Saturday, November 28, 2020

கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள்


****Compulsory Registrable Documents****

இந்திய பதிவுச் சட்டம் 1908 (The Indian Registration Act 1908) என்பது பிரிட்டீஸ் அரசு கொண்டு வந்து, இந்திய அரசு ஏற்றுக் கொண்ட ஒரு சட்டம்; இதில் “இந்திய” என்ற வார்த்தையை 1969ல் இருந்து நீக்கி விட்டார்கள்; (இந்தியாவில் இருக்கும் சட்டங்கள் எல்லாமே இந்தியச் சட்டங்கள்தானே!); இந்த பதிவுச் சட்டத்தில்தான், பத்திரங்களை பதிவு செய்யவதைப் பற்றிய சட்ட விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன;

இந்த பதிவுச் சட்டத்தின் பிரிவு 17(1)ன்படி சில பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது; அவ்வாறு “கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்” என்று சொல்லி உள்ள பத்திரங்களை, பதிவு செய்யாமல் விட்டுவிட்டால், அவைகள் சட்டப்படி செல்லாது; அந்த பத்திரங்களைக் கொண்டு உரிமை கோர முடியாது; கோர்ட்டில் அந்த பத்திரங்களை ஒரு சாட்சியமாக (Documentary evidence) எடுத்துக் கொள்ள முடியாது;

பொதுவாக அசையாச் சொத்துக்களை (Immovable properties) பதிவு செய்து கொள்ள வேண்டும்; ஆனால் அதிலும் குறிப்பாக சில பத்திரங்களை கட்டாயப் பதிவில் சேர்த்துள்ளார்கள்;

கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டிய பத்திரங்களின் விபரம்;

(1)     அசையாச் சொத்தின் “தானப் பத்திரம்” (Gift deed) எழுதிக் கொடுத்தால், அதை கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;

(2)     அசையாச் சொத்தில் உள்ள சொத்துரிமையை மாற்றிக் கொடுத்தாலும், விற்பனை செய்தாலும், விட்டுக் கொடுத்தாலும், விடுதலை செய்தாலும், அந்தப் பத்திரங்களை கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்; அவ்வாறு கொடுக்கும் உரிமை அன்றே இருந்தாலும், பின்ஒருநாளில், அதாவது இனிமேல் தருகிறேன் என்று சொல்லி இருந்தாலும் அதையும் கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;

(3)     அசையாச் சொத்தில் உள்ள உரிமையை விட்டுக்கொடுப்பதற்காக பணம் பெற்றுக் கொண்டால், அந்தப் பத்திரங்களை கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;

(4)     வருடக் குத்தகைப் பத்திரங்கள் (Yearly Leases) கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்; வருடக் குத்தகை என்பது ஒரு வருடம் அல்லது அதற்குமேல் உள்ள காலத்துக்கு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்வது; (நகரங்களில் உள்ள வீட்டு வாடகைகள், பொதுவாக மாத வாடகையாக 11 மாதங்களுக்கே செய்து கொள்ளப்படும்; எனவே வீட்டு வாடகை பத்திரங்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது;)

(5)     அசையாச் சொத்துக்களைப் பொறுத்துப் பெறப்பட்ட கோர்ட் டிகிரிகள், கோர்ட் உத்தரவுகள், அவார்டுகள் இவைகளை அல்லது அந்த டிகிரியை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் அசைன்மெண்ட் பத்திரங்களை (Assignment of Decree, Order or Award) கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;

(6)     அடுக்குமாடிக் கட்டிடங்களை தனி ப்ளாட்டுகளாக கட்டிக் கொடுக்கச் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை (Agreement relating to construction of multiunit house building on land) கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்:

மேற்சொன்னவை அல்லாமல் மற்ற பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் இல்லை;

 அதைப்பற்றிய விபரம் கீழே;

(1)     சில ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும் பத்திரங்கள்;

(2)     கம்பெனிகளின் ஷேர்களின் பத்திரங்கள் (Shares relating to Joint Stock Company);

(3)     கம்பெனிகள் கொடுக்கும் டிபன்சர் பத்திரங்கள் (Debenture issued by company);

(4)     கம்பெனி டிபசன்பர் பத்திரங்களை மாற்றிக் கொடுக்கும் பத்திரங்கள்;

(5)     அசையாச் சொத்தின் எந்த உரிமையையும் மாற்றிக் கொடுக்காத பத்திரங்கள்:

(6)     கோர்ட் டிகிரிகள், கோர்ட் உத்தரவுகள்; any Decree or Order of a Court; இவைகளை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; (ஆனால், அந்த வழக்கில் சம்மந்தப்படாத அசையாச் சொத்தைப் பொறுத்த அந்த கோர்ட் ஒரு டிகிரி கொடுத்திருந்தால், அதை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்; அதாவது, வழக்கில் அந்த அசையாச் சொத்து சம்மந்தப்பட்டிருந்தால், அந்த டிகிரியை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; வழக்குக்கு சம்மந்தமில்லாத வேறு ஒரு அசையாச் சொத்தைப் பொறுத்து, பார்ட்டிகளுக்குள் சமாதான டிகிரியை கோர்ட் மூலம் பெற்றிருந்தால், அந்த கோர்ட் டிகிரியை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்);

(7)     அரசாங்கம் எழுதிக் கொடுக்கும் அசையாச் சொத்துக்களின் கிராண்ட் பத்திரங்களை (Government Grant) பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; (அரசாங்கம் விற்கும் அல்லது இலவசமாக கொடுக்கும் அசையாச் சொத்தின் பத்திரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;

(8)      நில மேம்பாட்டுச் சட்டம் 1871ன்படி கொடுக்கும் கொலேட்டிரல் செக்யூரிட்டி கடன் பத்திரங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை;

(9)     விவசாய கடன் சட்டம் 1884ன்படி கொடுக்கும் கடன் பத்திரங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை;

(10)  அறக்கட்டளை சட்டம் 1890ன்படி அதில் உள்ள ஒரு டிரஸ்டி, அந்த டிரஸ்ட்டின் சொத்தை வேறு ஒரு டிரஸ்டிக்கு பொறுப்பு ஒப்படைக்கும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை;

(11)  ஒரு அடமானப் பத்திரத்தில் பெற்ற அடமானக் கடனை, திருப்பி கொடுக்கும் ரசீது பத்திரத்தை, பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை; (ஆனாலும் அதை பதிவு செய்து கொண்டால், சொத்தின் வில்லங்க சான்றிதழிலேயே தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்);

(12)  கோர்ட் ஏலம் மூலம் விற்பனை செய்து, ஏலம் எடுத்தவருக்கு வழக்கும் கிரய சர்டிபிகேட் (Sale Certificate) என்னும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை; (ஆனாலும், வழக்கில் உள்ள பார்ட்டிகள் அந்த சொத்தை ஏலத்தில் விடுவதற்கு மனுச் செய்து அதன் மூலம் கோர்ட் ஏலம் கொண்டுவந்து விற்பனை செய்தால், அந்த விற்பனை பத்திரத்தை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்: ஏனென்றால், அது கோர்ட்டே விற்பனை செய்த பத்திரம் அல்ல

பேங்கில் கடன் வாங்குபவரின் கவனத்திற்கு

நண்பர் ஒருவரின் பேஸ்புக் பதிவில் படித்தது

நிலத்தின் வழிகாட்டி மதிப்பை விஷம் போல ஏற்றி சட்டப்படி திருடுவது எப்படி?

"சட்டப்படி" வங்கிக் கடனா.... எப்படி?
ஊருக்கு  வெகு தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் 100 ஏக்கர் பூமி வாங்குவார்கள். அந்த பூமி வறண்டு காய்ந்து போய் இருக்கும். சும்மா கொடுத்தால் கூட யோசிப்பார்கள். இத்தகைய இடங்களில் ஏக்கர் ஒரு லட்சம் என வாங்கி விடுவார்கள். 100 ஏக்கரும் சேர்ந்து மொத்தம் ஒரு கோடிதான்.

பின்னர் அதன் ஒரு பகுதியில் ஒரு ஏக்கரை தங்களது உறவினர் பெயரில் ஏக்கர் 50 லட்சம் என பல மடங்கு அதிக விலைக்கு விற்று அதன் விற்பனை விலையான 50 லட்சத்துக்கே முத்திரைத்தாள் வாங்கி பதிவு செய்துவிடுவார்கள்.  இனி அந்த பகுதியில் ஏக்கர் 50 லட்சம் என்பது தான் அரசு வழிகாட்டி மதிப்பீடு ஆகிவிடும்.

பத்திரப்பதிவு அலுவலக முத்திரைத்தாள் விதிகளின்படி குறைத்துதான் மதிப்பீடு செய்யக்கூடாது, அரசுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அதிகமாக மதிப்பீடு செய்ய தடையில்லை. 

100 ஏக்கர் பூமியின் சர்வே எண்ணிலேயே விற்பனை செய்யப்பட்ட இந்த ஒரு ஏக்கர் பூமியும் வருவதால் மீதி 99 ஏக்கர் விலையும் இனிமேல் ஏக்கர் 50 லட்சம்தான்.

அதாவது "சட்டப்படி" இந்த 99 ஏக்கர் பூமியின் வழிகாட்டு மதிப்பீடு 49 கோடி 50 லட்சம். 

இதன் அடிப்படையில் வங்கியில் கடன் கேட்டால் ஒரு கோடி மதிப்பு பூமிக்கு "சட்டப்படி" சுமார் 15 -20 கோடி ரூபாய் கடன் கிடைக்கும். 

பின்னர் "கட்ட முடியாத சூழ்நிலை" ஏற்பட்டால் கடன் வாங்கியவர்க்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு கோடி தான் நட்டம் மீதி 14 கோடி லாபம் தான்.

இந்த பூமியை வங்கி ஏலத்தில் விற்க போனால் மொத்த பூமியும் சேர்த்து வாங்கிய ஒரு கோடி விலை சொன்னாலும் வாங்க ஆள் வர மாட்டார்கள். 

அந்த நிறுவனத்தின் இதர சொத்துக்களும் "சட்டப்படி" இந்த நிலையில்தான் இருக்கும். எனவே கடனை மீட்க முடியாமல் போய்விடும். இதுதான் வராக்கடன்.

எல்லாமே ஆவணங்களின்படி சட்டப்படி சரியா இருக்கும். எனவே யாரையும் குற்றம்சாட்ட முடியாது.

நிலத்தை பார்வையிட செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தெரியும் இந்த இடத்தில் இந்த விலை இல்லை என்று. 
இருந்தும் சட்டப்படி அரசின் வழிகாட்டி மதிப்புதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

அப்புறம் என்ன Write Off தள்ளி வைப்புதான். இது போன்ற அர்த்தமற்ற இயந்திரத்தனமான கடன் வழங்கும்  செயல்பாடுகளை திருத்தி அமைத்தால் வராக்கடன் என்பது இருக்காது.

பெரிய கார்பொரேட் கம்பெனிகள் கூட குறுக்கு வழியில் இப்படித்தான் வங்கி அடமான சொத்துக்களை அதன் சொத்து மதிப்பு ஆவணங்களை பெருமதிப்பு வருமாறு  தயாரிக்கின்றனர், 

வங்கி மேலாளரின் அனுபவமின்மை, அந்த ஊர் நகரம் பற்றிய பரிச்சயமின்மை,  ஆவணங்கள் சரியாக இருத்தல் மேலிடத்து அழுத்தம், லஞ்சம் , டார்கெட், வருமான ,சொத்துவரி சரியாக இருத்தல்,போன்ற பல சாத்தியக் கூறுகளால் வங்கி இந்த திடீர் மதிப்பு கூடரடப்பட்ட நிலங்களுக்கு கடன் தரும் நிலைக்கு தள்ளப்பட்டுகிறது,

Friday, November 27, 2020

UTR பிழைத்திருத்தம்


ஐயா‌ வணக்கம்
UDR க்கு முந்தைய உள்ள ஆவணங்களில் என் தாத்தாவின் பெயர் உள்ளது. தற்பொழுது நில அனுபவமும் மற்றும் பாத்திரமும் எங்களிடம் உள்ளது. ஆனால் தற்போது பட்டாவில் என் தாத்தாவின் அண்ணண் பெயர் உள்ளது. பட்டா எவ்வாறு என் தாத்தாவின் அண்ணண் பெயரில் மாற்றப்பட்டது என் RTI டில் கேட்க முடியுமா? அவ்வாறு கேட்டால் பட்டா என் தாத்தாவின் பெயரில் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதா?

ஆமாம் ஐயா . தாங்கள் பட்டா மாற்றம் செய்ய இணையதளத்தில்  விண்ணப்பிக்க சொன்னீர்கள் ஆனால் கிராம நிர்வாக அலுவலரை அனுகிய பொழுது  UDR correction kku  கோட்டாட்சியரிடம் மனு அளிக்க கூறினார்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரும் மனு


அரசாணை எண் : 540-ன் கீழ் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரும் மனு.

அனுப்புனர் :-

                            XXXXXXXXXX
                                                                              
           
       
பெறுநர் :-

                            XXXXXXXXXX
            
         
        

பொருள் :-

                     அரசுக்குச் சொந்தமான வருவாய்த்துறை அரசாணை எண் : 540 -ன் படி  அகற்றி பொதுமக்கள் பயன் பெற செய்ய கோருதல்

பார்வை :
                அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து அவற்றை அகற்றவும் கீழ்க்காணும் சட்டங்களின் வழிவகை செய்யப்பட்டுள்ளன.                                    

