amendment in Plaint
41 பண வழக்கு - Money Suit
42 அவதூறு வழக்கு - Defamation Suit
43 வறியவர் வழக்கு - Pauper Suit
44 எதிர்வுரை - Counter
45 எழுவினாக்கள் (சிக்கல்) - Issues
46 மேல்முறையீடு -Appeal
47 வரைமொழி வாதுரை - Written Argument
48 குற்றப்பத்திரிக்கை - Charge Sheet
49 தற்காலிக நிறுத்த மனு - Caveat petition
50 கோருரிமை மனு - Claim Petition
51 தடை நீக்கம் - Removal of obstruction
52 வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் - Compromise of suit

53 எதிர் மேல்முறையீடு - Cross Appeal
54 எதிர் மறுப்பு - Cross-objection 
55 வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் - Suits by Indigent Persons u

56 நீதிமன்றக் காப்பாளர் - Court Guardian
57 ஒத்தி வைத்தல் - Adjournment
58 சாட்சி - witness

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய G.O

1.  ஒப்படை செய்யப்பட்ட நிலங்களை 10 வருடங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. அதன்பிறகு ஒரு தகுதியுள்ள நபருக்கு தான் விற்க வேண்டும். அதற்கு தாசில்தார் அல்லது வருவாய் கோட்டாட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். 
G. O. Ms. No - 2485, Rev, dt - 9.11.1979

2.  சவுக்கு, தென்னை மற்றும் தோட்டப்பயிர்களையும் (நெல், வாழை போன்றே) சாகுபடி பயிர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 
G. O. Ms. No - 1030,Rev, dt - 9.7.1985

3.  டிரஸ்ட் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிலங்களை ஒதுக்கக்கூடாது. 
G. O. Ms. No - 2211, Rev, dt - 20.12.1989

4.  அரசு நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர், அந்த குத்தகை தொகையை ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். தவறினால் குத்தகை ரத்து செய்யப்படும். 
G. O. Ms. No - 41580/LD.III/98 Rev. dt - 5.2.1999

5.  PWD/Highways துறை நிலங்களை பொருத்து, சம்பந்தப்பட்ட துறைகளே குத்தகை அனுமதி வழங்கும். இதர துறை நிலங்களை பொருத்து வருவாய்த்துறை மூலம் குத்தகைக்கு விடப்படும். 
Chapter - 29 - manual for Rev. Dept. Officials - 2001

6.  RSO 24A(10) ன்படி மதச்சார்பு நிறுவனங்கள் கோவில் காரியங்களுக்கு அரசு நிலங்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் அவற்றிற்கு பட்டா வழங்க இயலாது. 
G. O. Ms. No - 133, Rev, dt - 21.1.1977

7.  வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிலங்களில் 30.6.1977 க்கு முன்னர் குடிசை வீடு கட்டி வசிக்கும் வீடற்ற ஏழை மக்களை அவ்விடத்திலிருந்து காலி செய்தல் கூடாது. 
G. O. Ms. No - 1670, Rev. dt - 29.8.1977

8.  சென்னை உயர்நீதிமன்ற W. P. NO - 26722/2013 மற்றும் M. P. NO - 1/2013, DT - 11.8.2014 ம் தேதியில் பிறப்பிக்கப்பட்ட ஆணையின் படி ஆக்கிரமிப்பு அகற்றுதல் சம்மந்தமாக என்ன நடைமுறைகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என அரசு G. O. Ms. No - 540, Rev. LD6(2),dt - 4.12.2014 என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. 

9.  நிலமற்ற ஏழைகள் மேற்படி நிலத்தை நீண்ட காலமாக அனுபவித்து வந்தால் RSO 15 ன் கீழ் அவர்களுக்கு இலவச ஒப்படை வழங்கலாம். 
G. O. Ms. No - 4018, Rev. Dept. dt - 7.7.1973

நன்றி...

புறம்போக்கு நிலத்தை தவிர நத்தம் குடியிருப்பு பகுதிகளில் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை

“புறம்போக்கு நிலத்தை தவிர நத்தம் குடியிருப்பு பகுதிகளில் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அங்கே ஆக்கிரமிப்பு சட்டத்தின் படியான நடவடிக்கைகளை அரசு எடுக்க முடியாது” என்று Palani Ammal –vs- L.Sethuraman Aiyanghar - 1949 (1) MLJ 290 வழக்கில் கூறப்பட்டுள்ளது.

  மேலும் Ellammal and ors –vs- State of TamilNadu rep.by Collector North Arcot District Vellore and ors – 2007 (2) MLJ 1113 வழக்கில், “கிரைய ஆவணங்களின் அடிப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடிவசித்து வருபவர்களுக்கு, அரசுக்கெதிராகவும் அனைவருக்கும் எதிராகவும் எதிரிடை அனுபோகம் உண்டாகி விடுகிறது. குடிவசிப்பவர்களுக்கோ அல்லது அவர்களின் முன்பாத்தியஸ்தர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்பதாலும், நிலம் நத்தமாக வகைப்பாடு செய்யப்பட்டதாலும் அரசுக்கு சொந்தமாக ஆகி விடாது” என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.

  மேலும் The Executive officer Kadathur Town Panchayat, Harur Taluk, Dharmapuri –vs- Swaminathan and ors – 2004 (3) CTC 720 – 2004 (3) LW 278 - வழக்கில் “கிராம நத்தம் அரசுக்கு உடைமை மாற்றம் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கப் பட்டது என்றும், நத்தம் நிலம் ஒருபோதும் அரசுக்கோ, உள்ளாட்சிக்கோ பாத்தியப்பட்டது ஆகாது என்றும், பட்டாவை ரத்து செய்வதின் மூலமோ அல்லது உள்ளாட்சித் தீர்மானத்தின் மூலமோ, ஒரு குடிவசிப்பவரை வெளியேற்ற முடியாது என்றும், மேதகு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள எண்ணற்ற தீர்ப்புகளின் அடிப்படையில் உரிமைத் தாவா ஏற்பட்டு இருக்குமானால், அது உரிய தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  “எல்லா நத்தம் நிலமும் அரசாங்க சொத்தென்று எந்த சட்டத்திலும் இல்லை” என்று A.SankaraLIngam –vs- Arunachala Reddiar and ors – 1993 (1) MLJ 472 – வழக்கில் கூறப்பட்டுள்ளது.

  “அரசாங்கம் நிலத்தின் வகைப்பாட்டை நத்தமாக அல்லது வேறு எதுவுமாக மாற்றி அமைத்தாலும், அது கிரைய ஆவணத்தின் படி அடைந்துள்ள ஒருவரின் சொத்துரிமையை எந்த விதத்திலும் மாற்றி விடாது” என்று K.Subban Pagadai –vs- S.Subban Pagadai and anr – 2000 (2) MLJ 636

  இதே போல S.Rengaraja Iyengar and anr –vs- Achikannu Ammal and anr – 1959 (2) MLJ 513 வழக்கில் “நிலத்தின் வகைப்பாட்டை நத்தமாக மாற்றுவதால், அது அரசிடம் அளிக்கப்பட்டதாக கருத முடியாது’ என்று கூறப்பட்டுள்ளது

  இதே போல Block Development Officer –vs- Suguna dt 2-03-2012 என்ற வழக்கில், “கிராம நத்தம் அரசுக்கு பாத்தியப்பட்டதில்லை என்றும், பட்டாவை ரத்து செய்வதாலோ, அல்லது தீர்வை வசூலிக்க மறுப்பதாலோ, ஒருவர் பத்திரப்படி அனுபவித்து வரும் சொத்து இல்லையென்றாகி விடாது என்றும், வட்டார வளர்ச்சி அலுவலகம் அரசாங்கம் என்ற பதத்தின் கீழ் வராது என்றும், வழக்கில் உறுத்துக்கட்டளை பரிகாரமும் நிலைக்கத்தக்கது” என்றும் கூறப்பட்டுள்ளது. 

