1. ஒப்படை செய்யப்பட்ட நிலங்களை 10 வருடங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. அதன்பிறகு ஒரு தகுதியுள்ள நபருக்கு தான் விற்க வேண்டும். அதற்கு தாசில்தார் அல்லது வருவாய் கோட்டாட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
G. O. Ms. No - 2485, Rev, dt - 9.11.1979
2. சவுக்கு, தென்னை மற்றும் தோட்டப்பயிர்களையும் (நெல், வாழை போன்றே) சாகுபடி பயிர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
G. O. Ms. No - 1030,Rev, dt - 9.7.1985
3. டிரஸ்ட் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிலங்களை ஒதுக்கக்கூடாது.
G. O. Ms. No - 2211, Rev, dt - 20.12.1989
4. அரசு நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர், அந்த குத்தகை தொகையை ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். தவறினால் குத்தகை ரத்து செய்யப்படும்.
G. O. Ms. No - 41580/LD.III/98 Rev. dt - 5.2.1999
5. PWD/Highways துறை நிலங்களை பொருத்து, சம்பந்தப்பட்ட துறைகளே குத்தகை அனுமதி வழங்கும். இதர துறை நிலங்களை பொருத்து வருவாய்த்துறை மூலம் குத்தகைக்கு விடப்படும்.
Chapter - 29 - manual for Rev. Dept. Officials - 2001
6. RSO 24A(10) ன்படி மதச்சார்பு நிறுவனங்கள் கோவில் காரியங்களுக்கு அரசு நிலங்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் அவற்றிற்கு பட்டா வழங்க இயலாது.
G. O. Ms. No - 133, Rev, dt - 21.1.1977
7. வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிலங்களில் 30.6.1977 க்கு முன்னர் குடிசை வீடு கட்டி வசிக்கும் வீடற்ற ஏழை மக்களை அவ்விடத்திலிருந்து காலி செய்தல் கூடாது.
G. O. Ms. No - 1670, Rev. dt - 29.8.1977
8. சென்னை உயர்நீதிமன்ற W. P. NO - 26722/2013 மற்றும் M. P. NO - 1/2013, DT - 11.8.2014 ம் தேதியில் பிறப்பிக்கப்பட்ட ஆணையின் படி ஆக்கிரமிப்பு அகற்றுதல் சம்மந்தமாக என்ன நடைமுறைகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என அரசு G. O. Ms. No - 540, Rev. LD6(2),dt - 4.12.2014 என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது.
9. நிலமற்ற ஏழைகள் மேற்படி நிலத்தை நீண்ட காலமாக அனுபவித்து வந்தால் RSO 15 ன் கீழ் அவர்களுக்கு இலவச ஒப்படை வழங்கலாம்.
G. O. Ms. No - 4018, Rev. Dept. dt - 7.7.1973
நன்றி...
No comments:
Post a Comment