1.தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 

2.தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 

3.தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சட்டம் 1958

4.தமிழ்நாடு பொது கட்டிடம் (அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு) சட்டம் 1975 

5.தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994

6.தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் சட்டம் 2001

7.தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டம் 2007

8.அரசாணை (நிலை) எண் 41 வருவாய் துறை நாள்: 20.01.1987 

9.அரசாணை (நிலை) எண் 186 வருவாய் துறை நாள்: 29.04.2003

10.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப்பேராணை என் 20186-2000 ல் வெளியிட்ட தீர்ப்பின்படியும்,

11.மாண்புமிகு உச்ச நீதிமன்ற சிறப்பு விடுப்பு மனு எண் 3109-2011 மற்றும் சிவில் மேல்முறையீட்டு எண் 1132-2011ஆகியவற்றின் மீது வழங்கப்பட்ட உத்தரவுகளின்படியும்,

12.மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 26722-2013 மற்றும் பலவகை மனு எண் 1-2013 ன் மீது 11.08.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்புரையின் படியும்,

13.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 26722-2013 ன் மீது 08.10.2014 ன்  படி வழங்கப்பட்ட உத்தரவின்படி அரசாணை (நிலை) எண் 540 வருவாய் (நி.மு.6(2) ) துறை நாள் 04.12.2014 ன் படியும்,

14.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 4614 -2015 இன் மீது 31.03.2015 அன்று வழங்கிய தீர்ப்புரையின்படியும்,

15.அரசாணை (நிலை) எண் 148 வருவாய்  (நி.மு. 6(2) ) துறை நாள் 24.03.2016 ன் படியும்,

_____________ மாவட்டம் , _________ வட்டம் , __________ கிராமத்தில் உள்ள சர்வே எண் __-ல்  உள்ள ______ பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கும் நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. 

இது ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசாணை எண் 540 -ன் படி ________ மீட்டு தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
   
 நீண்டகால நீர்நிலை என்பதால் ஏரி குளங்களை மற்றும் அரசு சொத்துக்களை ஆக்கிரமிக்க அரசு அனுமதிக்கக்கூடாது என 30.10.2015 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்  திரு S.K. கவுல் நீதியரசர் திரு. சத்தியநாராணா  நீதியரசர் திரு. சிவஞானம் ஆகியோர் அமர்வு உத்தரவில் W.P.NO 1294/2009ல் கூறியுள்ளதை தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

 இந்தநிலையில் தமிழக அரசுக்குச் சொந்தமான நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பார்வை 5-ல் காணும் அரசாணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வட்டாட்சியருக்கு மனு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேலே குறிப்பிட்டுள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் நீர் வழி பாதைகளை உள்ள ஆக்கிரமிப்புகளை 1950ம் ஆண்டுக்கு முன் உள்ள வருவாய் பதிவேடு அளவுகளின்படி அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிடக் கோருகிறேன்.  

அரசாணை 540-ன் படி 60 தினங்களுக்குள் முழுமையாக அகற்றி நிலத்தடி நீர்மட்ட  உயர்வும் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாத்து அந்நீர் நிலைகளை பொதுமக்கள் கால்நடைகள் பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரங்களை பதிவஞ்சலில் எனக்கு அளிக்குமாறு பொது நலம் கருதி கோருகின்றேன்.

தவறும் பட்சத்தில் நீதிமன்ற உதவியை நாடவுள்ளேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அரசியல் சாசன பிரிவு  48,51மற்றும் உட்பிரிவுகளின் படிஇயற்கை வளங்களை மீட்டு பேணிக்காப்பது கடமையாக கருதுகிறேன்.                                                                 
                                                             இப்படிக்கு.
                                                    

                                            
நகல் மேல் நடவடிக்கைக்காக பதிவு அஞ்சல்....

1.மேன்மைமிகு தலைமை நீதிபதி அவர்கள் உயர் நீதிமன்றம் சென்னை - 104

2.செயலர் அவர்கள் வருவாய் துறை தலைமை செயலகம் சென்னை -9

3.வருவாய் நிர்வாக ஆணையர் சென்னை -5

4.,மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் _______ மாவட்டம் -00

5.உதவி இயக்குனர் ஊராட்சிகள் ______ மாவட்டம் -00

6.மாவட்ட ஆட்சித்தலைவர் _______ மாவட்டம் -20

7.கோட்டாட்சியர் _________ மாவட்டம்.

பத்திரம் பிழைத்திருத்தல் பற்றிய தகவல்..!


கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் 
பத்திரத்தின் 20 தகவல்கள்....

1. பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் ( RECTIFICATION DEED) என்பர்.

2. கிரயம், செடில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.

3. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.

4. திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்.

5. பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.

6. செக்குப் பந்தியில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது. பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, முன்புள்ள பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும்போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது.

7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.

8. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 100/- மொத்த செலவும், 500 க்குள் முடியும்.

9. உரிமை மாற்றம் பிழைத்திருத்தலில் 2ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என்று எழுதி விடுவது ஆனால் 2 ஏக்கர் 1 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட வேண்டும்.

10. மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட முடியும்.

11. குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் பெற்று கொள்ள முடியாது.

12. சொத்து விற்ற நபர் பிழைத்திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.

13. விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் தான் நாட வேண்டும்.

14. சொத்தை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தல் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் நாடி அதனைத் தீர்க்க வேண்டும்.

15. சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.

16. சில ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு.

17. மனை எண் 10 யை மனை எண் 11 என்று தவறாக டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 10 என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில்11 என்றே இருக்கும்

18. இது போன்ற திருத்தம் சட்ட விரோத திருத்தமே இதனால் எந்தவித உரிமை மாற்றமும் வாரது. எவே நிச்சயம் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.

19. ஆவணங்களில் எழுதப்பட்ட ஷரத்துக்களில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.

20. சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் வாங்காமல் இருந்தால் அந்த பதிவு நீதி மன்றம் செல்லாது என்றே தீர்ப்பளித்து இருக்கிறது.

UTR திருத்தம்

யூடிஆர் (கூட்டு பட்டா) , கிராமநத்தம் , புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்யும் முறை...!

UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, பட்டாதாரர் & தந்தை பெயர் பிழையாக இருக்கிறது, எழுத்து & பெயர் பிழையாக இருக்கிறது, சர்வே எண்கள் / உட்பிரிவுகள் தவறுதலாக உள்ளது, கிராம நத்த ஆவணங்களில் நாங்கள் அனுபவிக்கும் வீட்டை பக்கத்து வீட்டுகாரர் பெயரில் ஏற்றிவிட்டனர் போன்ற பல ஆவண பிழைகளால் ஏற்படும் சிக்கல்கள் பல பிழையான ஆவணங்கள் வைத்து இருந்தால் நிலங்களை பட்டா மாற்றம் செய்தல் இலகு அல்ல, வீடுகட்ட அங்கீகாரம் கிடைப்பது கடினம்,  கடன் கிடைக்கபெறுவது கடினம், போன்ற பல சிக்கல்கள் எழும். இதனை வட்டாசிரியர் அலுவலகம் அணுகி சரி செய்தல் முறை.

UDR / கிராம நத்தம்/ FMB யில் திருத்தங்கள் செய்ய என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதின் நடைமுறை விளக்கம்.

முதலில் உங்கள் ஆவணத்தில் உள்ள பிழை என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், இதில் உங்களுக்கு தெளிவில்லை என்றால் அறிந்தவர்களிடம்  விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளுதல் அவசியம். என்ன தவறு, தவறுதலுக்கான காரணம் இவற்றை அறிந்து கொண்டால், இதனை சரி செய்தல் இலகுவாகும்.

நமது கோரிக்கை என்னவோ அதனை  அரசு தரப்பு ஊழியர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், மனுவாக  எழுதுதல் வேண்டும். மனு சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் நலம்.

மேற்படி மனுவுடன் ஆதாரங்கள் இணைக்க வேண்டும். இதனை மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்று  சமர்ப்பிக்க வேண்டும். பதிவு தபால்  மூலமாகவும் அனுப்பலாம். நேரிடையாக சென்று கொடுத்தால் அத்தாட்சி பெறுதல் விதிகளின்படி அரசு அலுவலகத்தில் இருந்து ஏற்பு ரசீது (அக்னாலெட்ஜ்மெண்ட்)  பெற வேண்டும்.  உங்கள் மனுவில் பணியாளர் & நிர்வாக சீர்திருத்தம் சட்ட ஆணை 114 , 66, 89 கீழ் ஏற்பு ரசீது கொடுக்கும் படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

நமது கோரிக்கை என்னவோ அதனை  அரசு தரப்பு ஊழியர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், மனுவாக  எழுதுதல் வேண்டும். 

மனு சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் நலம். மேற்படி மனுவுடன் ஆதாரங்கள் இணைக்க வேண்டும். இதனை மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்று  சமர்ப்பிக்க வேண்டும். பதிவு தபால்  மூலமாகவும் அனுப்பலாம்.

பதிவு தபாலில் அனுப்பியிருப்பின், பதிவு தபால் அத்தாச்சி வந்தவுடன், DRO அலுவலகம் நேரிடையாக சென்று தபால் பிரிவில் இருப்பவரிடம் மனுவின் நிலைமை, மற்றும் அதற்கு வரிசை எண் கொடுக்கப்பட்டு, உரிய நபரிடம் நகர்ந்து இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். தேவைபட்டால் DRO வை நேரிடையாக சந்திக்க வேண்டும்.

DRO அலுவலகத்தில் இருந்து, மேற்படி மனு, உங்கள் ஊர் வட்டாசியருக்கு FORWARD செய்யப்படும். பதிவு தபாலில் அனுப்பியிருப்பின், அதற்கான இன்னொரு நகல் கடிதம் நமக்கு வந்து சேரும் , அந்த கடிதம் கிடைத்தவுடன் தாங்கள் வட்டாட்சியர் அலுவலகம் நேரிடையாக சென்று அங்கு இருக்கும் தபால் பிரிவை அணுகி உங்கள் மனு ”எண்” ஆகிவிட்டதா என்றும், அது சம்பந்தப்பட்ட நபருக்கு சென்று விட்டதா என பார்த்துவிட்டு, தேவைபட்டால் துணை வட்டாட்சியர் , வட்டாட்சியரை சந்தித்து விவரங்களை சொல்ல வேண்டும்.

மேற்படி மனு வருவாய் ஆய்வாளருக்கு (RI) FORWARD செய்யப்படும். நாம் அவரை பின் தொடர்ந்து அதனை VAO க்கு வர வைக்க வேண்டும் . VAO வை நேரடியாக சந்தித்து கிராம கணக்கு விவரங்கள் , மற்ற கள விவரங்கள் பற்றி மனுவை ஒட்டி VAO விசாரணை நடத்தி ஆய்வறிக்கை தயார் செய்வர் . அப்பொழுது அவருக்கு தேவையான விவரங்களை நாம் தர வேண்டும்.

 இதன்பின் இந்த மனுவானது, VAO விடம் இருந்து, RIக்கும், RI இடம் இருந்து வட்டாசிரியருக்கு அனுப்பப்படும். கூட்டுப்பட்டா  சிக்கல்கள் பட்டா மேல் முறையீடு அதிகரியிடமும், FMB சிக்கல்கள் தலைமை சர்வேயருக்கும் , கிராம நத்தம் பிரச்சனைகள் நத்தம் அலுவலகத்திற்கு செல்லும். பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு விசாரணை அழைப்பானை வரும்.

அழைப்பாணையில் குறிப்பிட்ட தேதியில் தவறாமல் ஆஜராகி விசாரணையில் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளித்து, தாங்கள் கொடுத்த பதில்களை ஆவணங்களாக உருவாக்கி உங்களிடம் கையெழுத்து பெற்று மேற்படி ரிப்போர்ட்களை DRO விற்கு அனுப்பி வைப்பார்கள்.

எந்த வித சிக்கலும் பிரச்சினைகளும் ஆட்சேபனைகளும் உங்கள் பிராதுக்களில் இல்லை என்றால் DRO உத்தரவு போட்டு உங்களுக்கு ஏற்ற நிவாரணம் செய்வார் . உங்கள் ஆவணங்கள் DRO உத்தரவு படி சரி செய்யப்படும். அதுவே ஆட்சேபனைகளும் சிக்கல்களும் எதிர்ப்புகளும் இருந்தால், மேற்படி மனு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்ற விசாரணையில் வழக்காக்கி பதியப்பட்டு , வழக்கு விசாரணை அடிப்படையில் தங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

அனுபவ பாத்தியதை என்பது எத்தனை வருடம்?


அனுபவ பாத்தியதை என்பது எத்தனை வருடம்? எனது நிலத்தில் 5 வருடமாக குத்தகை விவசாயம் செய்து வருபவர் நிலத்தை திருப்பித் தர மறுக்கிறார். என்ன செய்வது?

''வேறு ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அதன் உரிமையாளருக்கு எதிராக, அவரின் உரிமையை மறுத்து, நீண்ட காலம் தொடர்ந்து அனுபவித்து வரும் ஒருவருக்கு அந்த சொத்தின் மீது ஏற்படும் உரிமை/பாத்தியதையே அனுபவ பாத்தியதை ஆகும். தனிநபர் சொத்தினை பொறுத்து அனுபவ பாத்தியதை கோர பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சுவாதீன அனுபவம் தேவை. அரசாங்க சொத்துக்களின் மீது இந்த உரிமை கோர 30 ஆண்டுகள் தேவை. தங்களது அனுமதியின் பேரில் குத்தகைதாரராக சொத்தின் அனுபவத்தில் உள்ளவர் எந்த காலத்திலும் அனுபவ பாத்தியதை உரிமை கோர முடியாது. குத்தகைதாரரை வெளியேற்ற நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம்.''

தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) முதல் மேல்முறையீடு

வணக்கம் நண்பர்களே...!

அனுப்புநர் :-

XXXXXXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXXXX
XXXXXXXXXX
XXXXXX

பெறுநர் :-

XXXXXXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXXXX
XXXXXXXXXX
XXXXXX

பொருள் :-

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 19 (1)-ன் கீழ் முதல் மேல்முறையீடு செய்தல் தொடர்பாக.

ஐயா, அம்மா வணக்கம்...!

பார்வை: தகவல் கோரிய எனது விண்ணப்ப நாள்___________.