  “ஒருமுறை நத்தமாக வகைப்பாடு செய்யப்பட்டு விட்டால், அதிலிருந்து அது அரசுக்கு உடைமையானது இல்லை என்பதாக கருதப்பட வேண்டும் என்றும், நத்தம் குடியிருப்பு அரசுக்கு சொந்தமானது இல்லை என்பதால் வட்டாட்சியர் ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், அச்சட்டத்தின் பிரிவு 7ன் படியான அறிவிப்பு ரத்து செய்யப் படுவதாகவும்” Srinivasan & Rukmani ammal –vs- Tashildhar, Egmore Nungambakkam Taluk – 2010 (1) LW 123 வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

  மேலும் N.S.Kuppuswamy Odayar and anr –vs- The Panchayat of Narthamgudi – 1971 (1) MLJ – 190 வழக்கில்  ‘நத்தம் புறம்போக்கு என்று ReSettlement Register ல் பதிவு செய்யப்பட்டுள்ளதால்  மட்டும் அது அரசாங்க சொத்தாகி விடாது என்றும், உரிமைமூல ஆவணம் நிலைக்கத்தக்கது என்றும் கூறப்பட்டுள்ளது.

  A.K.Thillaivanam and another –vs- The District Collector, Chengai Anna District at Kancheepuram and ors – 1998 (3) LW 603. வழக்கில் நத்தம் குடியிருப்பு நிலம் ஒருபோதும் அரசுடைமை ஆகாது என்றும், அங்கே அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, ஷை குடியிருப்பு நிலத்தை விவசாய நிலமாக மாற்றி பயன்படுத்தினாலும் கூட அப்போதும் அரசுக்கு உரிமை எழாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

  மேலும் ஊராட்சிகள் சட்டம் பிரிவு 134 யை வாசித்தாலும் ரயத்துவாரி புறம்போக்கு நிலம் மட்டுமே உள்ளாட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது மிகத் தெளிவாகும். 



“புறம்போக்கு நிலத்தை தவிர நத்தம் குடியிருப்பு பகுதிகளில் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அங்கே ஆக்கிரமிப்பு சட்டத்தின் படியான நடவடிக்கைகளை அரசு எடுக்க முடியாது” என்று Palani Ammal –vs- L.Sethuraman Aiyanghar - 1949 (1) MLJ 290 வழக்கில் கூறப்பட்டுள்ளது.

மேலும் Ellammal and ors –vs- State of TamilNadu rep.by Collector North Arcot District Vellore and ors – 2007 (2) MLJ 1113 வழக்கில், “கிரைய ஆவணங்களின் அடிப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடிவசித்து வருபவர்களுக்கு, அரசுக்கெதிராகவும் அனைவருக்கும் எதிராகவும் எதிரிடை அனுபோகம் உண்டாகி விடுகிறது. குடிவசிப்பவர்களுக்கோ அல்லது அவர்களின் முன்பாத்தியஸ்தர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்பதாலும், நிலம் நத்தமாக வகைப்பாடு செய்யப்பட்டதாலும் அரசுக்கு சொந்தமாக ஆகி விடாது” என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.

  மேலும் The Executive officer Kadathur Town Panchayat, Harur Taluk, Dharmapuri –vs- Swaminathan and ors – 2004 (3) CTC 720 – 2004 (3) LW 278 - வழக்கில் “கிராம நத்தம் அரசுக்கு உடைமை மாற்றம் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கப் பட்டது என்றும், நத்தம் நிலம் ஒருபோதும் அரசுக்கோ, உள்ளாட்சிக்கோ பாத்தியப்பட்டது ஆகாது என்றும், பட்டாவை ரத்து செய்வதின் மூலமோ அல்லது உள்ளாட்சித் தீர்மானத்தின் மூலமோ, ஒரு குடிவசிப்பவரை வெளியேற்ற முடியாது என்றும், மேதகு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள எண்ணற்ற தீர்ப்புகளின் அடிப்படையில் உரிமைத் தாவா ஏற்பட்டு இருக்குமானால், அது உரிய தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  “எல்லா நத்தம் நிலமும் அரசாங்க சொத்தென்று எந்த சட்டத்திலும் இல்லை” என்று A.SankaraLIngam –vs- Arunachala Reddiar and ors – 1993 (1) MLJ 472 – வழக்கில் கூறப்பட்டுள்ளது.

  “அரசாங்கம் நிலத்தின் வகைப்பாட்டை நத்தமாக அல்லது வேறு எதுவுமாக மாற்றி அமைத்தாலும், அது கிரைய ஆவணத்தின் படி அடைந்துள்ள ஒருவரின் சொத்துரிமையை எந்த விதத்திலும் மாற்றி விடாது” என்று K.Subban Pagadai –vs- S.Subban Pagadai and anr – 2000 (2) MLJ 636

  இதே போல S.Rengaraja Iyengar and anr –vs- Achikannu Ammal and anr – 1959 (2) MLJ 513 வழக்கில் “நிலத்தின் வகைப்பாட்டை நத்தமாக மாற்றுவதால், அது அரசிடம் அளிக்கப்பட்டதாக கருத முடியாது’ என்று கூறப்பட்டுள்ளது

  இதே போல Block Development Officer –vs- Suguna dt 2-03-2012 என்ற வழக்கில், “கிராம நத்தம் அரசுக்கு பாத்தியப்பட்டதில்லை என்றும், பட்டாவை ரத்து செய்வதாலோ, அல்லது தீர்வை வசூலிக்க மறுப்பதாலோ, ஒருவர் பத்திரப்படி அனுபவித்து வரும் சொத்து இல்லையென்றாகி விடாது என்றும், வட்டார வளர்ச்சி அலுவலகம் அரசாங்கம் என்ற பதத்தின் கீழ் வராது என்றும், வழக்கில் உறுத்துக்கட்டளை பரிகாரமும் நிலைக்கத்தக்கது” என்றும் கூறப்பட்டுள்ளது. 

  “ஒருமுறை நத்தமாக வகைப்பாடு செய்யப்பட்டு விட்டால், அதிலிருந்து அது அரசுக்கு உடைமையானது இல்லை என்பதாக கருதப்பட வேண்டும் என்றும், நத்தம் குடியிருப்பு அரசுக்கு சொந்தமானது இல்லை என்பதால் வட்டாட்சியர் ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், அச்சட்டத்தின் பிரிவு 7ன் படியான அறிவிப்பு ரத்து செய்யப் படுவதாகவும்” Srinivasan & Rukmani ammal –vs- Tashildhar, Egmore Nungambakkam Taluk – 2010 (1) LW 123 வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

  மேலும் N.S.Kuppuswamy Odayar and anr –vs- The Panchayat of Narthamgudi – 1971 (1) MLJ – 190 வழக்கில்  ‘நத்தம் புறம்போக்கு என்று ReSettlement Register ல் பதிவு செய்யப்பட்டுள்ளதால்  மட்டும் அது அரசாங்க சொத்தாகி விடாது என்றும், உரிமைமூல ஆவணம் நிலைக்கத்தக்கது என்றும் கூறப்பட்டுள்ளது.

  A.K.Thillaivanam and another –vs- The District Collector, Chengai Anna District at Kancheepuram and ors – 1998 (3) LW 603. வழக்கில் நத்தம் குடியிருப்பு நிலம் ஒருபோதும் அரசுடைமை ஆகாது என்றும், அங்கே அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, ஷை குடியிருப்பு நிலத்தை விவசாய நிலமாக மாற்றி பயன்படுத்தினாலும் கூட அப்போதும் அரசுக்கு உரிமை எழாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

  மேலும் ஊராட்சிகள் சட்டம் பிரிவு 134 யை வாசித்தாலும் ரயத்துவாரி புறம்போக்கு நிலம் மட்டுமே உள்ளாட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது மிகத் தெளிவாகும்.

