Friday, November 27, 2020

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரும் மனு


அரசாணை எண் : 540-ன் கீழ் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரும் மனு.

அனுப்புனர் :-

                            XXXXXXXXXX
                                                                              
           
       
பெறுநர் :-

                            XXXXXXXXXX
            
         
        

பொருள் :-

                     அரசுக்குச் சொந்தமான வருவாய்த்துறை அரசாணை எண் : 540 -ன் படி  அகற்றி பொதுமக்கள் பயன் பெற செய்ய கோருதல்

பார்வை :
                அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து அவற்றை அகற்றவும் கீழ்க்காணும் சட்டங்களின் வழிவகை செய்யப்பட்டுள்ளன.                                    

1.தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 

2.தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 

3.தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சட்டம் 1958

4.தமிழ்நாடு பொது கட்டிடம் (அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு) சட்டம் 1975 

5.தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994

6.தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் சட்டம் 2001

7.தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டம் 2007

8.அரசாணை (நிலை) எண் 41 வருவாய் துறை நாள்: 20.01.1987 

9.அரசாணை (நிலை) எண் 186 வருவாய் துறை நாள்: 29.04.2003

10.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப்பேராணை என் 20186-2000 ல் வெளியிட்ட தீர்ப்பின்படியும்,

11.மாண்புமிகு உச்ச நீதிமன்ற சிறப்பு விடுப்பு மனு எண் 3109-2011 மற்றும் சிவில் மேல்முறையீட்டு எண் 1132-2011ஆகியவற்றின் மீது வழங்கப்பட்ட உத்தரவுகளின்படியும்,

12.மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 26722-2013 மற்றும் பலவகை மனு எண் 1-2013 ன் மீது 11.08.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்புரையின் படியும்,

13.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 26722-2013 ன் மீது 08.10.2014 ன்  படி வழங்கப்பட்ட உத்தரவின்படி அரசாணை (நிலை) எண் 540 வருவாய் (நி.மு.6(2) ) துறை நாள் 04.12.2014 ன் படியும்,

14.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 4614 -2015 இன் மீது 31.03.2015 அன்று வழங்கிய தீர்ப்புரையின்படியும்,

15.அரசாணை (நிலை) எண் 148 வருவாய்  (நி.மு. 6(2) ) துறை நாள் 24.03.2016 ன் படியும்,

_____________ மாவட்டம் , _________ வட்டம் , __________ கிராமத்தில் உள்ள சர்வே எண் __-ல்  உள்ள ______ பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கும் நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. 

இது ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசாணை எண் 540 -ன் படி ________ மீட்டு தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
   
 நீண்டகால நீர்நிலை என்பதால் ஏரி குளங்களை மற்றும் அரசு சொத்துக்களை ஆக்கிரமிக்க அரசு அனுமதிக்கக்கூடாது என 30.10.2015 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்  திரு S.K. கவுல் நீதியரசர் திரு. சத்தியநாராணா  நீதியரசர் திரு. சிவஞானம் ஆகியோர் அமர்வு உத்தரவில் W.P.NO 1294/2009ல் கூறியுள்ளதை தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

 இந்தநிலையில் தமிழக அரசுக்குச் சொந்தமான நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பார்வை 5-ல் காணும் அரசாணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வட்டாட்சியருக்கு மனு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேலே குறிப்பிட்டுள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் நீர் வழி பாதைகளை உள்ள ஆக்கிரமிப்புகளை 1950ம் ஆண்டுக்கு முன் உள்ள வருவாய் பதிவேடு அளவுகளின்படி அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிடக் கோருகிறேன்.  

அரசாணை 540-ன் படி 60 தினங்களுக்குள் முழுமையாக அகற்றி நிலத்தடி நீர்மட்ட  உயர்வும் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாத்து அந்நீர் நிலைகளை பொதுமக்கள் கால்நடைகள் பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரங்களை பதிவஞ்சலில் எனக்கு அளிக்குமாறு பொது நலம் கருதி கோருகின்றேன்.

தவறும் பட்சத்தில் நீதிமன்ற உதவியை நாடவுள்ளேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அரசியல் சாசன பிரிவு  48,51மற்றும் உட்பிரிவுகளின் படிஇயற்கை வளங்களை மீட்டு பேணிக்காப்பது கடமையாக கருதுகிறேன்.                                                                 
                                                             இப்படிக்கு.
                                                    

                                            
நகல் மேல் நடவடிக்கைக்காக பதிவு அஞ்சல்....

1.மேன்மைமிகு தலைமை நீதிபதி அவர்கள் உயர் நீதிமன்றம் சென்னை - 104

2.செயலர் அவர்கள் வருவாய் துறை தலைமை செயலகம் சென்னை -9

3.வருவாய் நிர்வாக ஆணையர் சென்னை -5

4.,மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் _______ மாவட்டம் -00

5.உதவி இயக்குனர் ஊராட்சிகள் ______ மாவட்டம் -00

6.மாவட்ட ஆட்சித்தலைவர் _______ மாவட்டம் -20

7.கோட்டாட்சியர் _________ மாவட்டம்.

No comments:

Post a Comment

நில அளவைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது  மனையையோ அளக்க  முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புர...