நான் சில தகவல்கள் கோரி கடந்த _______ ஆம் தேதி அன்று முகவரியில் உள்ள பொது தகவல் அலுவலரிடம் விண்ணப்பித்து இருந்தேன்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7 (1)-ன் படி 30 நாட்களுக்குள் தகவல் எனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் நான் அளித்த மனுவிற்கு, 30 நாட்கள் கடந்த நிலையில் நான் கோரிய தகவல்கள் வழங்கப்படவில்லை.

எனவே ஐயா என் முதல் மேல்முறையீடு மனுவை ஏற்று எனக்கு வழங்க வேண்டிய தகவலை பிரிவு 7 (6)-ன் படி கட்டணம் ஏதுமின்றி அளிக்கும்படி உத்தரவிடுமாறு தங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

முதல் மேல்முறையீட்டு மனு அனுப்புவதற்கான காரணங்கள் :-

தகவல் வழங்கப்படவில்லை/வழங்கப்பட்ட தகவல் முழுமையாக இல்லை/தகவல் திருப்திகரமாக இல்லை/மனு ஏற்கப்படவில்லை.

[நண்பர்களே உங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்]

இணைப்பு :-

1. தகவல் வேண்டி 6(1)-ன் கீழ் நான் அனுப்பிய மனுவின் நகல்.

2. பொது தகவல் அலுவலர் அவர்கள் மனுவை பெற்றுக் கொண்டதற்கான அஞ்சலக ஒப்புகைச் சீட்டின் நகல்.

                                                    இப்படிக்கு.

தடையாணை புத்தகம்

அரசாணை ( நிலை) 540, வருவாய் துறை, நாள்;04.12.2014 ஆக்கிரமிப்பு அகற்ற மனு.
--------------------------------------------------------------------
*தடையாணை புத்தகம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்
****--**-**-**************
       *மாவட்ட அலுவலக* *நடைமுறை நூல் பத்தி 161-ல் தடையாணைப் புத்தகத்தின் பதிவு செய்ய* *வேண்டிய நிலங்கள் மற்றும் முறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. *எந்தவிதமான நிலங்களை ஒப்படை, நிலமாற்ற உரிமை மாற்றம் குத்தகை போன்றவைக்கு* *கொடுக்கக் கூடாது என உறுதி செய்து தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்தல் வேண்டும்* 

1. கிராமத்தில் உள்ள நீர் நிலைப் புறம்போக்குகள் , மயானம், மந்தைவெளி புறம்போக்குகள் அவற்றின் பொது நன்மை கருதியும், பிற்கால தேவை கருதியும் தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

2. குறிப்பிட்ட புறம்போக்கில் ஒரு வகுப்பினர் ஆக்ரமணம் செய்ய எத்தனித்திருக்கும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதினால் அந்நிலத்தை தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்திடல் வேண்டும்.

3.  நகர்புற எல்லையிலிருந்து 8 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள அனைத்து புறம்போக்கு நிலங்களையும் அரசின் பிற்கால தேவையைக்கருதி தடை ஆணைப் புத்தகத்தில் பதிந்திட வேண்டும்.       

தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களை பாதுகாப்பது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும். சரக வருவாய் ஆய்வாளர்கள் கிராமங்களில் முகாமிடும்பொழுது இத்தகைய நிலங்களை பார்வையிட்டு ஆக்ரமணம் ஏதும் இருப்பின் உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம/ வட்ட அளவில் உள்ள தடையாணைப் பதிவேடு கோட்ட மற்றும் மாவட்ட அளவில் பராமரிக்கப்படும். பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரி பார்த்து ஒவ்வொரு வருடம் ஜீலை 20-ம் தேதிக்குள் சான்று பெற வேண்டும்.

நகல் மனுக்கள்
பொது மக்கள் தங்களுக்கு தேவைப்படும் வருவாய்க்கணக்குகளின் நகல்கள் மற்றும் இதர ஆணைகளின் நகல்களை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களிலிருந்து உரிய விண்ணப்பம் அளித்து பெற்றுக் கொள்ளலாம். மேற்படி ஆவண நகல்கள் நேரிடையாக அவர்களுக்குத் தொடர்புடைய தாகவோ அல்லது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுபவையாகவோ இருத்தல் வேண்டும். இரகசியத் தன்மை உடைய ஆவணங்கள் தவிர்த்து இதர ஆவணங்களின் நகல்கள் வழங்கப்படும் ஆவணங்களின் நகல்கள் பெற தேடு கூலியாக ஒவ்வொரு ஆவணத்திற்கும் முதல் வருடமாக இருப்பின் ரூ.10/-ம் அதற்கு முந்தைய ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.5/-ம் செலுத்திட வேண்டும். ஆவணங்களின் நகல்கள் வட்ட அலுவலகங்களில் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியராலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக  உதவியாளராலும் சான்றொப்பமிடப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலரால் சான்றொப்பமிடப்படுதல் வேண்டும்.
(வருவாய் நிலை ஆணை எண்-173 மற்றும் மாவட்ட அலுவலக நடைமுறை நூல்

முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்


நோக்கம்
                 ஏழை மக்களின் வீட்டின் தேவையை பூர்த்தி செய்வதோடு பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையிலும் வீடு கட்டிக் கொடுப்பதே  முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் நோக்கமாகும்.

நிதி ஆதாரம் :இத்திட்டத்திற்கு தேவையான நிதி முழுவதையும் மாநில அரசே வழங்குகிறது.
அலகுத் தொகை - ரூ.2,10,000
ஒரு வீட்டிற்கான கட்டுமானத் தொகை ரூ. 1,80,000
சூரிய மின் சக்தி விளக்கு பொருத்துவதற்கான தொகை ரூ. 30,000
 மொத்தம் ரூ. 2,10,000

சிறப்பு அம்சங்கள் :
1. ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும்.
2. ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, தாழ்வாரம்  மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும்.
3. ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
4. ஒவ்வொரு வீட்டிலும் சூரிய மின் சக்தியில் எரியும் 5 ஒளி உமிழும் டையோடு  விளக்குகள் (டுநுனு) பொருத்தப்படும்.
5. கூடுதல் வசதியாக பயனாளியின் விருப்பத்தின்படி தமிழ்நாடு மின்சார உற்பத்தி  மற்றும் பகிர்மான கழகத்திலிருந்து மின் இணைப்பு பெறவும் வழிவகை  செய்யப்பட்டுள்ளது.
6. வீடுகள் கட்டும் பணி நேரடியாக பயனாளிகளால் மேற்கொள்ளப்படும்.
7. சூரிய மின் சக்தி விளக்குகள் அமைக்கும் பணிகளை செயல்படுத்துவதற்கு
தொடர்புடைய மாவட்ட திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
பொறுப்பாவார்.

8. பசுமை வீடுகள், பயனாளியின் தற்போது குடியிருப்பு அமைந்துள்ள மனையில்  (ஏற்கெனவே உள்ள குடியிருப்பு அமைப்பினை அகற்றிவிட்டு) அல்லது கிராம  ஊராட்சியின் பிற பகுதியில் அமைந்துள்ள பயனாளிக்கு சொந்தமான  மனையில் கட்டப்பட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கான நில எடுப்பு ஏதும் செய்யப்படமாட்டாது.  வீட்டுமனைப்பட்டா  உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர்.

9. அமைக்கப்படும் சூரிய மின் சக்தி விளக்குகள் மற்றும் அத்துடன் கூடிய இதர உபகரணங்களை பயனாளிகள் முறையாக பயன்படுத்தும் விவரங்களைத்  தெரிவிக்கும் பிரசுரங்கள், பயிற்சி விபரங்கள் மற்றும் கையேடுகள்  விநியோகம்  செய்யப்படும்.
10. ஒவ்வொரு பசுமை வீடும் அனுமதிக்கப்பட்ட பரப்பளவான 300 சதுர அடிக்கு
மிகாமல் ஏற்கெனவே இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவாறு
கட்டப்படவேண்டும். இதன் வடிவமைப்பில் மாறுதல்கள் அனுமதிக்கப்
படமாட்டாது.
11. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட வீட்டின் பரப்பளவான 300 சதுர அடியில் வீட்டின்  வடிவமைப்பில் மாறுதல் செய்யாமல், சமையலறை மற்றும் படுக்கை அறை  ஆகியவற்றை இட அமைவிற்கேற்ப மாற்றி அமைக்க அனுமதிக்கப்படும்.

12. இத்திட்டத்திற்கான சின்னம் செராமிக் ஓடுகளில் வடிவமைக்கப்பட்டு
அனைத்து வீடுகளிலும் அனைவரும் பார்க்கும் வகையில் பதிக்கப்பட
வேண்டும்.

 13. கட்டி முடிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும் திட்டத்தின் பெயர், பயனாளியின் பெயர்  மற்றும் வீடு கட்டப்பட்ட ஆண்டு ஆகிய விபரங்கள் தெளிவாகத் தெரியும்  வகையில் வண்ணத்தினால் எழுதப்பட வேண்டும்.

14. பயனாளிகளால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகளுக்கான பட்டியல்
தொகை கீழ்கண்டவாறு நான்கு நிலைகளில் பயனாளிகளின் வங்கி கணக்கில்  நேரடியாக வழங்கப்பட வேண்டும்.
i. அடித்தள நிலை
ii. ஜன்னல் மட்ட நிலை
iii. கூரை வேயப்பட்ட நிலை
iஎ. முடிவுற்ற நிலை

15. ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.2.10 இலட்சம் அலகுத் தொகையுடன் மற்ற
திட்டங்களுடன் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் கூடுதலாக மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 90 மனித சக்தி நாட்களுக்கான  அறிவிக்கப்பட்ட தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.
(90 ரூ.229 = ரூ. 20,610)

16. மேலும் பயனாளிக்கு தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிக்கு ரூ.12,000  மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து  வழங்கப்பட வேண்டும்.

17. இவை தவிர, பயனாளிகளுக்கு மான்ய விலையில் சிமெண்ட் கம்பிகள், கதவுகள்  மற்றும் ஜன்னல்கள் பயனாளிகளின் தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது.  இப்பொருட்களுக்கான கிரையத் தொகை, பயனாளிகளுக்கு வழங்கப்படும்  பட்டியல் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. 

தகுதி வாய்ந்த பயனாளிகள் :

கிராமப் பகுதிகளில் வாழும் வீடு இல்லாத வீட்டு மனை பட்டா உடைய ஏழை மக்கள்  அனைவரும் இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகள் ஆவர்.

பயனாளிகளின் தகுதி :
பயனாளி கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
1. சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. 300 சதுர அடிக்கு குறையாத வீட்டு மனை சொந்தமாக இருக்க வேண்டும்.
3. குடும்ப தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர்  பெயரிலோ வில்லங்கமற்ற வீட்டு மனைப்பட்டா இருக்க வேண்டும்.
4. தொடர்புடைய கிராம ஊராட்சியில் அல்லது வேறு எங்கும் கான்கிரீட் கூரை  போடப்பட்ட சொந்த வீடு எதுவும் இருக்கக் கூடாது.
5. அரசின் எந்தவொரு வீடு

கட்டும் திட்டத்திலும் பயன் பெற்றவராக இருக்கக்
கூடாது. 

 பயனாளிகள் தேர்வு :
1. பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும் போது, மாற்றுத் திறனாளிகள்,
விதவைகள், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்,
பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், முன்னாள்
இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் துணை இராணுவ படையினர்,  ஊரகப் பகுதிகளில் வாழும் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் துறையால் (ஐஊனுளு)  அடையாளம் காணப்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்கள்,  திருநங்கைகள், துணை இயக்குநரால் (மருத்துவப் பணிகள்) சான்றிதழ்  வழங்கப்பட்ட ஹெச்ஐவி/எய்ட்ஸ்/காசநோய் ஆகிய நோய்களால்  பாதிக்கப்பட்டவர்கள், தீ விபத்து, வெள்ளம் போன்ற இதர பிற இயற்கை  இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை
அளிக்கப்படவேண்டும். மேலும், மனநலம் குன்றியோர் உள்ள குடும்பங்களுக்கும்  முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

2. ஒவ்வொரு கிராம ஊராட்சியில் வாழும் ஏழை மக்களிலிருந்து பயனாளிகள்  தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும்  அப்போதைய புது வாழ்வு திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட நலிவுற்றவர்கள்  பட்டியலில் (ஞஐஞ) இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தயார்  செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல்களில் அவர்களின் ஏதுநிலைக்கு ஏற்ப  முன்னுரிமை அடிப்படையில், கிராம சபையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.

வீடுகள் ஒதுக்கீடு செய்தல் :

1. மாநில அளவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் இத்திட்டத்தின் கீழ்  ஒவ்வொரு ஆண்டும் கட்டப்படவுள்ள வீடுகளின் எண்ணிக்கையை
மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்வார்.

2. மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் கிராம ஊராட்சிகளுக்கான வீடுகளை
ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்க வேண்டும்.

3. தகுதிவாய்ந்த பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்வதற்கு கிராம அளவிலான  குழு அமைக்கப்பட வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி),  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர் /  தனி அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு, கிராம ஊராட்சியில் உள்ள ஏழை  மக்களிலிருந்து வழிகாட்டி நெறிமுறைகளின்படி பயனாளிகளை தேர்வு செய்து,  அவ்வாறு குழுவால் இறுதி செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலை கிராம  சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஊராட்சி ஒன்றிய  பெருந்தலைவர் கிராம அளவிலான குழுவில் சிறப்பு அழைப்பாளராக இருப்பார்.

4. கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டு தேர்வு செய்யப்பட்ட  பயனாளிகளுக்கு  முன்னுரிமைப்பிரிவின் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார  ஊராட்சி), வீடுகள் ஒதுக்கீடு செய்வார்.