ரூ 5லட்சத்திற்கும் மேலாகசொத்து கிரையம் கொடுப்பவர்கொடுப்பவர்களா நீங்கள் ?

 ரூ 5+லட்சத்திற்கும்  மேலாகசொத்து கிரையம் கொடுப்பவர்கள் , ரூ 5 ++லட்சம் என பத்திரத்தில்எழுதி வாங்குபவர்கள் வருமான வரி அலுவலகத்தின் 'INCOME TAX CLEARANCE CERTIFICATE'   சார் பதிவாளரிடம் பத்திரப் பதிவுக்கு முன் இணைப்பு ஆவணமாக வைக்க வேண்டுமா? இது கட்டாய முன் நிபந்தனையா? அரசு தணிக்கையில்- >>INCOME TAX ஆவணம் attach  செய்யாவிட்டால் பிரச்சனை எதிர்காலத்தில் எழுமா? தங்களின் மதிப்புமிக்க  ஆலோசனை தேவை.

தேவையில்லை. PAN no கொடுத்தால் போதும். பணத்திற்கு  முறையான கணக்கு வைத்துக்கொள்ளவும்.

Income tax அலுவலகத்தின் RANDOM CHECKING ல் 5 + லட்சத்திற்கும் சொத்து வாங்கியவர் பெயர் சிக்குமானால்- எந்த வருமான வரி பாக்கி இல்லை என்றும் ஒழுங்காக வருமான வரி செலுத்தி வருகிறோம் என்பதற்கான 'INCOME TAX CLEARANCE CERTIFICATE ' என்ற சான்றிதழ்  5+ லட்ச்சத்திற்கும் மேலான கிரைய பத்திரப் பதிவில் இணைப்பு  வைக்கவில்லை என்றால்- பின் நாட்களில் சொத்து எப்படி எந்த கணக்கில் வாங்கப்பட்டது வங்கிக் கணக்குகள் பட்டியல் , கறுப்பு பணம் கைமாறியதா என பல பிரச்சனை வரும் என்கிறார்களே,                Income tax clearance certificate ஒப்படைத்தல்   &  விதிவிலக்கு >> பதிவுத்துறை  சுற்றறிக்கை எதுவும் வந்துள்ளதா?  கூடுதல் தகவல் இருந்தால் கூறவும்

மாவட்ட ஆட்சியரின் பொறுப்புகளும் கடமைகளும்

இந்தியாவில் மாநில அரசுகளின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தலைமை அலுவலராக மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட ஆட்சியர் (District collector) செயல்படுகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய அரசால் ஒவ்வொரு மாநில பணித்தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து, அந்தந்த மாநில அரசால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்படுகின்றனர். 
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் கவனிப்பதற்காக இவருக்கு மாவட்ட நீதித்துறை நடுவர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன் படி "ஊராட்சிகளின்  ஆய்வாளராக" இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியரின் பொறுப்புகளும் கடமைகளும் பின்வருமாறு :-
ஒரு மாவட்டத்தின் ஆட்சியரே அந்த மாவட்டத்தின் "ஊராட்சிகளின் ஆய்வாளர்"ஆக இருக்கிறார்.
மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளான 
1.கிராம ஊராட்சி 
2.ஒன்றிய ஊராட்சி 
3.மாவட்ட ஊராட்சி ஆகியவை தமிழ்நாடு ஊராட்சி சட்டத்திற்கு உட்பட்டு இயங்குவதை உறுதிப்படுத்த கீழ்க்கண்ட முக்கிய நடவடிக்கைகளை ஊராட்சிகளின் ஆய்வாளராக இருக்கக் கூடிய மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
1.மத்திய,மாநில அரசுகளின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் உறுதிப்படுத்துதல் அதற்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுதல்.
2.மக்களுக்கு கிராமசபை கூட்டங்கள்கான அறிவிப்புகள் உரிய காலத்தில் கொடுக்கப்படுவதையும் கிராம சபையில் மக்கள் இயற்றிய தீர்மானங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் கண்காணித்தல் மேலும் கிராம சபை கூட்டத்திற்கான சட்ட விதிமுறைகள் அனைத்தும் முறையாக தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறதா  என்பதனை உறுதிப்படுத்துதல்.
3.ஒரு நிதியாண்டில் ஊராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட சிறியது முதல் பெரியது வரையிலான அனைத்து பணிகளையும் விவரிக்கும் அறிக்கையான "நிர்வாக அறிக்கைகள்"ஆண்டுதோறும் முறையாக சமர்ப்பிக்கப்படுவதை  உறுதிசெய்தல்.
4.வரும் நிதியாண்டிற்க்கான நிதிநிலை அறிக்கைகளை கிராம ஊராட்சி உட்பட மூன்று அடுக்கு ஊராட்சிகள் அனைத்தும் தாக்கல் செய்வதை உறுதிப்படுத்துதல்.
5.ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகமும் தங்கள் பகுதியில் வளர்ச்சிக்காக திட்டமிடும்"வளர்ச்சி திட்டங்கள்" உரிய காலத்தில் தயாரிக்கப்படுவதையும் அத்திட்ட பணிகள் முறையாக நடைமுறைப் படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்துதல்.
6.மாதாந்திர மன்ற கூட்டங்கள் தொடர்ந்து முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்துதல்.
7.ஊராட்சி நிர்வாக பணிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்ட பணிகள் ஆகியவை முறையாக நடைபெறுகின்றன என மக்களே நேரடியாக ஆய்வு செய்யும் முறையான "சமூகத்தணிக்கை"ஊராட்சி மூலம் முறையாக நடைபெறுகின்றனவா என கண்காணித்தல்.
8.ஊராட்சி நிர்வாக பணிகளை அரசு ஆய்வு செய்யும் போது அதாவது தணிக்கை செய்யும் போது கண்டுபிடிக்கப்படும் 
பணி குறைபாடுகள்,தணிக்கைத் தடைகளாக பதிவு செய்யப்படும் தடைகளை உரிய காலத்தில் நிவர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல்.
9.ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் அரசு துறைகளான கிராம நிர்வாக அலுவலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் நூலகங்கள்,கூட்டுறவு சங்கங்கள் ரேஷன் கடை ஆகியவை இணைந்து பணியாற்றுவது உறுதிப்படுத்துதல்.
10.ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தல்.
2. வட்டாட்சியர் :-
************
தமிழக மாவட்டங்களில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. 
இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. 
இந்த வருவாய் வட்டத்தின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் இருக்கிறார். வட்டாட்சியர்களை தாசில்தார் என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.
வட்டாட்சியர் பணிகள் :-
1. தமிழ்நாடு அரசின் வருவாய் துறை  வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும் நிர்ணயம் செய்துள்ளது. அவைகள் :-
2. மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் வழியாக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத்  தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
3. கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்  போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் வ்ட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.

