வணக்கம் நண்பர்களே...!
[1]- தனியார் ஒருவருக்கு 0.14.0 ஹெக்டேர் (35 செண்ட்) க்கு கூடுதலாக மனைவரிப் பட்டா வழங்கப்படுவதில்லை.
அரசாணை எண் 808 வருவாய் (நி. அ. 2-1) துறை, நாள் - 5.10.1998.
[2]- நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் துறைத் தலைவரான நில நிர்வாக ஆணையருக்கு கொடுக்கப்படும் மனுக்களை பரிசீலித்து, மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த ஆணைகளில் தவறு இருப்பின் அதைச் சுட்டிக்காட்டி திருத்துவதற்கும், மாற்றி அமைப்பதற்கும், அதுபோல் மற்றைய மனுக்களையும் தேவையானால் தன்னிச்சையாக ஏற்று திருத்துவதற்கும், மாற்றி அமைப்பதற்கும் நில நிர்வாக ஆணையருக்கு அதிகாரம் உள்ளது.
அரசாணை எண். 396 வருவாய் (நி. அ. 2(1))துறை, நாள் - 18.9.2003.
[3]- பட்டா நிலத்தில் மனை வாங்கி வீடு, கட்டிடம் கட்ட உள்ளாட்சி ஒப்புதல் பெறுவதற்கு 1971ம் வருட நகர ஊரமைப்பு திருத்த சட்டப் பிரிவு 47-A - 2(3)ன்படி மாவட்ட ஆட்சியரிடம் N. O. C பெற வேண்டும்.
(Director of Town and Country Planning Circular 24935/2010 G. R. DT - 23.9.2011).
[4]- பட்டா தாக்கல் செய்யப்படும் இனங்களில் பட்டாவின் உண்மைதன்மை குறித்து வருவாய்த்துறையிலிருந்து விவரங்கள் கேட்டறியும் வரை பதிவுக்கு வந்துள்ள ஆவணத்தை பதியாமல் நிலுவையில் வைக்க வேண்டும்.
(பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை கடித எண் 18339/C 1/2012, DT - 25.4.2012) .
[5]-சொத்து பதிவிற்காக தாக்கல் செய்யப்படும் அடையாள அட்டையில் உள்ள எழுத்துகளில் உள்ள தட்டச்சு பிழை, ஆவணத்திலுள்ள தற்போதைய முகவரி மாற்றம் ஆகிய காரணங்களுக்காக சார்பதிவாளர் பதிவுக்கு மறக்கக்கூடாது.
(ப. து. த. ஆணை எண் 21236/இ1/2001,நாள் - 4.2.2003).
[6]- சொத்து மதிப்பு ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் இருக்குமானால் PANCARD அல்லது படிவம் 60ல் உறுதிமொழி தாக்கல் செய்ய வேண்டும்.
(ப. து. த ஆணை எண் 5031/இ1/1998,நாள்-7.12.1998).
[7]- கிரையம் பெற்றவரின் சொத்து, விற்றவரின் பெயரில் கிராம கணக்கில் இருந்தால், மேற்படி கிரைய ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யலாம்.
(CLA Lr. K4/369/2013, DT - 5.2.2013).
[8]- நிலத்தை மாற்றம் செய்பவர் பெயரும், 10(1) சிட்டாப்படி பதிவு செய்யப்பட்டவர் பெயரும் வெவ்வேறாக இருந்தால் நிலத்தை வாங்குபவர், விற்பவர் ஆகியோரை அலுவலகத்தில் விசாரணை செய்ய வேண்டும்.
ஆவணச் சான்றுகள், முந்தைய விற்பனை பத்திரங்கள், தீர்வை ரசீதுகள், கிராம நிர்வாக அலுவலரின் நேர்முக சாட்சியங்கள் முதலியவற்றை பரிசீலனை செய்து 10(1) சிட்டாப்படி பதிவு பெற்ற நிலச்சுவான்தாரர் மற்றும் நிலத்தை தன் பெயருக்கு மாற்றி கேட்பவர் ஆகியோர்களுக்கிடையே உள்ள தொடர்பை கண்டறிந்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.
(நிலவரித்திட்ட இயக்குநர் கடிதம் எண் H 1.113.287/1981,dt - 4.4.1981).
[9]- அனுபவத்தை பிரித்து காண்பிக்கும் வகையில் பூமியில் அத்துகள் இல்லையென்றாலும் பத்திரத்தில் கண்ட அளவு மற்றும் எல்கைமால்களின் படி சம்மந்தப்பட்ட நபர்களின் ஒப்புதலின் பேரில் உட்பிரிவு செய்து பட்டா வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.
(CLA/K2/46562/1984, DT - 12.9.1985) (10)- உட்பிரிவுக்கு ஆட்பட்ட பட்டா மாறுதல் இனங்களில் வட்டாட்சியர் ஆணையிட வேண்டும். (G. O. Ms. 916 C. T & R. E, DT - 23.8.1984).
நன்றி...!
No comments:
Post a Comment