இன வாரியான ஒதுக்கீடு :
மொத்த ஒதுக்கீட்டில் வீடுகள் கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
1. ஆதிதிராவிடர் - 29ரூ
2. பழங்குடியினர் - 1 ரூ
3. இதர பிரிவினர் - 70ரூ
மாவட்ட வாரியான ஒதுக்கீட்டில் 4 விழுக்காடு மாற்றுத் திறனாளிகளுக்கு
பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.
பணிகளுக்கான உத்தரவு வழங்குதல்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களால் நில உரிமை, இடம் ஆகியவை  சரிபார்க்கப்பட்டதை உறுதி செய்த பிறகு தகுதியுள்ள பயனாளிகளுக்கு வட்டார வளர்ச்சி  அலுவலர் (வட்டார ஊராட்சி) வேலை உத்திரவினை வழங்குவார்.

திட்ட செயலாக்கம்

1. ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில்
திட்டத்திற்கான நிர்வாக அனுமதி மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட வேண்டும்.
2. திட்ட செயலாக்கம், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (வட்டார ஊராட்சி)
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
3. இடத்தை குறியீடு செய்தல்: சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியின் ஒன்றிய
மேற்பார்வையாளர் / உதவிப் பொறியாளர் / இளநிலைப் பொறியாளர் அரசினால்  ஒப்புதலளிக்கப்பட்ட வடிவமைப்புக்கேற்றவாறு வேலையைத் துவக்குவதற்காக  நிலத்தில் குறியீடு செய்வார்.
4. வீடுகளைக் கட்டுவதற்கும் மற்றும் இதர தொழில்நுட்ப அம்சங்களுக்கும்
அரசாணை (நிலை) எண்.111, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ஞசு.1) துறை நாள்.
21.08.2018-ன்படி ஒன்றிய மேற்பார்வையாளர்கள் / உதவிப் பொறியாளர்கள் /
இளநிலைப் பொறியாளர்கள் பொறுப்பாவார்கள். ஒன்றிய மேற்பார்வையாளர்கள்  நிலத்தை குறியீடு செய்வதற்கும், மாதிரி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப  குறியீடுகளின்படி வீடுகள் கட்டும் பணிகளை மேற்பார்வையிடவும் உதவியாக  இருப்பார்கள்.
5. உதவி செயற்பொறியாளர்களால் (ஊ.வ) வீடுகள் கட்டுவதை சரிபார்த்து மேல்  அளவீடு செய்யப்பட வேண்டும்.
6. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்கள், செயற் பொறியாளர்கள் (ஊ.வ) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் (ஊ.வ)
வீடுகளின் பணி முன்னேற்றத்தை அடிக்கடி ஆய்வு செய்து வீடுகளை குறிப்பிட்ட  காலத்திற்குள் முடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ்  உருவாக்கப்பட்ட மாதிரி வடிவமைப்பிலும் அல்லது இத்திட்டத்திற்கான  செயல்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள்/அறிவுரைகளிலிலிருந்து  மாறுபாடாக இல்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

7. பசுமை வீடுகளின் கட்டுமானத்தை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  உதவியுடன் பயனாளிகளே மேற்கொள்வர்.

8. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் சூரிய மின்சக்தி விளக்கு அமைக்கும் பணி  மேற்கொள்ளப்படும்.  

திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக  வேண்டிய அலுவலர்கள்:

மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர், சென்னை-15. :

மாவட்ட அளவில் : 
1. மாவட்ட ஆட்சித் தலைவர் :
2. திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை.
3. உதவி திட்ட அலுவலர் (வீட்டு வசதி (ம) சுகாதாரம்)  

வட்டார அளவில் : 
1. வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) .
2. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)  

கிராம ஊராட்சி அளவில் : கிராம ஊராட்சித் தலைவர்

மின்வாரிய விதி 12 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

வணக்கம் நண்பர்களே...!

நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் எனது கிராமத்தில் மின்சாரம் தடைபட்டது மேலும் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டது. 

ஆனால் எனது வீட்டிற்கு மட்டும் மின்சாரம் சிறிது பழுது காரணமாக கிடைக்கவில்லை. 

இதனால் நேற்று சுமார் 5 மணி அளவில் அரக்கோணம் கிராமிய துணை மின் பொறியாளர் [பராமரிப்பு] அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன் அவர்களும் ஊழியரை அனுப்பினான் சரி செய்ய சொல்வதாக கூறினார். 

ஆனால் இன்று சுமார் 3 மணி வரை பழுது சரி செய்யப்படாமல் என் வீட்டிற்க்கு மின்சாரம் கிடைக்கவில்லை. 

இதனால் நான் மறுபடியும் தொடர்பு கொண்டு மின்வாரிய விதி 12 சுட்டிக்காட்டினேன் உடனே வேலை நடந்து வீட்டின் மின் இணைப்பை பழுதை சரி செய்து சென்றனர்.

மின்வாரிய விதி 12 என்ன சொல்கிறது...?

நமது வீடு மாநகரப் பகுதிக்குள் இருந் தால் 1 மணிநேரத்திற்க்குள்ளா கவும், நகராட்சி பகுதியெனில் 3 மணி நேரத் -திற்க்குள்ளாகவும், கிராமப் பகுதி  யெனில் 6 மனிநேரத்திற்க் குள்ளாக -வும்,கிராம பகுதியெனில் 6 மணி நேரத்திற்க்குள்ளாகவும் வந்து சரி செய்திட வேண்டும்.

இல்லையென்றால தாமதிக்கும் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் 50 ரூ. வீதம், அதிகபட்சம் 2000 ரூ. வரை நமக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

அத்தொகை நமக்கு பணமாகவோ, காசோலை யாகவோ வழங்கப்பட மாட்டாது. 

நமது மின் கட்டண தொகை யில் கழிக்கப்படும்.

இதற்கான இழப்பீடு தொகையை சம்பந்தப் பட்ட மின் கம்பியாள் Line Man அவரது மேலதி -காரி அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து நம் கணக்கில் வரவு வைக்கப்படும்.

நன்றி...!

Thursday, November 26, 2020

அரசு முத்திரைத்தாள் விற்பனையாளர் உரிமம் பெறுவது எப்படி...?

வணக்கம் நண்பர்களே...!

நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக தேவையை பொறுத்து காலியிடம் இருந்தால் முறைப்படி விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.

💥 முத்திரை சட்ட விதி 25(1)(சி) படி முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களுக்கான தகுதிகள்  கீழ்கண்டவாறு:-

* எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

* 18 வயது முதல் உச்ச வயதில்லை. முத்திரைத்தாள் விற்பனையில் முன் அனுபவம், உரிமம் கோரும் பகுதிக்கான  தாசில்தார் வழங்கிய இருப்பிடச் சான்று, உடல் தகுதி காண்(கண் பார்வை நிலை உட்பட).

* அரசு டாக்டர் வழங்கிய சான்று, சொத்து மீதான செல்வ நிலை சான்று(தாசில்தார் வழங்கியது).

* பிணையமாக காட்டப்படும் சொத்து மீது வில்லங்கம் இல்லையென உரிய பதிவு அலுவலர் வழங்கிய சான்று
ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். 

* முன்னாள் ராணுவத்தினர், பொது பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் (உரிய சான்று வழங்கியது) ஆதி திராவிடர், பழங்குடியினர் (தாசில்தார் வழங்கியது) விதவைகள்(தாசில்தார் வழங்கியது) ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

💥 விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை:-

* போதிய கல்வித்தகுதி, முத்திரைத்தாள் விற்பனையில் முன் அனுபவம், உரிமம் கோரும் பகுதியில் வசித்தல், உடல் தகுதி, செல்வநிலை சான்று (solvency certificate) விபரங்களுடன் விண்ணப்பங்கள் இருத்தல் வேண்டும்.

* முத்திரைத்தாள் விற்பனை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் கோரி ஒவ்வொரு மாவட்ட பதிவாளருகம் தங்கள் பகுதிக்குட்பட்ட சார்பதிவகங்களில் உள்ள இடங்களில் வெளியிடப்பட வேண்டும். 

* அவ்வாறு வெளியிடப்படும் அறிவிப்புகள் மாவட்ட பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவகங்கள், கிராமச்சாவடி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் சார் ஆட்சியர்/கோட்டாட்சியர் அலுவலகம், துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகம், கிராம செயல் அலுவலர் அலுவலகம் போன்றவற்றில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஓட்டி விளம்பரப்படுத்தப்படும்.

* விண்ணப்பங்களை பரிசீலித்து முழு விவரங்களற்ற விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும்.


* தகுதியுள்ள நபர்களுக்கான நேர்முகத்தேர்வு அழைப்பு கடிதம் அனுப்பு் போது, நேர்முக தேர்விற்கு குறைந்தபட்சம் 1 வாரம் முன்னதாக அஞ்சல், விண்ணப்பதாரர்களை சென்று சேரும் வகையில் அனுப்பி வைக்கப்படும்.

* நேர்முகத்தேர்வின் போது அசல் ஆவணங்கள் பரிசீலிக்கப்படும்.

* நேர்முகத்தேர்வு முடிந்த பின்னர் நியமனம் செய்யப்பட்டோரின் பட்டியல் வெளியிடப்படும்.

* முத்திரைத்தாள் விற்பனையாளர் நியமனம் செய்யப்பட்டபின், நியமனம் செய்யப்பட்டோரின் முழு விவரம் பதிவுத் துறை அலுவலகங்களுக்கு உயர் அலுவலர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

நன்றி...!

Sunday, November 22, 2020

கிராம வளர்ச்சி திட்டம் GPDP



கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப் பணிகள் (அனைத்துறை பணிகள் உட்பட) கிராம சபையில் அங்கிகரிக்கப்பட்டு, அப்பணிகளின் விபரம், மற்றும் கிராம சபை தீர்மான பதிவேடு நகல் (ஸ்கேனிங் செய்து பதிவேற்றம் செய்தல்) Plan plus இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் மேற்கண்ட வழிமுறை படி #Planplus ல் பதிவேற்றம் செய்யப்பட்ட பணிகள் மட்டுமே செயல்படுத்த இயலும் என்பதால் கிராம வளர்ச்சி திட்ட அறிக்கை ஒப்புதலுக்காக நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பணிகளின் பட்டியல் விடுபாடின்றி  தயார் செய்து கிராம சபை கூட்ட பதிவேட்டில் பதிவு செய்து அதன் நகல் வட்டார அலுவலகத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டிட தெரிவிக்கப்படுகிறது.

(இப்பணிகள் தேர்வு செய்கையில்  மினி Tank (சின் டெக்ஸ்) பணியினை தவிர்த்து அதற்கு பதிலாக மற்ற குடிநீர் பணிகளை தேர்வு செய்யலாம் . 

ஊராட்சியின் அனைத்து பகுதிகளின் தேவைக்கு ஏற்ப பணிகளின் பட்டியலை தயார் செய்திட தெரிவிக்கப்படுகிறது.

பணி மாதிரிகள் கீழே சில தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர தேவைக்கு ஏற்ப மற்ற பணிகளையும் பட்டியலில் இடம்பெற செய்திட தெரிவிக்கப்படுகிறது.

#குடிநீர்_பணிகள் 🚰

1. புதிய குடிநீர் பைப் லைன் அமைத்தல்.

2. குடிநீர் பைப் லைன் விரிவுபடுத்தப்படுதல்.

3. வீதிபைப் அமைத்து தருதல்.

4. தரைமட்ட  நீர்தேக்க தொட்டி (GLR) அமைத்தல்.

5. தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி (sump) அமைத்தல்

6.மேல்நிலை  நீர்த்தேக்க தொட்டி அமைத்தல்.

7. புதிய ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்த குடிநீர் சப்ளை செய்தல்.

8 . ஊராட்சி திறந்த வெளி கிணறுகளை பராமரிப்பு செய்து, மூடு வலை அமைத்து, மோட்டார் பொருத்தி பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்தல்.

9. கிணறுகளை தூர்வாறுதல் மற்றும் ஆழப்படுத்துதல்.

10. ஆழ்துளை கிணறுகளை தூர்வாறுதல் மற்றும் ஆழப்படுத்துதல்.

11. புதிய ஆதுளை கிணறுகள் அமைத்து கைபம்பு பொருத்துதல்.

12. கைபம்பு மற்றும் ஊராட்சி கிணறுகளை சுற்றியுள்ள தரைதளம் பராமரிப்பு செய்தல்.

13. ஊராட்சியின் வருவாயை பெருக்க தனிநபர் குடிநீர் இணைப்புகள் வழங்க அரசு அனுமதி கோரல் .

13. அ.) நீர்த்தேக்க தொட்டிகள் பராமரிப்பு செய்தல்.

13. ஆ) கழிவு நீக்கம் செய்யப்பட்ட குடிநீர் மோட்டார்களுக்கு மாற்றாக புதிய மோட்டார்கள் பொருத்துதல்.

மற்றும் இதர குடிநீர் பணிகள் .

#சுகாதார_பணிகள் . 🚮💉🏥

14. தனி நபர்  இல்ல உறிஞ்சி குழிகள் அமைத்தல்.

15. சமுதாய உறிஞ்சி குழிகள் அமைத்தல்.

16. கழிவு நீர் கால்வாய்கள் ( சாக்கடை ) அமைத்தல்.

17. பொது கழிப்பி டங்கள் பராமரிப்பு செய்தல்.

18. IWSC மற்றும் IMSC பராமரிப்பு செய்தல்.

19. தனிநபர் கழிப்பிட பணிகள் .

20. தனிநபர் நிலங்களில்  உரக் குழிகள் அமைத்தல்.

21. திடக்கழிவு மேலாண்மை பணிகள் .

22.திரவ கழிவு மேலாண்மை பணிகள் .

22 A. பொதுகழிப்பிடம் அமைத்தல்.

22 B. மன்புழு உர கொட்டகை அமைத்தல்.

இதர சுகாதார சார்ந்த பணிகள் .

#சாலை_பணிகள் .🏞️🛣️🛤️🚦🚥

23. சாலை மேம்பாட்டு பணிகள் .