4. வட்டாட்சி அமைப்புக்குள் மக்களிடையே பிரச்சனைகள் ஏதும் வந்து சட்டம் , ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு வாய்ப்பாக இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
5. வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் போன்றவர்களுக்கு வருவாய்த்துறைப் பணிகளில் உதவுகிறார்.
3. துணை வட்டாட்சியர் :-
*********************
ஒரு மாவட்டத்தின் வருவாய் வட்டத்தின் துணை வருவாய் வட்டங்களை  நிர்வகிக்க மண்டல துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியரின் கீழ் செயல்படுபவர். மண்டல துணை வட்டாட்சியரின் கீழ் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுவர்.
மண்டல துணை வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும் :-
1. வருவாய் ஆய்வாளர்கள், நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களுடைய பணிகள் மற்றும் பணி அமைப்பினை மேற்பார்வையிடுதல்.
2. வருவாய் வரி வசூல், கடன்கள் வசூல் மற்றும் இதர துறைகளுக்கும் வசூலித்துத்தர தக்க இனங்கள் ஆகியவற்றின் வசூல் பணிகளை ஆய்வு செய்தல்.
3. கிராமக் கணக்குகளை தணிக்கையிடுதல்.
4. “ஏ” மற்றும் “பி” மெமோ இனங்களை தணிக்கையிட்டு வெளியேற்று நடவடிக்கைக்கான ஆணைகளை பிறப்பித்தல்.
5. அரசு புறம்போக்கு இடங்களிலுள்ள மரங்களை தணிக்கை செய்தல் மற்றும் அவற்றில் மகசூலை ஏலம்விட நடவடிக்கை எடுத்தல்.
6. முதியோர் உதவித்தொகை மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாறிகளின் விவரம் சரிபார்த்தல்.
பட்டா பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.
பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்.
7. மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
8. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக மணல், கல்போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.
9. வரி வசூல்காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.
10. வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.
11. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கை செய்தல்.
12. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நிலக்குத்தகை நிலமாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தல் மற்றும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தல்.
13. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.
14. அரசு நில ஆக்கிரமிப்புகளை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவர் என்பதை சரிபார்த்தல்.
15. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி, வரி தள்ளுபடி இனங்கள் மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புக்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.
16. வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று வழங்குதல்.
வருவாய்த் துறை சான்றிதழ்களின் நகல்கள் கேட்டுவரும் மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல்.
17. சாதிச் சான்று வழங்குதல் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் தவிர).
18. நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறுகளை திருத்தி ஆணைகள் வெளியிட ஆவன செய்தல்.
19. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்கள் குறித்த ஆணைகள் பிறப்பித்தல்.
மழைமானிகள் தணிக்கையிடுதல்.
நில அளவை கற்களை தணிக்கை செய்தல்.
20. அரசு புறம்போக்கு நிலங்களை தணிக்கையிட்டு ஆட்சேபனையுள்ள ஆக்கிரமணங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தல்.
21. வருவாய் ஆய்வாளர்களின் தன் பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.
22. வருவாய் ஆய்வாளரின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.
4. வருவாய் ஆய்வாளர் :-
**********************
தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அதிகாரி  வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கும் அனைத்து வகையான சான்றிதழ்களுக்கான பரிந்துரைகள் குறித்து மேல் விசாரணை செய்து வட்டாட்சியருக்குக் கூடுதல் பரிந்துரை செய்யும் அதிகாரியாக வருவாய் ஆய்வாளர் இருக்கிறார்.
வருவாய் ஆய்வாளரின் கடமைகளும் பொறுப்புகளும் :-
1. பயிராய்வு
2. கிராம நிர்வாக அலுவலர்கள்  மற்றும் கிராமப் பணியாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல்.
3. நிலவரி வசூல், கடன்வசூல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
4. கிராம கணக்குகளைத் தணிக்கை செய்தல்.
5. “ஏ” மற்றும் “பி” மெமொ இனங்களைத் தணிக்கை செய்தல்.

6. புறம்போக்கு இடங்களில் உள்ள மரங்களை தணிக்கை செய்தல்.
7. ஆட்சேபணையுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டுபிடித்து அவற்றை அகற்றுதல்.
8. இயற்கை இடர்பாடுகளின் போது பாதிக்கப்படுவோருக்கு உணவு வழங்கிட உடனடி ஏற்பாடு செய்வதுடன், நிவாரணம் வழங்கிட ஆவண செய்தல்.
9. முதியோர் உதவித்தொகை பெறுவோர் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரம் சரிபார்த்தல்.
10. பட்டா, பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.
பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்.
11. மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
12. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக மணல், கல் போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.
13. வரி வசூல் காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.
14. வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.
15. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்களை சரிபார்த்தல்.
16. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கையிடல்.
17. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நலக்குத்தகை, நல மாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தலும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தலும்.
18. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.
19. நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவா என்பதை சரிபார்த்தல்.
20. பட்டா நிலங்களில் அனுபவம் குறித்து சரிபார்த்தல்.
21. வனக் குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.
22. முக்கிய பிரமுகர்கள் வருகை தொடர்பான பணிகளைக் கவனித்தல்.
23. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி வரி தள்ளுபடி இனங்களை, மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புகள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.
24. கிராம கல் டிப்போக்களை தணிக்கை செய்தல்.
25. புல எல்லைக்கற்களை சரிபார்த்தல்.
பிற பணிகள் :-
26. பொது இடங்களில் உள்ள மரங்களின் மதிப்பு நிர்ணயம் செய்தல்
நில ஒப்படை குத்தகை மற்றும் நில மாற்றம் சம்பந்தமாக புலத்தணிக்கை செய்தல்.
27. கால்நடைப் பட்டிகளைப் பார்வையிடல் மற்றும் அது தொடர்பான கணக்குகளை சரிபார்த்தல்.
28. வருவாய் வசூல் சட்டம் மற்றும் பிறவகை ஜப்தி நடவடிக்கைகள்.
சிறுபாசனத் திட்டங்களை பார்வையிடுதல்.
29. தல விசாரணை கோரி வரும் பல்வகை மனுக்களின் பேரில் விசாரணை மேற்கொள்ளுதல்.
30. மாதாந்திர சாகுபடி கணக்குகளை தயார் செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.
31. கிராம மக்களின் சுகாதார நிலை, கால்நடைகளின் சுகாதார நிலை, குடிநீர் விநியோகம், மழையளவு, பயிர்நிலைமை ஆகியவை குறித்து அறிக்கை அனுப்புதல்.
32. கிராமச் சாவடிகளை பார்வையிடல் மற்றும் அவைகளின நிலை குறித்து அறிக்கை அனுப்புதல்.
33. பல்வேறு சான்றுகள் வழங்கும் பொருட்டு அறிக்கை அனுப்புதல்.
34. மக்கள் தொகை கணக்கெடுப்பு, கால்நடைகள் கணக்கெடுப்பு பாசன ஆதாரங்கள் கணக்கெடுப்பு முதலிய பணிகளை மேற்பார்வை செய்தல்.
35. வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல்கள் தொடர்பான பணிகள்.
5. கிராம நிர்வாக அலுவலர் :-
***************************
தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது. 
இவ்வமைப்பு, ஒரு வட்டத்தின் வட்டாட்சியர் தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. 
மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிர்வாக அமைப்பாக உள்ளது. 
இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி இயங்குகின்ற வருவாய் கிராம நிர்வாக  அமைப்பின் பொறுப்பு அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார். 
இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் இருக்கிறார்.
இவருக்குக் கீழாக கிராம உதவியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் :-
1. கிராம கணக்குகளைப்  பராமரித்தல், மற்றும் பயிர் ஆய்வு பணி பார்த்தல்
சர்வே கற்களைப் பராமரிப்பது, காணாமல் போன கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புவது.
2. நில வரி , கடன்கள் , அபிவிருத்தி வரி, மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூல்செய்வது.
3. பிறப்பு, இறப்புகளை பதிவு செய்து , சான்று வழங்குவது, அது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது.
4. தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டிருப்பது.
5. கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல்.

6. காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள், தொற்று நோய்கள் குறித்து அறிக்கை அனுப்புதல்.
7. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது.
8. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
9. அரசுக் கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
10. புதையல் பற்றி உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தல்.
11. முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பது.
12. முதியோர் ஓய்வூதிய பதிவேட்டைப் பராமரித்தல்.
13. பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டைப் பராமரித்தல்.
14. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்கள் அளித்தல்.
15. கிராம பணியாளர்களுடைய பணியினைக் கண்காணித்தல்.
16. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல், சட்டம் ஒழுங்கு பேணுதற்காக கிராம அளவில் அமைதிக் குழுவைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்.
17. தேர்தல் பணிகள் மேற்கொள்வது.
கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரித்து வட்ட அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்புதல்.
18. பொதுச் சுகாதாரம் பராமரித்தல்.
நில ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது மற்றும் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி உடனடி நடவடிக்கை எடுத்தல்.
19. கிராமத்தில் நிகழும் சமூக விரோத செயல்கள் குறித்து அறிக்கை அனுப்பதல்.
20. வருவாய்த் துறை அலுவலர்களூக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் உரிய அறிக்கை அளித்தல்.
21. குற்றவாளிகளின் நடமாட்டத்தையும், சந்தேகத்திற்கிடமான அன்னியர்கள் வருகையையும் தெரிவித்தல்.
22. கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்.
23. அரசு அவ்வப்போது தொடங்கும் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
24. மனுநீதி நாள் நிகழ்ச்சி நடத்த உரிய பணிகள் செய்தல்.
25. பாசன ஆதாரங்களைக் கண்காணித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் தடுப்பது அவற்றை முறையாகப் பராமரிப்பது.
26. கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் எடுத்து ஒரு பதிவேடு பராமரித்தல்.
27. பதிவு மாற்றம் [Transfer Registry] அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பராமரித்தல்.
28. நிலப் பதிவேடுகளை கணிணி மயமாக்குதலுக்கான பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது.
29. கிராம அளவில் கடன் பதிவேடு மற்றும் இதர வசூல் கணக்குகளைப் பராமரித்தல்.
30. கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அறிக்கை அனுப்புதல்.
31. பொது இடங்களில் வருடத்திற்கு ஐம்பது பயன் தரும் மரங்களை நடுவது.
32. ஒவ்வொரு பசலி ஆண்டின் முடிவிலும் கிராமத்தின் வருவாய் நிலவரி கேட்புத் தொகையை வசூல் செய்து வருவாய் தீர்வாயத்தில் இறுதித் தணிக்கையை முடிப்பது மிக மிக முக்கிய பணியாகும்.

இறந்த ஒருவரின் சொத்து அடுத்து யாருக்கு...?


வாரிசுரிமை வழக்கின் தீர்ப்பு...! *1994-5-SCC-761,1999-2-LW-520*
தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற ஒரு இந்துப் பெண்ணிற்கு குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்து, அந்த பெண் இறந்துவிட்ட நிலையில், அந்த சொத்துக்களை பெறுவதற்கு இந்து வாரிசுரிமை சட்டப்படி கணவருக்கு உரிமை உள்ளதா...? 
அல்லது அந்த சொத்துக்கள் அந்த பெண்ணின் தந்தை வழி வாரிசுகளுக்கு சென்றடைய வேண்டுமா...? 
இந்துப் பெண்ணின் வாரிசு பற்றிய பொதுவிதிகள் குறித்து இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 15 ல் கூறப்பட்டுள்ளது. 
பிரிவு 15(1)ன்படி உயில் எழுதாமல் இறந்து போன இந்துப் பெண் ஒருவரின் சொத்தை, பிரிவு 16 ன் குறிப்பிட்டபடி கீழ்க்கண்ட வாரிசுகள் அடைவார்கள். 
1. முதலாவதாக இறந்த பெண்ணின் மகன்கள் மற்றும் மகள்கள் (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உட்பட) கணவனும் அடைவார்கள். 
2. இரண்டாவதாக கணவனின் வாரிசுகள் அடைவார்கள்.
3. மூன்றாவதாக தாயும், தந்தையும் அடைவார்கள்.
4. நான்காவதாக தந்தையின் வாரிசுகள் அடைவார்கள்.
5. கடைசியாக தாயின் வாரிசுகள் அடைவார்கள்.
பிரிவு 15(2)ன்படி பிரிவு 15(1) ல் என்ன கூறியிருந்தபோதிலும், 
இந்துப் பெண் ஒருவர் தன்னுடைய தந்தை அல்லது தாயின் வாரிசு என்ற முறையில் அடைந்த சொத்துக்களை, அவளுக்கு மகனோ அல்லது மகளோ (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உள்ளடங்கலாக) இல்லாதபோது, உட்பிரிவு 15(1)ல் குறிப்பிட்டுள்ள மற்ற வாரிசுகளுக்கு பொருந்தாது. 
ஆனால் தந்தையின் வாரிசுகளுக்கு பொருந்தும்.
அதேபோல் இந்துப் பெண் ஒருவர் தன்னுடைய கணவன் அல்லது மாமனாரின் வாரிசு என்ற முறையில் அடைந்த சொத்துக்களை, அவளுக்கு மகனோ அல்லது மகளோ (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உள்ளடங்கலாக) இல்லாதபோது, உட்பிரிவு 15(1)ல் கூறப்பட்டுள்ள வாரிசுகள் அடைய மாட்டார்கள். அவளது கணவனின் வாரிசுகள் அடைவார்கள். 
அதேபோல் ஒரு இந்துப் பெண்ணிற்குள்ள வாரிசுகளுக்கிடையே சொத்துக்கள் எப்படி பிரிக்கப்பட வேண்டும் என்று பிரிவு 16 கூறுகிறது. 
மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை தெளிவாக படித்துப் பார்த்தால், இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 15(2) யை, பிரிவு 16 எந்த வகையிலும் கட்டுப்படுத்துவதில்லை. பிரிவுகள் 15(1) மற்றும் 15(2) ஆகியவற்றை படித்து பார்க்கும் பொழுது பிரிவு 15(2) ஒரு விதிவிலக்கான சட்டப் பிரிவாக அமைந்துள்ளது தெரிய வரும். 
தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்றிருக்கும் ஒரு இந்துப் பெண் இறந்துவிடும் நிலையில், அந்த சொத்துக்களை எவ்வாறு பிரித்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு மாறுபட்ட நடைமுறை பிரிவு 15(2) ல் கூறப்பட்டுள்ளது. 
வாரிசுரிமை அடிப்படையில் 
தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற ஒரு இந்துப் பெண்ணிற்கு குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்தால், அந்த பெண் இறந்ததற்கு பின்னர், அந்த பெண்ணின் தந்தையுடைய வாரிசுகளுக்கு தான் அந்த சொத்துக்கள் சென்றடையும். மாறாக அந்த சொத்து இறந்து போன பெண்ணின் கணவருக்கு சென்றடையாது. 
இது குறித்து உச்சநீதிமன்றம் “இராதிகா Vs அக்னுராம் மாத்தோ (1994-5-SCC-761) மற்றும் பகவத் ராம் Vs தேஜ் சிங் (1999-2-LW-520)” ஆகிய வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது. 
எனவே ஒரு இந்துப் பெண் தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற அனுபவித்து வரும் நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லாமல் இறந்து போனால் மேற்படி சொத்துகள் இந்து வாரிசுரிமை சட்டப்படி அந்த இறந்து போன பெண்ணின் தந்தை வழி வாரிசுகளுக்கு தான் சென்றடையும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