24. சாலை பராமரிப்பு பணிகள் .

25. புதிய சாலை அமைத்தல்.

26. கப்பி சாலை அமைத்தல்.

27. தார்சாலை அமைத்தல்

28. பேவர் பிளாக் சாலை அமைத்தல்.

28 A. கான்கிரிட் ரோடு அமைத்தல்.

29. பாலங்கள் அமைத்தல்.

30. சாலையோர கிணறுகளுக்கு பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைத்தல்.

31. சாலை ஓர தடுப்பு சுவர் அமைத்தல்.

32. சாலை ஓர மழைநீர் வடிகால் அமைத்தல்.

இதர சாலை பணிகள் .

*தெருவிளக்கு பணிகள் .*

33. புதிய தெருவிளக்குகள் அமைத்தல்.

#மழைநீர்_சேகரிப்பு_பணிகள் .⛈️🌦️🌊

34. நீர்வரத்து ஓடைகள் தூர்வாறுதல்.

35. ஏரி, குளம், குட்டை தூர்வாறுதல் மற்றும் ஆழப்படுத்துதல் மற்றும் கரைகள் மேம்பாடு செய்தல்.

36. மதகுகள் பராமரித்தல்

37. அரசு கட்டிடங்கள் மற்றும் ஊராட்சி நீர் ஆதாரங்களுக்கு  மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல்.

38. கசிவு நீர் குட்டைகள் அமைத்தல்.

39. புறம்போக்கு நிலங்களில் பண்ணை குட்டை அமைத்தல்.

40. தனிநபர் நிலங்களில்  பண்ணை குட்டைகள் அமைத்தல்.

41. தடுப்பணைகள் அமைத்தல்

42. புதிய குட்டைகள் அமைத்தல்.

இதர மழை நீர் சேகரிப்பு மேலாண்மை பணிகள் .

#கால்நடைகள்_சார்ந்த_பணிகள் .
🐂🐄🐐🐔🐓🐤🐣

43. ஆட்டு கொட்டகை அமைத்தல்

44. மாட்டு கொட்டகை அமைத்தல்.

45. கோழி வளர்ப்பு கூடம் அமைத்தல்.

46. மேய்ச்சல் சார்ந்த இடங்களில் கால்நடைகாக்கான நீர்தேக்க தொட்டிகள் அமைத்தல்.

47. கால்நடை தீவன பயிர் வளர்ப்பு .
மற்றும் இதனை சார்ந்த மற்ற பணிகள் .

🏜️🏝️🏞️ #சுற்றுசூழல்_பாதுகாப்பு_பணிகள் .

48. சாலை ஓர மரக்கன்றுகள் நடுதல்.

49. புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடுதல்.

#தனிநபர்_விவசாய_பணிகள் (MGNREGS பணிகள் )

50. கல் வரப்பு அமைத்தல்

51. மன் வரப்பு அமைத்தல்

52 .நில மேம்பாடு செய்தல்.

53. கிணறு அமைத்தல்.

53 அ) தனிநபர் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்தல்.

இதர MGNREGS விவசாய பணிகள் .

#அரசு_கட்டிடங்கள்.🏥🏢🏛️

54. ஊராட்சி மன்ற கட்டிடம்.

55. அங்கன்வாடி கட்டிடம்.,

56. பால் சொசைட்டி .

57. சமுதாய கூடம்.

58. பயணியர் நிழற் கூடம்.

59. கதிரடிக்கும் களம்.

60 . தானிய சேமிப்பு குடோன்.

60 அ) அரசு மற்றும் பள்ளிக்கட்டிடங்களுக்கு பாதுகாப்பு சுற்றுசுவர் அமைத்தல்

60 ஆ) ஊராட்சி கட்டிடங்கள் பராமரிப்பு செய்தல்.

இதர கட்டிட பணிகள் .

📢 🎤 #விழிப்புணர்வு_பணிகள் .

61. மழைநீர் சேகரிப்பு .

62. பெண் கல்வி .

63. குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு .

64. குழந்தை திருமணம் தவிர்த்தல்.

65. பிளாஸ்டிக் தடை செய்தல்.

66. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு .

67. பள்ளி இடை நிற்றல் தடுத்தல்.

68. சுகாதார விழிப்புணர்வு

இதர சமுதாய மேம்பாடு விழிப்புணர்வு பணிகள் .

69. ஊரக பூங்காக்கள் அமைத்தல்

70. உடற் பயிற்சி கூடம் அமைத்தல்

71. ஊரக விளையாட்டு பயிற்சி மையங்கள் ஏற்படுத்துதல்.

72. தனி நபர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குதல்.

73. தனி நபர் திறன் மேம்பாட்டு பயிற்சி கூடங்கள் அமைத்தல்.

74. பிற துறை மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் .

75 .பிற துறை ஒருங்கிணைப்புடன் நிறைவேற்றப்படும் பணிகள் .

மற்றும் உங்கள்  ஊராட்சிக்கு தேவைப்படும்  நமது துறை, MGNREGS  மற்றும் பிற துறை திட்டப் பணிகள் விடுபாடின்றி பட்டியலில் இடம் பெறச் செய்திட தெரிவிக்கப்படுகிறது.

(குறிப்பு - இப்பதிவு திட்டப் பணிகளின் பட்டியல் தயாரிக்க ஒரு மாதிரிக்காக மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது, உங்கள்  ஊராட்சிகளின் தேவைக்கு ஏற்ப பட்டியல் தயார் செய்து கொள்ள வேண்டி தெரிவிக்கப்படுகிறது)..

உங்க ஊராட்சியில் எப்போது கிராமசபை என்று விவரம் அறிய கீழுள்ள லிங்க் மூலம் அறியலாம்......

ஒரேசொத்தை_இருவருக்கு விற்றால்_அந்த_சொத்தை எப்படி_மீட்பது?



தான் சம்பாதித்த‍ பணத்தில் சிறுகச் சிறுக சேமித்து ஒரு சொத்தை வாங்குகிறோம். அப்படி வாங்கும் சொத்தை விற்பவர் இன்னொருவ ருக்கும் போலியான ஆவணம் தயார் செய்து விற்றிருந்தால் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.

அப்படித ஒரே சொத்தை (#One_Property) இருவருக்கு விற்பது (Two Buyers) சட்டப்படி குற்றம் (#CriminalOffence)ஆகும். அவ்வாறு ஒருவர் விற்பனை செய்திருந்தால் இரண்டாவதாக செய்த விற்பனை செல்லாது. இ ருந்தாலும், அந்த சொத்தை முதலாவதாக வாங்கியவர் சட்டப்படி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

#கிரிமினல்_வழக்கு 
-------------------------------------
நேரடியாக, போலிஸ் புகார் கொடுத்து, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வைக்கலாம். அப்போது, மோசடி செய்தவர், முன் ஜாமீன் அல்லது ஜாமீன் போடும்போது, போலிஸ் உதவியுடன், அவர் எந்த நீதிமன்றத்தில் மனு போட்டுல்லாரோ, அங்கு, ஒரு வழக்கறிஞர் வைத்து, intervene மனு செய்யலாம். அப்படி செய்யும்போது, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய வலியுறுத்தலாம். அப்போது, பிணை கிடைக்க, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றம் ஆணையிடும்போது, அங்கேயே அலைச்சல் இல்லாமல், பிரச்சினை முடிய வாய்ப்பு உள்ளது.

#பத்திரத்துறையில்_மாவட்ட #பதிவாளர்_மூலம்_ரத்து_செய்ய_மனு #கொடுப்பது.

அந்த இரண்டாவது பத்திரத்தை முறைப்படி ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்?

இரண்டாவதாக பதிவுசெய்யப்பட்டுள்ள பத்திரத்தின் பதிவுகளை ரத்துசெய்யக்கோரி, பதிவுச்சட்டம் 1908பிரிவு 82ன்கீழ் பதிவுத்துறை த் தலைவர் அவர்களுக்கு முதலில் உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி தங்களின் விண்ணப்பமானது தங்களது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும்.

மாவட்டப் பதிவாளர் அவர்கள், சமபந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை ஆய்வுசெய்வார்

உங்களது புகாரில் உண்மை இருப்பது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு தெரியவந்தால், இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட பத்தி ரஙளை ரத்துசெய்ய சார்பதிவாளர் அவர்களுக்கு உத்தரவிடுவார்.

பதிவுச்சட்டம், 1908-பிரிவு 83ன்கீழ் சட்டத்திற்கு புறம்பாக இரண்டு நபர்களுக்கு ஒரே சொத்தை விற்பனை செய்த நபர் மீது, காவல்நி லையத்தில் புகார் அளித்து சட்டப்ப டியான நடவடிக்கை எடுக்கவும் சார்பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

#சிவில்_வழக்கு :

இது போக, இரண்டாவது பத்திரம் பதிந்து மூன்று வருடத்திற்குள் இருந்தால், சிவில் வழக்கு போடலாம். நீதிமன்ற கட்டணம் நூறு ரூபாய்க்குள்தான் வரும். சம்பந்தம் இல்லாமல், நம் சொத்தை, வேறு நபர்கள் விற்கும்போது, மார்க்கெட் மதிப்புக்கு, நீதிமன்ற கட்டணம் செலுத்த தேவை இல்லை. மோசடி கிரைய பத்திரம் செல்லாது என்று விளம்புகை பரிகாரம் கேட்கலாம்.

நில அளவை கற்கள் (Survey Stones)



“A” கிளாஸ் கற்கள் ( “A” Class Stones)
முதலில் நில அளவையில் “A”கற்கள் மூன்று கிராமங்கள் சந்திக்கும் இடங்களிலும் அதற்கு அடுத்து இரண்டு பக்கங்களிலும் “A”கற்கள் நடப்படுகின்றன.
“A” கிளாஸ் கற்கள் அளவு: 90cm × 25cm × 25cm.

“B” கிளாஸ் கற்கள் ( “B” Class Stones)
ஒவ்வொரு முச்சந்தியிலும், “G” லயன் எனப்படும் Giometrival Line ஆரம்பிக்குமிடத்திலும் நடப்படும்.
“B” கிளாஸ் கற்கள் அளவு: 60cm × 15cm × 15cm

நில அளவை கற்கள் நடப்படும் இடங்கள்...!
==============================

1. Open Block–களில் நில அளவை கற்கள் “A” கிளாஸ் கற்கள் (90cm × 25cm × 25cm) டவுன் நில அளவை எல்லையிலும், கோணமானி கொண்டு அளக்கக் கூடிய இடங்களில் கற்கள் நடப்பட வேண்டும்.

Medium-பிளாக்குகளில் கோணமானி கொண்டு அளக்கக்கூடிய இடங்களில் அதாவது 3 அல்லது 4 தெரு சந்திக்கும் இடங்களில் பூமிக்கு அடியில் “A” கிளாஸ் கற்கள் அளவு: 90cm × 25cm × 25cm நடப்பட வேண்டும். தலையில் அம்புக்குறியும் குழியும் இருக்க வேண்டும்.

“B” கிளாஸ் கற்கள் அளவு: 60cm × 15cm × 15cm நில அளவை புலங்கள் காலியிடமாக இருந்தால் நடப்பட வேண்டும் அல்லது சுவராக இருந்தால் தார் மார்க் போட வேண்டும். டவுன் நில அளவை எல்லையில் “B” கிளாஸ் கற்கள் நடப்பட வேண்டும்.

சங்கிலி நில அளவை கல் (Chain Survey Stone) 30cm × 15cm × 15cm, இந்த கற்கள், இரண்டு கோணமானி கொண்டு நடப்படும் கற்களில் லயனில் இடையில் நடப்பட வேண்டும். கோணமானி நில அளவை செய்ய வேண்டியதில்லை. தலையில் “+” மார்க் அடிக்க வேண்டும்.

நில அளவை மற்றும் எல்லைகள் நிர்ணயச் சட்டம், 1923 இன் படி,
ஒவ்வொரு நிலச்சுவான்களும் அவசியம், நில அளவை கற்களை பராமரிக்கப்பட வேண்டும். அவர்களே நில அலவை கற்களை சொந்த செலவில் புதுப்பித்துக் கொண்டும், ரிப்பேர் செய்து கொண்டும், வரலாம். 

அப்படி அவர்கள் நில அளவை கற்களை எதுவும் செய்யாது இருந்தால், அரசே கற்களை புதுப்பித்து நில அளவை கற்களின் கிரயம், நடப்பட்ட கல்லின் கூலித் தொகையையும் சேர்த்து செலவு தொகைகளை விகிதாசாரப்படி பிடித்தம் செய்யப்படும். 

[பிரிவு 15(1)]
நில அளவை கற்களை யாராவது, சேதப்படுத்தினாலும், காணாமற்போனாலும், அப்புறப்படுத்தி இருந்தாலும் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டாச்சியருக்கு அறிக்கை கொடுப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. 

[பிரிவு 16(c)]
நில அளவை கற்கள் சேமிப்புக் கிடங்கு(Survey Stone Depot Register)
காணாமல் போன நில அளவை கற்களை வேறு கற்கள் நடுவதற்காக நில அளவை கல் காண்ட்ராக்டரிடம் வாங்கக் கூடிய கற்கள், நில அளவை கற்கள் சேமிப்புக் கிடங்கு கணக்குப் பதிவேட்டில் இருக்கும்.

நில அளவை சம்மந்தமாக கிராம நிர்வாக அலுவலரின் பணிகள்
================================

1. அரசால் கொடுக்கப்பட்ட நில அளவுப் புத்தகம், கிராம “அ” பதிவேடு, சிட்ட, மற்றும் புதிதாக தயாரிக்கும் அடங்க்ஜல், புதிய சிட்ட, நில அளவை கற்கள் சேமிப்புக் கிடங்கு பதிவேடு, நில அளவை கற்கள் படம், கற்கள், நில அளவை கருவிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

2. நில அளவை கற்கள், பராமரிக்க வேண்டிய கற்களை 1000 கற்கள் வரும்படி பிரித்து தணிக்கை மாதாமாதம் முன்னேற்ற அறிக்கை தயாரித்து, வருவாய் ஆய்வாளர் மூலமாக நில அளவருக்கு அனுப்ப வேண்டும்.

3. நில அளவை கற்கல் கிடங்கில் உள்ள இருப்பு கற்களை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும்.

4. கல் தணிக்கையின் போது கற்கள் காணாமற் போனால் அதனை புதுப்பிக்க 15 (2) அறிவிப்பை சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு கொடுக்கப்பட வேண்டும். அறிக்கையில் பிக்கா வட்ட நில அளவையர் கையெழுத்து வாங்கி இருக்க வேண்டும்.

5. கிராமத்தில் பராமரிக்க வேண்டிய நில அளவை கற்களை யாராவது அப்புறப்படுத்தியிருந்தால், வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

6. வாய்க்கால், சாலை, இதர விவரங்கள் அழிக்கப்பட்டால் உடனே அறிக்கை கொடுக்க வேண்டும்.
7. கல் டிப்போவிலிருந்து நில அளவை கற்கள் விலைக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் மனைப்பிரிவுக்கு கற்கள் கிரயம் செய்யக் கூடாது.

Friday, November 20, 2020

பட்டா பிழைத் திருத்தம்

நில உடமை மேம்பாட்டுத்திட்டத்திலும், கணினி பதிவிலும் நிறைய தவறுகள் இருக்கிறது என்பதை வருவாய் துறை அலுவலர்கள் ஒப்புக்கொண்டு உள்ளார்கள் ஆகவே,.

நமது நிலம் வேறு ஒருவருக்கு பிழையாக பட்டா அளிக்கப்பட்டு இருந்தால் அதற்காக  நாம் பதட்டமடைய தேவையில்லை எளிய வழியில் 60 நாட்களில் நாம் தவறை சரிசெய்து மீண்டும் பழைய பெயருக்கே பிழையை திருத்தி அணைபெறலாம்.

#அதற்கான_வழிமுறைகள்.

திங்கள் கிழமை மனுபெறும் நாளில் இந்த விண்ணப்பம் செய்யக் கூடாது. தனியாக பதிவு அஞ்சலில் மட்டுமே மனு செய்யலாம்.

முதலில் கோரிக்கை விண்ணப்பம் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். இவர்கள் தான் பிழை திருத்தம் செய்து ஆணையிடும் அதிகாரம் உள்ளவர்கள்.

#விண்ணப்பம்_மாதிரி.

நில உடமை மேம்பாட்டு திட்டத்தில் ஏற்பட்ட பிழை திருத்தம் வேண்டி விண்ணப்பம்.

அல்லது

கணினி சிட்டா பதிவேற்றத்தில் ஏற்பட்ட பிழை திருத்தம் வேண்டி விண்ணப்பம்.

அல்லது

தவறாக வழங்கப்பட்ட பட்டா பெயர் பிழை திருத்தம் வேண்டி விண்ணப்பம்

இந்த மூன்றில் உங்களுக்கு பொருத்தமான தலைப்பை தேர்வு செய்யுங்கள்

........................ பிழை திருத்தம் வேண்டி விண்ணப்பம் 
(பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன்) தேதி..........

அனுப்புநர் ; 
பெயர் 
முகவரி.

பெறுநர்,
மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் 
............. மாவட்டம்

அய்யா,

பார்வை 
1. பத்திர நகல் 
2. எனது பெயருக்கு உள்ள பிழைக்கு முந்தைய சிட்டா, அடங்கல், மற்றும் "அ" பதிவேட்டின் நகல்
3. பிழையாக அளிக்கப்பட்டு உள்ள சிட்டா நகல்

பொருள்; ................. பிழை திருத்தம் வேண்டி மனு

பிரசாணைக்கு உரிய நிலம் விபரம்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம் ,,,,,,,,,,,,,,,,,,, தாலுக்கா ,,,,,,,,,,,,,,,,,,,,,,, கிராமம் ,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, சர்வே எண்/எண்கள்

மேற்படி சர்வே என்னுடைய நிலம் ,,,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம் ,,,,,,,,,,, தாலுக்கா,,,,,,,,,,,,,,,,,,,,,, கிராமத்தில் வசிக்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,, என்பவற்றின் மகன்,,,,,,,,,,,,,,,,,, ஆகிய எனக்கு உரிமையானதாகும்.

ஆனால் தற்பொழுது கிராம பதிவேட்டில் ,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,தாலுக்கா,,,,,,,,,,,,,,,,,,என்பவற்றின் மகன்,,,,,,,,,,,,,,,,என்றவரின் பெயருக்கு தவறாக பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது

ஆகவே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம் ,,,,,,,,,,,,,,,,,,, தாலுக்கா ,,,,,,,,,,,,,,,,,,,,,,, கிராமம் ,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, சர்வே எண்/எண்கள் கொண்ட எனது நிலத்தின் மீது தவறாக பதிவு செய்துள்ள கிராமணக்கணக்கு பிழையை சரி செய்து மீண்டும் ,,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம் ,,,,,,,,,,, தாலுக்கா,,,,,,,,,,,,,,,,,,,,,, கிராமத்தில் வசிக்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,, என்பவற்றின் மகன்,,,,,,,,,,,,,,,,,, ஆகிய எனது பெயருக்கே மாற்றி பதிவு செய்ய ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் பிழை திருத்தம் செய்தபிறகு என் பெயருக்கான சிட்டா  நகல், அடங்கல் நகல்  , கிராம  பதிவேட்டில் நகல் அளித்து உத்தரவிடவும் வேண்டுகின்றேன்

இப்படிக்கு 
.....................
#இணைப்புகள்

1. பத்திர நகல் 
2. எனது பெயருக்கு உள்ள பிழைக்கு முந்தைய சிட்டா, அடங்கல், மற்றும் "அ" பதிவேட்டின் நகல்
3. பிழையாக அளிக்கப்பட்டு உள்ள சிட்டா நகல்

அலுவலக விவரங்கள் கேட்கும் Rti மனு...!

வணக்கம் நண்பர்களே...!

அலுவலக விவரங்கள் கேட்கும் Rti மனு...!

ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்.

அனுப்புநர் :-

                        XXXXXXXXXX

பெறுநர் :-

                   XXXXXXXXXX

பொருள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 . 6(1)-ன் கீழ் மனு.

தாங்கள் அலுவலகத்தின் கீழ்காணும் விவரங்களை எனக்கு தகவலாக வழங்கவும்.

வணக்கம்...

1) தாங்களது துறையின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் பற்றிய விபரங்களை வழங்கவும் (பிரிவு 4(1)(b)(i))

2) தங்கள்து துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பணிகளை பற்றிய விபரங்களை வழங்கவும் 
(பிரிவு 4(1)(b(ii))

3) அலுவலக ஊழியர்களின் விபரம் மற்றும் அவர்களின் ஊதிய விபரங்கள்(பிரிவு 4(1)(b)(x)(x))
4) மற்றும் இதர பிரிவுகளில் குறிப்பிட்டவைகள் தேவைக்கேற்ப.

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் பிரிவு 4(1)(b)-ல் உள்ள தகவல்களை கோரினால் மட்டுமே, அரசு அலுவலக நடைமுறையில்  வெளிப்படைத்தன்மையை கொண்டு வரமுடியும் மற்றும் அலுவலர்களுக்கு ஒரு பொறுப்புடைமையை உருவாக்க முடியும் இதுதான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கமாகும். 

இந்த பிரிவில் உள்ள தகவல்களை கோரினால், அவைகளை எந்தவித விதிவிலக்கு கொண்டும் குறிப்பாக பிரிவு 8, 11 எதுவும் பிரிவு 4(1)(b)-யை கட்டுப்படுத்தாது.ஆனால் இன்று தகவல் கோருபவர்கள் அனைவரும் இந்த பிரிவு 4(1)(b)-ல் உள்ள தகவல்கள் எதையும் கோருவதில்லை.

நான் யாரையும் குறை கூறவில்லை. பிரிவு 4(1)(b)-ல் உள்ள தகவல்களை யவர் ஒருவர் அவரது அனைத்து தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவில் கேட்கின்றாரோ, அவர்தான் உண்மையாக தஅஉ சட்ட ஆர்வலர் என்று தங்களை அழைத்து கொள்ளலாம் என்பது எனது கருத்து.

தகவல் கோருவதற்கு கட்டணமாக ரூ. 10-க்கு நீதிமன்ற வில்லை இணைத்துள்ளேன்.

இப்படிக்கு

நன்றி....!

அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்


அரசு ஆணை எண்: 114

அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை கையாள வேண்டிய வழிமுறைகளை பற்றி 2.8.2006 தேதியிட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையினரின் அரசாணை எண்.114, 66, 89, பற்றி தெரிந்து கொள்வோம்.

அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கடிதம் கொடுக்கும் போது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் உடனே வாங்கி கொண்டதற்கான ஏற்பு ரசீது (அக்னாலெட்ஜ்மெண்ட்) மனுதாரருக்கு கொடுக்க வேண்டும்.
அரசு அலுவலர் கொடுக்கும் ஏற்பு ரசீதில் மனுதாரரின் பெயர், முகவரி, யாருக்கு என்ன விசயமாக அனுப்பபட்டுள்ளது என்ற விவரமும், கடிதம் வாங்கும் அலுவலரின் கையெழுத்தும், அவர் வகிக்கும் பதவியின் பெயரும், அலுவலக முத்திரையும் தேதியுடன் இருக்க வேண்டும்.
தபால் மூலம் கடிதம் அனுப்பும் போதும் அதற்கான ஏற்பு ரசீது மனுதாரர்க்கு அதிக பட்சம் 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்கபட வேண்டும்.
அனுப்பும் புகாரின் மீது அதிகபட்சம் 60 தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க 60 தினத்திற்கு மேல் ஆகும் என்றால் இடைக்கால பதிலும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையும், மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் 60 தின்ங்களுக்குள் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகள்படி கடிதங்களை கையாள அரசு, ஆணை 114 வலியுறுத்துகிறது. [அரசு ஆணை 114 என்பது அரசு ஆணை 66(23.02.1983) அரசு ஆணை 89(13/05/1999) மற்றும் மத்திய அரசு ஆணை 13013/1/2006(5.5.2006) ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது] எனவே, இனி நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு கடிதம் கொடுத்தால் அரசாணை எண்கள்: 114, 66, 89-ன் படி ஏற்பு ரசீது கேட்டு வாங்குங்கள். இதுவே நமக்கு இறுதி நிவாரணம் கிடைக்க வழி வகுக்கும். அரசு அலுவலகங்களில் அரசாணைப்படி ஏற்பு ரசீது கொடுக்க மறுத்தால், அந்த அதிகாரியிடம் ஏற்பு ரசீது கொடுக்க இயலாது என கூறுவதனை எழுதி வாங்குங்கள் அல்லது அவரது கூற்றினை பதிவு செய்து கொண்டு மாவட்ட அல்லது மாநில அளவிலான துறை சார்ந்த மேலதிகாரிகளுக்கு புகாராக அனுப்புங்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

பஞ்சாயத்தில் வீடு கட்ட பஞ்சாயத்து போர்டு அனுமதி...!

வீட்டுக்கு வரைபடம் போடுவது முதல் வேலை வீட்டுக்கான வரைபடத்தை வைத்துதான் வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்
வங்கியிலிருந்து வீட்டுக் கடன் வாங்காமல் வீடு கட்டுவதானாலும் வரைபடம்தான் முதல் தேவை. 

இந்த வரைபடத்தை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு அனுப்பி அவர்கள் வழங்கும் அனுமதியின் பேரில்தான் கட்டுமான வேலைகளைத் தொடங்க முடியும். 

நமது பட்ஜெட் எவ்வளவு அல்லது நமக்கு எத்தனை சதுர அடியில் வீடு தேவைப்படுகிறது என்பதன் அடிப்படையில் வீட்டுக்கான வடிவமைப்பைச் செய்து கொள்ள வேண்டும். 

நமது மனையின் பரப்பளவு அதில் அனுமதிக்கப்பட்ட கட்டுமானப் பரப்பளவு இவற்றைப் பொறுத்து நம் கனவு வீட்டை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். அரசு அங்கீகாரம பெற்ற ஒரு வடிவமைப்பாளரிடம் நமது தேவைகளுக்கேற்ப இந்த வடிவமைப்பைக் கேட்டு வாங்க வேண்டும்.

அடுத்ததாக மின் இணைப்பு பெறுவதும், தண்ணீருக்கான ஏற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும் நமக்கு உடனடி மின் இணைப்பு தேவைப்படுகிறது என்று அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தால், மின்வாரிய ஊழியர்கள் வந்து இடத்தைப் பார்வையிட்ட பிறகுதான் மின் இணைப்புப் பெற எவ்வளவு செலவாகும் என்பதைச் சொல்வார்கள் ஏனென்றால், மனைக்கு அருகிலேயே மின் கம்பங்கள் இருந்தால் அதிச் செலவாகாது, உடனடியாக இணைப்பு எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், அருகே மின்பாதைகள் இல்லாத இடாக இருந்தால், நமது இடம் வரை மின்கம்பங்கள் நட்ட பிறகுதான் மின் இணைப்பு கிடைக்கும்.

மின் இணைப்புப் பெற, நம்மைப் பற்றிய விவரங்களுடன், கிராம நிர்வாக அலுவலரிடம், வாங்கிய சான்று, பட்டா மற்றும் ஆவணங்களின் நகல்கள் போன்றவற்றின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த இடத்தில் வசிக்கிறோம் என்பதற்கான சான்று நமக்கு எதுவும் இருக்காது என்பதால், இந்த ஆவணங்களை இணைப்பது அவசியமாகும். 