சார்பதிவாளர் அலுவலகத்தில் எப்படி ஒரு உரிமை மாற்று ஆவணங்களை பதிவு செய்கிறோமோ அதேபோல் நீதிமன்றங்கள் வழங்கும் இறுதி உத்தரவு மற்றும் தீர்ப்பாணைகளையும் பதிவு செய்யலாம்.
நீதிமன்றத்தில் நடந்து முடிந்துள்ள பாகப்பிரிவினை வழக்கு தீர்ப்புகளை பதிவு செய்து கொண்டால், ஒரு பாகப்பிரிவினை பத்திரத்திற்கு என்ன மதிப்போ அதே மதிப்பு இதற்கும் உண்டு. அதைபோல் எந்த தீர்ப்பையும் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கென்று காலவரம்பு பதிவுச் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லட்சுமி என்பவர் சேலம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் முழு விசாரணைக்கு பின்னர் லட்சுமிக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டது. பின்னர் லட்சுமி அந்த தீர்ப்பை பதிவு செய்ய கோரி வாழப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். ஆனால் சார்பதிவாளர் தீர்ப்பு கூறி நான்கு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். தாமதமாக பதிவுக்கு வந்தால் ஏற்க முடியாது என்று கூறி தீர்ப்பை பதிவு செய்ய மறுத்து விட்டார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் லட்சுமி ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த நீதிபதி...
பதிவுச் சட்டம் பிரிவு 23 ஆனது ஆவணங்களை தாக்கல் செய்வதற்கான கால அளவு பற்றி கூறுகிறது. மேலும் பதிவுச் சட்டம் பிரிவுகள் 24, 25, 26 ஆகியவைகளுக்கு உட்பட்டு உயில் தவிர மற்ற ஆவணங்களை பதிவு செய்யும் நோக்கத்துடன் அவை எழுதி கையொப்பமிட்ட நான்கு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பதிவுக்கு ஏற்கக்கூடாது என்றும் இந்த பிரிவு கூறுகிறது.
அதேபோல் பிரிவு 25 ஆனது தவிர்க்க முடியாத தாமதம் ஏற்பட்டது என்றால் அபராதத்துடன் பதிவு செய்யலாம் என்று கூறுகிறது.
இந்த இரண்டு பிரிவையும் கவனமாக படித்து பார்த்தால் பிரிவு 23 ஆனது கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்ற தன்மை கொண்டதாக இல்லை. ஒரு வழிவகையாக தான் இந்த பிரிவு உள்ளது. ஆவணங்களை பதிவு செய்வதில் தவிர்க்க முடியாத கால தாமதம் ஏற்பட்டால் அதை மன்னிப்பதற்கான அதிகாரம் பதிவாளருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் லட்சுமிக்கு தீர்ப்பு நகல் 14.06.2012 ஆம் தேதிதான் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அவர் 6.9.2012 ஆம் தேதி பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆனால் சார்பதிவாளர் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியே கவனத்தில் கொண்டு தவறான புரிதல் காரணமாக பதிவுக்கு மறுத்துள்ளார்.
ஆகையால் சார்பதிவாளரின் உத்தரவை ரத்து செய்வதாக கூறி உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றம்
W. P. No - 18805/2013
Dt - 28.11.2016
லட்சுமி Vs சார்பதிவாளர், வாழப்பாடி, சேலம்
2017-1-LW-721

உயில் விளம்புகை (Will Probate) செய்வது எப்படி?

மீண்டும் உயில் தொடர்பாக.. பல விஷயங்கள் ஏற்கனவே இங்கு பகிறப்பட்டதுதான்.. 

ஒருவர், தன் வாழ்நாளுக்குப் பின்னர், அவரின் சொத்துக்களை, உயில் மூலம், அவர் விரும்பும் நபருக்கு கொடுக்கலாம்! அப்படி எந்த உயிலும் எழுதி வைக்காமல் அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்து விட்டால், அவரின் சட்ட பூர்வ வாரிசுகளுக்குச் சென்று விடும்; உயில் எழுதி வைத்தால், அவர் விரும்பியவருக்கு கொடுத்து விடலாம்; உயில் எழுதாமல் இறந்தால், சட்டபூர்வ வாரிசுகளை அடையும்;
இந்து மதத்தைச் சார்ந்த ஒரு ஆண், அவரின் சொத்தை உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அவரின் வாரிசுகளான, அவரின் தாயார் (அப்போது உயிருடன் இருந்தால்), மனைவி, மகன்கள், மகள்கள் இவர்களுக்கு மட்டும் போய்ச் சேரும்; இவர்கள் அனைவருமே முதல்கட்ட வாரிசுகள் ஆவார்கள்; இறந்தவரின் தந்தைக்குப் போகாது; அவர் இரண்டாம் கட்ட வாரிசாக வருகிறார்; முதல் கட்ட வாரிசுகள் யாரும் இல்லை என்றால் மட்டுமே, இரண்டாம் கட்ட வாரிசாக, தந்தை, அவரின் இறந்த மகனின் சொத்து முழுவதையும் அடைவார்; முதல் கட்ட வாரிசுகள் யார் யார் அப்போது உயிருடன் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தலைக்கு ஒரு பங்குவீதம் சொத்தை அடைவார்கள்;
இந்து மதத்தைச் சார்ந்த பெண் ஒருவர், தன் சொத்தை விட்டுவிட்டு, உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அந்தச் சொத்து, அவரின் கணவர், மகன்கள், மகள்கள் அடைவார்கள்; இந்துமதப் பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை என்றால், அந்தப் பெண்ணின் சொத்து வேறு மாதிரி வாரிசுகளை அடையும்; அதாவது, (1)அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லாமல் இறந்து விட்டால், இறந்த பெண்ணின் சொத்து சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால், அவளின் கணவருக்குப் போய்ச் சேரும்; கணவரும் இல்லையென்றால், கணவரின் வாரிசுகளுக்குப் போய் சேர்ந்துவிடும்; (2)இறந்த பெண்ணுக்கு, குழந்தையும் இல்லாமல், இருந்தால், அவளின் சொத்து, தன் பெற்றோரிடமிருந்து கிடைத்த சொத்தாக இருந்தால், அந்த சொத்து, திரும்பவும் அவளின் தந்தைக்கே போய்ச் சேர்ந்துவிடும்; (3) இறந்த பெண்ணின் சொத்து, கணவரின் தகப்பனாரான மாமனாரிடமிருந்து கிடைத்து இருந்தால், அது அவளின் மாமனாருக்கே போய்ச் சேர்ந்து விடும்; இப்படியாக, குழந்தை இல்லாமல் இறந்த இந்து பெண்ணின் சொத்து மூன்று வகைகளில் அந்தந்த வாரிசுகளை அடையும்;
உயில் எழுதி வைக்காத சொத்துக்கள், அந்தந்த மதச் சட்டப்படி இறந்தவரின் வாரிசைச் சென்று அடையும்; இந்துவுக்கு “இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956” உள்ளது; (இது 2005-ல் திருத்தம் செய்யப் பட்டது); அதுபோலவே, கிறிஸ்தவருக்கு வேறு ஒரு வாரிசு சட்டம் உள்ளது; அதன் பெயர் “இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925”; இதுபோலவே முகமதியர்களுக்கும் (முஸ்லீம்களுக்கும்) ஒரு வாரிசுரிமைச் சட்டம் உள்ளது; அதன் பெயர் “ஷரியத் சட்டம் 1937”;
கிறிஸ்தவர்களுக்கு உள்ள வாரிசுரிமைச்  சட்டமான, இந்திய வாரிசுரிமை சட்டம் 1925-த்தின் படி, கிறிஸ்தவ ஆணோ, பெண்ணோ, உயில் எழுதாமல், சொத்தை விட்டு விட்டு இறந்து விட்டால், அவரின் சொத்து அவரின் கணவர் அல்லது மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கும், அவரின் பிள்ளைகளுக்கு (மகன்கள், மகள்கள்) மீதியுள்ள மூன்றில் இரண்டு பங்கும் போய்ச் சேரும்; குழந்தைகள் இல்லையென்றால், அடுத்தடுத்த வாரிசுகளை போய் சேரும்;
முகமதியர்கள் வாரிசுரிமைச் சட்டமான ஷரியத் சட்டம் 1937-ன்படி, முகமதியர் ஒருவர், இறந்து விட்டால்,  அவரின் மகன்களுக்கு தலைக்கு இரண்டு பங்கும், அவரின் மகள்களுக்கு தலைக்கு ஒருபங்கும், இறந்தவரின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கிடைக்கும்; இதுபோக, மீதியுள்ள பங்குகள் மற்ற பங்காளிகளுக்குக் கிடைக்கும்; சற்று குழப்பமாக இருந்தாலும், அதற்கென்று அந்த சட்டத்தில் சில கணக்குகள் கொடுத்துள்ளனர்;
இந்து மதத்தில் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; கிறிஸ்தவ மதத்திலும் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; ஆனால் முகமதிய சட்டத்தில் உயில் எழுத முடியாது; ஏனென்றால், முகமதியர்களின் புனித  நூலான குரானின் வாக்குப்படி, ஒருவரின் வாரிசுகளுக்கு சொத்தில் பங்கு இல்லாமல் செய்யும்படி உயில் எழுத முடியாது என்று சொல்லப் பட்டுள்ளது; ஆனாலும், சொத்தை வைத்திருப்பவர், அந்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு சொத்துக்கு உயில் எழுதி வைக்கலாம் என்று சலுகை கொடுக்கப் பட்டுள்ளது; அந்த உயிலை எழுத வேண்டுமானால், அவரின் வாரிசுகள் சம்மதம் கொடுத்திருக்க வேண்டும் என்று கன்டிஷனும் போடப் பட்டுள்ளது; எனவேதான், முகமதியர் உயில் எழுத முடியாது என்று பொதுவாகச் சொல்லி விடுவர்;
இந்து, கிறிஸ்தவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை; உயிலை எழுதி அவரின் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும், கொடுத்து விடலாம்; உயில் எப்போதும், அதை எழுதி வைத்தவரின் ஆயுட்காலத்துக்கு பின்னர்தான் அமலுக்கு வரும்; உயிலை எழுதியவர் உயிருடன் இருந்தால் அந்த உயில் நடைமுறைக்கு வரவே வராது; அவர் இறந்த பின்னர்தான் நடைமுறைக்கு வரும்;

ஒருவர் ஒரு உயிலைத்தான் எழுதி வைக்க முடியும்; அடுத்தடுத்து உயில் எழுதி வைத்தாலும், கடைசி உயில்தான் செல்லும்; மற்ற உயில்கள் செல்லாமல் போய்விடும்; ஆனாலும், சிலர், தன்னிடம் உள்ள பல சொத்துக்களை, வேறு வேறு உயில்கள் மூலம் எழுதி, தன் வேறு வேறு பிள்ளைகளுக்கு தனித்தனியே கொடுத்து விடும் வழக்கம் உள்ளது: இது தவறு என்று சொல்வதற்கு ஆட்கள் இல்லை;
உயில் என்றாலே, “அவரின் கடைசி ஆசை” என்றுதான் அதற்குப் பொருள்; உயில் என்பதற்கு ஆங்கிலத்தில் Will என்றே சொல்கின்றனர்; அப்படிப் பார்த்தாலும், அவரின் விருப்பம் என்றுதான் பொருள் வருகிறது; எனவே ஒரு மனிதனுக்கு  ஆசை என்பது கடைசி ஆசை மட்டுமே தன் கடைசி விருப்பமாக இருக்க முடியும்; எனவே ஒருவர் ஒரு உயில் மட்டும்தான் எழுதி நடைமுறைப் படுத்த முடியும்; ஏற்கனவே எழுதிய உயிலை மாற்றி எழுத வேண்டும் என்றால், அந்த உயிலை ரத்து செய்து விட்டு, வேறு ஒரு புதிய உயிலை எழுத வேண்டும்; அல்லது பழைய உயிலை திருத்தம் செய்து மட்டும் வைத்துக் கொள்ளலாம்; இப்படிப் பார்த்தால், ஒரு உயிருக்கு ஒரு உயில்தான் இருக்க முடியும் என்பதே உண்மை;
உயில் எழுதும்போது தனியே தனக்கு மட்டுமே உயில் எழுதிக் கொள்வதே சிறந்தது; கூட்டாக இரண்டு பேர் எழுதும் உயிலில் நிறைய சட்டசிக்கல்கள் வருகின்றன; கணவர் சொத்தை கணவரும், மனைவி சொத்தை மனைவியும் தனித்தனி உயில்கள் மூலம் எழுதிக் கொள்ளலாம்; அதைவிட்டு விட்டு, இருவரும் ஒரே உயிலில் எழுதுவார்கள்; அதில் எழுதும் வாசகங்கள் அந்த கூட்டு உயிலை நடைமுறைப் படுத்துவதில் சட்ட சிக்கலை உண்டாக்கிவிடும்;
இரண்டு பேர் சேர்ந்து கூட்டாக எழுதும் உயிலுக்கு ஜாயிண்ட் உயில் (Joint Will) என்று பெயர்; அதில், கணவர் முதலில் இறந்து விட்டால், கணவரின் சொத்து மனைவிக்குப் போய்ச் சேரும் என்றும், மனைவி முதலில் இறந்து விட்டால், மனைவியின் சொத்து கணவருக்கு போய்ச் சேரும் என்றும் எழுதுவார்கள்; இப்படிப்பட்ட உயிலை கூட்டு உயில் என்று சொன்னாலும், அது உண்மையில் மியூச்சுவல் உயில் (Mutual Will) என்னும் வகையைச் சேர்ந்ததாகும்;
கணவனும் மனைவியும் கூட்டாக வாங்கிய சொத்தை, கூட்டாக ஒரே உயில் எழுதி அந்த சொத்தை தன் வாரிசுகளில் யாருக்காவது கொடுப்பர்: இப்படிப்பட்ட உயிலில், கணவர் முதலில் இறந்தால், அந்த உயில் நடைமுறைக்கு வராது; மனைவி நினைத்தால் அந்த உயிலை ரத்து செய்து விடலாம் என்று சில சட்டத் தீர்ப்புகளும் உள்ளன என்பதால், அந்த குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு தெளிவாக உயிலை எழுதி வைக்க வேண்டும்;
உயில்களில் எக்சிகியூட்டார்கள் என்னும் நிறைவேற்றாளர்களை நியமித்து இருப்பர்: உயிலை எழுதியவர் இறந்த பின்னர், இந்த உயிலில் சொல்லப் பட்டுள்ள விஷயங்களை எப்படி பிரித்துக் கொடுப்பது என்று ஒரு பொதுவான நபரை அந்த உயிலிலேயே அதை எழுதி வைத்தவர் நியமித்து வைத்து விட்டு போய் இருப்பார்; அவரைத்தான் எக்சிகியூட்டர் (Executor) என்பர்; சொத்துக்காரர் இறந்த பின்னர், அவரின் உயில்படி, அந்த எக்சிகியூட்டர் வந்து, அவரின் சொத்துக்களை கணக்கெடுத்து, அந்த உயிலில் சொல்லி கடன்கள், உயில் எழுதியவரின் இறப்புச் செலவு, உயில் எழுதியவர் யாருக்காவது பணம் கொடுக்கச் சொல்லி இருந்தால் அதைக் கொடுப்பது, அவரின் சொத்துக்களை, அந்த உயிலில் சொல்லி உள்ளபடி பிரித்துக் கொடுப்பது போன்ற பல வேலைகளைச் செய்வார்; அவரே அந்த உயிலுக்கு அதிகாரி; இறந்தவரின் வாரிசுகள் அதில் தலையிட முடியாது;
ஒரு உயிலில் ஒரு எக்சிகியூட்டர் மட்டும் நியமித்திருப்பர்; பொதுவாக இது போதும்; ஆனால் செய்ய வேண்டிய வேலையைப் பொறுத்து இரண்டுக்கு மேற்பட்ட பல எக்சிகியூட்டர்களையும் நியமித்திருப்பார்; அது உயிலை எழுதி வைப்பவரின் விருப்பத்தையும், நம்பிக்கையையும் பொருத்தது: ஒரு எக்சிகியூட்டர் அந்த வேலையை செய்ய விரும்பம் இல்லாமல் இருந்தாலும், மறுத்து விட்டாலும், இறந்து விட்டாலும், மற்ற எக்சிகியூட்டர்கள் இருந்து அந்த வேலையைச் செய்வர்; கூட்டாகவும் செய்வர், தனித்தனியாகவும் செய்வர்; அதை அந்த உயிலில் தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும் அவ்வளவே!
எல்லா உயிலிலிலும் எக்சிகியூட்டர் நியமித்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; அது உயில் எழுதி வைப்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது; அப்படி எந்த எக்சிகியூட்டார்களும் நியமிக்கவில்லை என்றால், வாரிசுகளில் யாராவது ஒருவர் அந்த வேலையைச் செய்து கொள்ளலாம், தவறில்லை; எனவே உயிலில் இரண்டு வகை; ஒன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயில்; மற்றொன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்படாத உயில் அவ்வளவே; கோர்ட்டில் ஒரு உயிலை புரபேட் செய்ய மனுச் செய்யும் போது, எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயிலில், அவரே மனுச் செய்ய வேண்டும்; எக்சிகியூட்டர் நியமிக்கப்படாத உயிலில், இறந்தவரின் வாரிசுகளில் யாராவது மனுச் செய்ய வேண்டும்;

உயிலை எழுதி வைத்தால் மட்டும் போதாது; அதை சட்டபூர்வமாக ஏற்படுத்தி வைக்க வேண்டும்; உயிலை கையாலும் எழுதி வைக்கலாம்; தட்டச்சு, கம்யூட்டர் பிரிண்ட் மூலமும் ஏற்படுத்தலாம்; எப்படி இருந்தாலும், அது ஒரு பேப்பரில் இருந்தால் போதும்; அதற்கு முத்திரை தீர்வை என்னும் ஸ்டாம்ப் பேப்பர் தேவையே இல்லை! வெறும் வெள்ளைப் பேப்பரில் எழுதி வைக்கலாம்; அதில் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியமும் இல்லை; அதை ரிஜிஸ்டர் என்னும் பதிவும் செய்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை; ஆனாலும், அந்த உயிலைப் பதிவு செய்து வைத்தால் (ரிஜிஸ்டர் ஆபீஸூக்குச் சென்று அந்த உயில் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து வைத்தால்) நல்லது; பின்நாளில் அது மிகுந்த நம்பிக்கைக்கு உரிய பத்திரமாக இருக்கும்; யாரும் ஒரு போலி உயில் என்று குற்றம் சொல்லி விட முடியாது; அதற்காக அந்த உயிலை பதிவு செய்து வைப்பது நல்லது;
ஆனாலும், உயில் எழுதியவர், அந்த உயிலில் உள்ள எல்லாப் பேப்பரின் பக்கங்களிலிலும் அவரின் கையெழுத்தைச் செய்து வைக்க வேண்டும்; கடைசி பக்கத்தில் அவரின் கையெழுத்துக்குக் கீழே கண்டிப்பாக இரண்டு சாட்சிகளின் கையெழுத்தைப் பெற்று இருக்க வேண்டும்; ஒரு உயில் செல்லும் என்று சொல்வதற்கு மிக முக்கியமானதே இந்த இரண்டு சாட்சிகளின் கையெழுத்துத்தான்! உயிலுக்கு சாட்சிகளின் கையெழுத்து அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது; சிலர் வெகு அஜாக்கிரதையாக சாட்சிகள் கையெழுத்தை வாங்காமல் வைத்திருப்பர்; அப்படி இருந்தால், அந்த உயிலே செல்லாமல் போய்விடும்;
இந்த இரண்டு சாட்சிகளும், அந்த உயிலை எழுதியவர் போடும் அவரின் கையெழுத்தை நேரில் பார்த்தவர்களாக இருக்க வேண்டும்; ஒரே நேரத்தில் உயிலை எழுதியவரும், சாட்களும் அந்த உயிலில் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும்; இதை சட்டம் கட்டாயப் படுத்திகிறது; இரண்டு சாட்சிகளும் உயில் எழுதியவரின் கையெழுத்து போடுவதை நேரில் பார்க்கவில்லை என்றாலும், அதில் ஒரு சாட்சியாவது கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டும் என்றும், மற்றொரு சாட்சி, உயில் எழுதியவரின் கையெழுத்தை அறிந்திருக்க வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது; இப்படி இருக்கும்போது, பொதுவாக இரண்டு சாட்சிகளுமே நேரில் பார்த்த சாட்சிகளாக இருப்பது மிக நல்லது;
எனென்றால், உயிலை எழுதியவர் இறந்தபின்னர், இந்த சாட்சிகள் இருவர்தான் அந்த உயிலை உண்மையாக எழுதிய உயில் என்று நிரூபிக்க இருக்கும் சாட்சிகள் ஆகும்; வேறு யாருக்கும் தெரியாது, அந்த உயிலை, அதை எழுதியவர்தான் எழுதி வைத்தாரா என்பது; எனவேதான் உயிலுக்கு சாட்சிகள் முக்கியம், முக்கியம் என்று சட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது;
அப்படிப்பட்ட சாட்சிகள் எப்படி இருக்க வேண்டும்? நியாயமானவராக இருக்க வேண்டும்; குழப்பவாதியாக இருக்க கூடாது: எதிரியின் பக்கம் சாய்ந்து, பிறழ்ந்து சாட்சி சொல்பவராக இருக்க கூடாது; என்ன நடந்தது என்பதை உண்மையாகச் சொல்பவராக இருக்க வேண்டும்; அப்படியென்றால், சாட்சிகள், பொதுவானவராக இருப்பதுதானே நல்லது!
மேலும், சாட்சிகள் இருவரும் நிரந்தர விலாசத்தில் வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும்; சாட்சி போட்டவுடன் கண்காணாத இடத்துக்கு போய் சேருபவராக இருந்து விடக் கூடாது; வெளிநாட்டுக்கு ஓடிப் போய்விடுபவராக இருந்து விடக் கூடாது;
மேலும், குறிப்பாக வயதானவராக இருக்கக் கூடாது; உயிலை எழுதியவர் இறப்பதற்கு முன்னரே, அதில் கையெழுத்துப் போட்ட சாட்சி இறந்து விட்டால், யாரை வைத்து அந்த உயிலை நிரூபிப்பது? சிக்கல் வந்துவிடும் அல்லவா? அல்லது உயிலை நிரூபிப்பதற்கு முன்னரே சாட்சி இறந்தாலும் கஷ்டமே! எனவேதான், குறிப்பாக உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், இளையவராகவே இருக்க வேண்டும்; (ஒவ்வொருவரின் ஆயுளின் விதி என்பது வேறு!); முடிந்தவரை சிறு வயதினராக இருப்பது நல்லது;
மேலும், சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்கள், அந்த உயிலின்படி பலனை (சொத்தை) அடைபவராக கண்டிப்பாக இருக்கக் கூடாது; அப்படி, அந்த உயிலில் பங்கு வாங்குபவரே சாட்சியாகவும் இருந்தால், அந்த உயிலும் செல்லாது ஆகிவிடும்; எனவே இதில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்;
மேலும், உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், நெருங்கிய உறவினராக இருந்தால் வேறு ஒரு சிக்கல் வரும்; உதாரணமாக, உயிலில் ஒரு மகளுக்குச் சொத்தை கொடுத்திருப்பார்; அதில் சாட்சி போட்டவர், ஒரு மகனாக இருப்பார்; முதலில் அப்பாவுக்காக அரை மனதுடன் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருப்பார்; அப்பா இறந்தவுடன், அந்த சொத்தில் மகனுக்கும் ஆசை வந்துவிடும்; அப்போது, சொத்தைப் பெறும் மகள், அந்த சாட்சி போட்ட மகனின் சாட்சியத்தை (வாக்குமூலத்தை) பெற வேண்டும்; அப்போது அந்த மகன் உதவுவதற்கு வர மாட்டார்; சாக்குப்போக்கு சொல்வார்; தேவையில்லாமல் திருடன் கையில் சாவி கொடுத்ததைப் போல ஆகிவிடும்; எனவே நெருக்கமான, அல்லது பின்நாளில் வில்லத்தனத்துடன் நடந்து கொள்ளும் நபரின் சாட்சியை இப்போதே பெறாமல் இருப்பது நல்லது!

நில அளவைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது  மனையையோ அளக்க  முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புர...