இந்தக் காலகட்டத்தில் கட்டட வரைபட அனுமதி வாங்கப்பட்டிருந்தால், அதில் ஒரு நகலையும் சேர்த்து இணைப்பது நல்லது. மின்வாரிய ஊழியர்கள் வந்து பார்வையிட்டு, மின் இணைப்புக்கான முன் ஏற்பாடுகளை வலியுறுத்துவார்கள்.

அடுத்ததாக தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொள்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். நிலத்தடி நீரை போர் மூலமாக எடுத்துப் பயன்படுத்தலாம் அல்லது லாரிகளில் வாங்கி கட்டுமானத்திற்குப் பயன்படுத்தலாம். அது அவரவர் வசதியைப் பொறுத்தது. அடுத்ததாக குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் இணைப்பு பெறும் வசதி உங்கள் பகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி இருந்தால் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம். காலி மனைக்கு CMDA அல்லது DTCPயிடம் இருந்து பெறப்பட்ட அங்கீகார நகல், சொத்துவரி கட்டிய ரசீது, வீட்டின் வரைபடத்துடன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வெளியேறச் செய்யப்பட்டுள்ள வசதிகள் என்னென்ன போன்ற விஷயங்களை அரசு அங்கீகாரம் பெற்ற பிளம்பர் ஆய்வு செய்த சான்றுடன், விண்ணப்பிக்க வேண்டும். 

இல்லையென்றால் நாமே பிரத்யேகமாக வசதிகளைச் செய்து கொண்டு, அரசாங்கச் செலவில் குடிநீர், கழிவுநீர் இணைப்பு வசதி வரும்வரை காத்திருக்க வேண்டும். 

நாம் வீடு கட்டப்போகும் இடத்துக்கு இதுவரை சொத்துவரிதான் கட்டி வந்திருப்போம் அதாவது காலி மனை என்கிற அடையாளம்தான் இருக்கும். இதை மாற்றி வீட்டு வரி என்கிற வகைக்குள் கொண்டுவர வேண்டும். 

கட்டட வரைப்பட அனுமதி மற்றும் விற்பனைப் பத்திரத்துடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பை அணுகினால், இந்த மாற்றத்தைச் செய்து நமது வீட்டுக்குச் சொத்து வரி விதிப்பார்கள்.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்...!

தமிழகத்தில் சுமார் 27,000 அங்கீகாரமில்லாத லே அவுட்டுகளில்  சுமார் 13.5 லட்சம் மனைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 20.10.16-க்குமுன் மனையை பதிவுசெய்திருந் தால் மனைகளின் உரிமையாளர்கள், அதனை இப்போது யாருக்கு வேண்டுமானா லும் விற்கலாம். இந்த மனைகளை வாங்கு பவர்களும் யாருக்கு வேண்டுமானலும் விற்பனை செய்யலாம். ஆனால்  பிற்காலத்தில் வீடு கட்டும்போது, அப்ரூவல் மனை என்கிற அங்கீகாரம் தேவைப்படும். அப்போது, மனையின் உரிமையாளர் அல்லது லேஅவுட் போட்டிருப்பவர், தங்களுடைய மனையை முறைப்படுத்தக்கோரி விண் ணப்பிக்கலாம். இதற்கு அந்த லேஅவுட்டின் உரிமையாளர், 20.10.16-க்கு முன் ஒரு மனையையாவது பதிவு செய்து தந்திருக்க வேண்டும்.

அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க அந்த மனையானது அனைவருக்கும் உரிமையுள்ள பொதுச் சாலையில் அமையப்  பெற்றிருக்க வேண்டு ம் என்ற விதிமுறையைத் தளர்த்தி, பொதுச் சாலையிலிருந்து மனையை இணைக் கும் வழிப்பாதையைப் பயன்படுத்த மனை உரிமையாளருக்கு உரிமை இருந்தால் போதும் என இப்போது மாற்றப் பட்டுள்ளது.

அங்கீகாரம்பெறாத லேஅவுட்டுகளில், ஏற்கெனவே 20.10.16 தேதிக்குள் பத்திரப்பதி வு செய்தது, அந்த லேஅவுட்டில் மூன்றில் இரண்டு பங்காக இருக்க வேண்டும் என் று ஆரம்பத்தில் விதிமுறை வகுக்கப்பட்டது. அது 20.10.16-க்குள் ஒரு லே அவுட்டில் ஒரே ஒரு மனை கிரயம் செய்யப்பட்டிருந்தால் கூட முழுமையாக அந்த மனைப் பிரிவையே டி.டி.சி.பி மூலம் முறைப் படுத்தலாம் என விதிமுறை மாற்றப்பட்டிரு க்கிறது. மேலும், திறந்தவெளி ஒதுக்கீட்டுக் கட்டணம் நீக்கப்பட்டு உள்ளது.

அதிகக் கட்டணங்கள்...?

தற்போதைய நிலையில், மேம்பாட்டுக் கட்டணம் (Development charge), ஒழுங்கு முறைக் கட்டணம் (Regularisation Charge) மற்றும் சீராய்வுக் கட்டணம் (Scrutiny Fees) ஆகிய மூன்று கட்டணங் களைச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

மேம்பாட்டுக் கட்டணம்...?

மேம்பாட்டுக் கட்டணம், மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து ஒரு சதுர மீட்டருக்கு மாநகராட்சி எனில் ரூ.500-ம், சிறப்பு மற்றும் தேர்வுநிலை மாநகராட்சி எனில் ரூ.250, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை மாநகராட்சி எனில் ரூ.150-ம், நகர பஞ்சாயத்து எனில் ரூ.75-ம், கிராமப் பஞ்சாயத்து ரூ.25-ம் வசூலிக்கப்படுகிறது.  

இப்படி வசூலிக்கப்படும் மேம்பாட்டுக் கட்டணம் அந்த உள்ளாட்சி அமைப்புகளின் தனிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, குடிநீர், சாலை, தெரு விளக்குகள் போன் ற அடிப்படை வசதிகளை வழங்க செலவிடப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறைக் கட்டணம்...!

இக்கட்டணமும் மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து, சதுர மீட்டருக்கு மாநகராட்சி எனில் ரூ.100-ம், சிறப்பு மாநகராட்சி எனில் ரூ.60-ம், முதல்நிலை மற் றும் இரண்டாம் நிலை மாநகராட்சி எனில் ரூ.60, நகரப் பஞ்சாயத்து எனில் ரூ.30, கிராமப் பஞ்சாயத்து எனில் ரூ.30-ம் கட்ட வேண்டும்.

சீராய்வுக் கட்டணம்...!

சீராய்வுக் கட்டணமாக மனை ஒன்றுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். ஒருவர் ஒரு லே அவுட்டில் மூன்று சென்ட் வீதம் 10 மனைகள் என மொத்தம் 30 சென்ட் வாங்கி யிருந்தால், அவர் சீராய்வுக் கட்டணமாக மட்டுமே ரூ.5,000 செலுத்த வேண்டும்.  
 
மாநகராட்சி பகுதியில் ஒருவர், 1,200 சதுர அடி மனையை டி.டி.சி.பி அப்ரூவல் மனையாக மாற்ற ரூ.67,700-யைக் கட்டணமாக செலுத்த வேண்டிவரும். இதுவே கிராமப் பஞ்சாயத்து என்றால் ரூ.6,500 கட்ட வேண்டும். 

இதுதவிர, அதிகாரிகளை மனை இருக்கும் இடத்துக்கு அழைத்துவரும் செலவுகளும் இருக்கின்றன.

நன்றி....!

Friday, November 13, 2020

பாகப்பிரிவினை


பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்வது எப்படி...?
பகிர்வுக்கான வழிகள் என்ன...?

💥பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்வதற்கான செயல்முறை...!

1. பகிர்வு என்றால் என்ன...?

'பகிர்வு' என்ற சொல் ஒட்டுமொத்த பகுதியையும் பிரிப்பதைக் குறிக்கிறது. பகிர்வு என்பது ஒரு பிரிவைக் குறிக்கிறது, அதாவது ஏதாவது ஒரு பகுதியை யாரோ ஒருவருக்கு வழங்குவதாகும். 

மாற்றாக, முழுவதையும் பகுதிகளாகப் பிரிக்க, அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக இருக்கும், மேலும் அதன் வேறுபட்ட இருப்பைக் கொண்டிருப்பது பகிர்வு என்று அழைக்கப்படுகிறது.

2. பகிர்வுக்கான வழிகள் யாவை...?

ஒரு பகிர்வை பின்வரும் வழிகளில் செயல்படுத்தலாம்:-

பகிர்வு பத்திரம்குடும்ப தீர்வுஒரு வழக்கு நிறுவுதல்...!

பகிர்வு பத்திரத்தில், இணை உரிமையாளர்களிடையே பரஸ்பர ஒப்புதலால் பகிர்வு ஏற்படுகிறது. 

பகிர்வு பத்திரம் ஒரு முத்திரை காகிதத்தில் செயல்படுத்தப்பட்டு துணை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அதன் பதிவு மூலம் சட்டத்திற்கு ஒரு சட்ட மற்றும் பிணைப்பு விளைவு வழங்கப்படுகிறது. 

பேச்சுவார்த்தை மற்றும் பேச்சு மூலம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்படுகிறது. 

நீதிமன்றத்தில் எந்தவொரு சச்சரவுகளையும் தடுக்கவும், குடும்ப சொத்துக்களை அமைதியாகப் பிரிக்கவும் இது செய்யப்படுகிறது.

குடும்ப தீர்வு :-
*************

ஒரு பகிர்வு பத்திரத்தின் அதே வடிவத்தில் ஒரு தீர்வு ஒப்பந்தம் வரையப்படுகிறது, ஆனால் அதற்கு எந்த பதிவு மற்றும் முத்திரையும் தேவையில்லை. 

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குடும்ப தீர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது கட்டாயமாகும்.

பகிர்வு வழக்கு :-
****************

 அனைத்து உரிமையாளர்களும் சொத்தின் பிரிவு விதிமுறைகளுக்கு உடன்படாதபோது, ​​வெவ்வேறு விதிமுறைகளை விரும்பினால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இணை உரிமையாளர்கள் அதிகார வரம்பைக் கொண்ட நீதிமன்றத்தில் ஒரு பகிர்வு வழக்கு தாக்கல் செய்யலாம்.

 3. பகிர்வை நிர்வகிக்கும் சட்டம் என்ன...?

பின்வரும் இரண்டு சட்டங்கள் இந்தியாவில் பிரிவினையை நிர்வகிக்கின்றன...!

ஒரு இந்து கூட்டுக் குடும்பத்தைப் பிரித்தபோது: இந்து வாரிசு சட்டம், 1956

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணை உரிமையாளர்களால் கூட்டாக சொந்தமான எந்தவொரு சொத்தையும் பிரிக்கும்போது :-

இந்து பிரிக்கப்படாத குடும்பம் [HUF] மற்றும் சொத்தின் இந்து பகிர்வு சட்டம் 1892

4. பகிர்வுக்கு யார் வழக்கு தாக்கல் செய்யலாம்...?

பகிர்வுக்கு வழக்குத் தாக்கல் செய்யத் தகுதியுள்ள நபர்களின் வகுப்பை வரையறுக்க அல்லது குறிப்பிட எந்தவொரு சட்டரீதியான வழிகாட்டுதல்களோ அல்லது சட்டமோ குறிப்பாக வகுக்கப்படவில்லை. 

எனவே, இந்தியாவில் பகிர்வுக்கு வழக்குத் தாக்கல் செய்வதிலிருந்து யாரையும் தடைசெய்யும் இடத்தில் வெளிப்படையான கட்டுப்பாடு இல்லை என்று ஊகிக்க முடியும். 

இதற்கு நேர்மாறாக, எந்தவொரு நபரும் (அத்தகைய நபருக்கு சொத்தில் எந்தவிதமான தற்செயலான அல்லது சொந்த ஆர்வமும் இல்லாதிருக்கலாம் அல்லது இல்லாதிருந்தால்) பகிர்வுக்கு ஒரு வழக்கு தாக்கல் செய்யலாம். 

எந்தவொரு அல்லது அனைத்து சொத்தின் இணை உரிமையாளர்களும் வெளியீட்டில் பகிர்வுக்கு ஒரு வழக்கை தாக்கல் செய்யலாம். 

ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருக்கும் சூழ்நிலையில், அவர்கள் அனைவரும் ஒரு பகிர்வு வழக்கு தாக்கல் செய்ய தயாராக இல்லை என்றால், அனைத்து வாரிசுகளும் கூட்டாக பகிர்வுக்கான ஒரு வழக்கில் பங்கேற்க தேவையில்லை.

பகிர்வு கோரப்பட்ட சொத்தின் அனைத்து ஆவணங்களையும் வைத்திருப்பது பொருத்தமற்றது. 

அதன் சான்றளிக்கப்பட்ட நகல்கள் மற்றும் சொத்தின் சந்தை மதிப்பின் சான்றிதழ் ஆகியவற்றை துணை பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெறலாம். கூடுதலாக, பெற்றோர் / தாத்தா பாட்டிகளின் இறப்பு சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடமிருந்து பெறப்பட வேண்டும்.

இந்தியாவில் பகிர்வு வழக்கு தாக்கல் செய்வதற்கான செயல்முறை என்ன? இந்தியாவில் ஒரு பகிர்வு வழக்கு அல்லது எந்தவொரு வழக்கையும் தாக்கல் செய்ய ஒரு குறிப்பிட்ட செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். 

கட்டாய நடைமுறை பின்பற்றப்படாவிட்டால், நடைமுறை முறையற்ற தன்மையின் அடிப்படையில் வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம்.

💥பகிர்வு வழக்கு தாக்கல் செய்ய பின்பற்ற வேண்டிய படிள் பின்வருமாறு :-

வழக்கு / வாதத்தை தாக்கல் செய்தல்: சாதாரண நபர்களைப் பொறுத்தவரை, ஒரு வழக்கு என்பது அத்தகைய வழக்குத் தாக்கல் செய்யும் தரப்பினரால் செய்யப்பட்ட புகார் அல்லது குற்றச்சாட்டுகளின் சட்ட வடிவமாகும். 

நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட வடிவமைப்பிற்கு ஏற்ப வாதத்தை வரைவு செய்து அச்சிட வேண்டும். 

வாதத்தை தாக்கல் செய்யும் கட்சி வாதி என்றும் எதிர்க்கட்சி பிரதிவாதி என்றும் அழைக்கப்படுகிறது. 

பரிந்துரைக்கப்பட்ட வரம்புக்குள் வாதம் தாக்கல் செய்யப்படாவிட்டால், அத்தகைய வழக்கு நேரத்திற்கு தடை
விதிக்கப்படும். 

💥வாதத்தில் குறிப்பிடப்பட வேண்டிய தேவையான விவரங்கள் பின்வருமாறு :-

அதிகார வரம்பை தீர்மானிக்க நீதிமன்றத்தின் பெயர்.

வழக்குக்கான கட்சிகளின் பெயர்.

கட்சிகளின் அஞ்சல் முகவரி.

அத்தகைய புகாரின் தன்மை போன்றவை கூடுதலாக, வாதத்தில் உள்ளடக்கம் அவரது அறிவுக்கு உண்மை என்று சான்றளிக்கும் வாக்குமூலம் அல்லது சரிபார்ப்பு இருக்க வேண்டும்.

வக்கீல் / வக்காலத்து அதிகாரம்:  அல்லது பவர் ஆஃப் அட்டர்னி என்பது முறையான ஆவணமாகும், இது சம்பந்தப்பட்ட விஷயத்தில் வாடிக்கையாளரைப் பிரதிநிதித்துவப்படுத்த வாடிக்கையாளரால் வழக்கறிஞரின் அதிகாரத்தை வழங்குவதாகும். 

வழக்கறிஞரின் அதிகாரம் வாடிக்கையாளரின் வழக்கை வாடிக்கையாளரின் நியமிக்கப்பட்ட முகவராக வாதிட வழக்கறிஞருக்கு உரிமை உண்டு. 

இது ஒரு கட்டாய ஆவணம் மற்றும் அத்தகைய ஆவணம் இல்லாத நிலையில், வாடிக்கையாளரை பிரதிநிதித்துவப்படுத்த வழக்கறிஞர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.

💥நீதிமன்ற கட்டணம் :-

வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன் முறையான நீதிமன்றக் கட்டணத்தை முழுமையாக செலுத்துவது அவசியமான படியாகும்.

வெவ்வேறு வகையான வழக்குகள் மற்றும் மாநிலங்கள் முழுவதும் வெவ்வேறு நீதிமன்ற கட்டணம் பொருந்தும். பொருந்தக்கூடிய நீதிமன்றக் கட்டணத்தை நிர்ணயிப்பது செய்யப்படுகிறது மற்றும் தேவையான இடங்களில் வாதத்தில் ஒட்டப்படுகிறது.

இந்த செயல்முறையை முடித்த பின்னர், நீதிமன்றம் இரு தரப்பினரிடமிருந்தும் வாதங்களைக் கேட்க ஒரு தேதியை நிர்ணயிக்கிறது மற்றும் வழக்கு தொடர போதுமான தகுதிகள் இருந்தால் அல்லது வாதங்களின் அடிப்படையில் தீர்மானிக்கிறது. 

💥அத்தகைய உறுதிப்பாடு மற்றும் நீதிமன்றத்தின் விருப்பப்படி, இது ஒன்று :-

சூட்டை அனுமதிக்கவும்

அல்லது வழக்கு அனுமதிக்க வேண்டாம்.

இந்த வழக்கில் நீதிமன்றம் ஏதேனும் தகுதியைக் கண்டால், அந்த வழக்கை மகிழ்விக்க நீதிமன்றம் அனுமதிக்கும்.

வாதங்களை விசாரிக்கும் கட்டத்தில், வழக்குக்கு தகுதி இருப்பதாக நீதிமன்றம் உணர்ந்தால், அடுத்த விசாரணைக்கு நீதிமன்றம் நிர்ணயித்த தேதியில் ஆஜராகுமாறு கோரி எதிர் தரப்பினருக்கு நீதிமன்றம் ஒரு நோட்டீஸ் வழங்கப்படும்.

💥இதற்கிடையில், வாதி பின்வருவனவற்றைச் செய்ய வேண்டியது அவசியம் :-

வாதி முறையான நீதிமன்ற கட்டணத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

வாதியின் சரியான நகல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

💥எழுதப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தல் :-

அறிவிப்பு கிடைத்த பிறகு, எதிர் தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். 

ஒரு எழுதப்பட்ட அறிக்கை, சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை, வாதி தாக்கல் செய்த வாதத்திற்கு ஒரு பதில். அத்தகைய அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் அத்தகைய எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும், மேலும் நீதிமன்றம் அனுமதித்தால் இந்த காலத்தை 90 நாட்கள் வரை நீட்டிக்க முடியும். 

எழுதப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்கள் வாதத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுக்க வேண்டும். 

வெளிப்படையாக மறுக்கப்படாத வாதத்தில் எந்தவொரு அறிக்கையும் பிரதிவாதியால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கருதப்படுகிறது.

பிரதி: வாதி எழுத்துப்பூர்வ அறிக்கைக்கு பதிலளிக்கும் போது, ​​அத்தகைய ஆவணம் பிரதி என்று அழைக்கப்படுகிறது. பிரதிவாதி முன்வைத்த குற்றச்சாட்டுகளை பிரதி மறுக்க வேண்டும் மற்றும் பிரதிகளில் வெளிப்படையாக மறுக்கப்படாத எந்தவொரு குற்றச்சாட்டும் வாதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது. பிரதி தாக்கல் செய்யப்பட்டவுடன், மனுக்கள் முழுமையானவை என்று கூறப்படுகிறது.

ஆவணங்களைத் தாக்கல் செய்தல்: மனுக்கள் முடிந்தபின், இரு தரப்பினருக்கும் அவர்களின் உரிமைகோரல்களை உறுதிப்படுத்த பொருத்தமான மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. கட்சிகள் ஒருவருக்கொருவர் முன்வைக்கும் ஆவணங்களை எதிர்க்கலாம். தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் ஒப்புக் கொள்ளலாம் அல்லது ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். 

எந்தவொரு ஆவணமும் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அல்லது நிராகரிக்கப்படாவிட்டால், அத்தகைய ஆவணம் அதை தாக்கல் செய்த கட்சிக்குத் திருப்பித் தரப்படும். தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்ற கட்சி / தரப்பினருக்கு புகைப்பட நகல் / ஜெராக்ஸ் வடிவத்தில் வழங்கப்படுகின்றன. இறுதி வாதங்களில் கட்சிகள் தாக்கல் செய்யாத எந்த ஆவணங்களையும் நம்ப முடியாது.

சிக்கல்களை உருவாக்குதல்: மேலே விவரிக்கப்பட்ட செயல்முறை முடிந்தபின், நீதிமன்றத்தால் பிரச்சினைகள் தீர்மானிக்கப்படுகின்றன, அதன் அடிப்படையில் வழக்கு முடிவு செய்யப்பட வேண்டும். இந்த சிக்கல்கள் கட்சிகளுக்கிடையேயான மோதலின் அடித்தளத்தை உள்ளடக்கியது மற்றும் இந்த சிக்கல்களைத் தீர்ப்பது விஷயத்தை முடிக்க உதவுகிறது. 

கட்சிகள் தங்கள் வழக்கை முன்வைப்பதில் இந்த சிக்கல்களில் ஒட்டிக்கொள்ள வேண்டும். இறுதி உத்தரவில், ஒவ்வொரு பிரச்சினையும் நீதிமன்றத்தால் தனித்தனியாக தீர்க்கப்படுகின்றன.

சாட்சிகளின் பட்டியல் / சாட்சியின் பரீட்சை: நீதிமன்றங்கள் முன் ஆஜர்படுத்த விரும்பும் கட்சிகளின் சாட்சிகளின் பட்டியல், சிக்கல்களை உருவாக்கிய நாளிலிருந்து 15 நாட்களுக்குள் அல்லது நீதிமன்றம் பரிந்துரைத்திருக்கக்கூடிய எந்தவொரு காலகட்டத்திலும் தாக்கல் செய்யப்பட வேண்டும். விசாரணை தேதியில், சாட்சிகளை நீதிமன்றம் விசாரிக்கிறது.

இறுதி விசாரணை: இறுதி விசாரணையின் தேதியில் நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளுக்குள் இரு தரப்பினரும் வாதிடுவார்கள். இரு தரப்பிலிருந்தும் வாதங்களைக் கேட்டபின், நீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பிக்கும்.

இறுதி உத்தரவு நீதிமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகலை கட்சிகள் சேகரிக்கலாம். சான்றளிக்கப்பட்ட நகலுக்கான விண்ணப்பத்தை தேவையான கட்டணங்களுடன் நீதிமன்ற பதிவேட்டில் பதிவு செய்யலாம்.

5. பகிர்வு வழக்குக்கான வரம்பு காலம் என்ன...?

பகிர்வு வழக்குக்கான வரம்பு காலத்தை வரம்பு சட்டம் நிர்வகிக்கிறது. அதன்படி, பகிர்வு வழக்கு தாக்கல் செய்வதற்கான வரம்பு 12 ஆண்டுகள் ஆகும். 12 வருட வரம்புக்குட்பட்ட காலத்திற்கான கணக்கீடு வாதிக்கு பாதகமான கூற்று எழும் நாளிலிருந்து தொடங்கும்.

6. பாகப்பிரிவினை  வழக்கு முடிக்க என்ன நேரம் எடுக்கப்படுகிறது...?

பொதுவாக ஒரு பகிர்வு வழக்கு முடிக்க 3 ஆண்டுகள் ஆகும். பூர்வாங்க ஆணையை வழங்குவதற்கு சுமார் 2 ஆண்டுகள் ஆகும், மேலும் 1 வருடம் சொத்தில் பங்கைப் பெறுவதற்கு நீதிமன்றத்தால் வழங்கப்படுகிறது.

7. நீதிமன்ற கட்டணம் எவ்வளவு...?

நீதிமன்ற கட்டணம் தரப்படுத்தப்படவில்லை மற்றும் இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் பகிர்வு சூட்டின் மதிப்பு ஆகியவற்றிலிருந்து வேறுபடுகிறது. சட்ட ஆலோசகர் அல்லது வழக்கறிஞரின் உதவியுடன் இதைக் கண்டறிய முடியும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் :-
***************************************

1. பாகப்பிரிவினை வழக்கு  எவ்வளவு நேரம் ஆகும்...?

நீதிமன்றம் வழக்கமாக 1 ஆண்டு முதல் 18 மாதங்களுக்குள் பகிர்வு வழக்குகளை கையாளுகிறது.

2. கூட்டுச் சொத்தை எவ்வாறு பிரிப்பது...?

கூட்டு சொத்து பகிர்வு என்பது ஒவ்வொரு தரப்பினருக்கும் பொருந்தக்கூடிய சட்டத்தின் படி உரிமையுள்ள பங்குகளுக்கு ஏற்ப சொத்தை பிரிப்பதன் மூலம் செய்யப்படுகிறது.

3. பாகப்பிரிவினை வழக்கின் செயல்முறை என்ன...?

சட்டம் ஒரு பகிர்வு நடவடிக்கை என்று ஒன்றை வழங்குகிறது, இது உரிமையாளர்களிடையே சொத்துக்களை தனிப்பட்ட பங்குகளாக பிரிக்க கொண்டு வரப்படலாம், இது உங்கள் பங்கை சுயாதீனமாக முன்னோக்கி நகர்த்த அனுமதிக்கிறது. அனைத்து உரிமையாளர்களும் ஒப்புக் கொண்டால் , ஒரு பகிர்வு அல்லது சொத்துச் சட்டத்தை ஒரு தன்னார்வ அடிப்படையில் ஏற்பாடு செய்யலாம்.

4. பாகப்பிரிவினை வழக்கு ஒன்றை  தாக்கல் செய்யலாமா...?

ஆம், ஒரு நபர் தங்கள் சொந்த வழக்கறிஞராக செயல்பட முடியும். இருப்பினும், பகிர்வு நடவடிக்கைகள் வழக்கமான சிவில் நடவடிக்கைகளை விட தொழில்நுட்ப ரீதியாக வேறுபட்டவை. நீங்கள் ஒரு தலைப்பு நிறுவனத்திடமிருந்து வழக்கு உத்தரவாதத்தை வாங்க வேண்டும், மேலும் வழக்கு உத்தரவாதத்தின் நகலை புகாருடன் பகிர்வுக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

5. கூட்டாக சொந்தமான வீட்டை விற்க என்னை கட்டாயப்படுத்த முடியுமா...?

பொதுவான அல்லது கூட்டு குத்தகைக்கு ஒரு குத்தகைதாரரின் உரிமையாளர் சொத்தில் தலைப்பு வைத்திருக்கும் மற்ற உரிமையாளர்களின் உரிமையாளர் நலன்களை விற்க முடியாது. 

மேலும், ஒரு பகிர்வு வழக்கைத் தாக்கல் செய்யாமல் உங்கள் சொத்தில் உள்ள மற்ற உரிமையாளர்களை முழுவதுமாக விற்கும்படி கட்டாயப்படுத்த முடியாது.

உயில் சொத்து


1. உயில் என்றால் என்ன...? 

ஒரு சொத்தினை தனது இறப்புக்கு பின்னர் யார் உரிமை கொண்டு அனுபவிக்கலாம் என்று தனது விருப்பத்தை எழுத்து வடிவில் எழுதுவது உயில் சாசனம் ஆகும்.

2. எத்தகைய சொத்துக்களை ஒருவர் உயில் எழுதலாம்...? 

ஒரு நபர் தான் ,தனது சுய சம்பாத்தியத்தின் மூலம் பெற்று அனுபவித்து வரும் சொத்து,பரம்பரையாக ஒரு கூட்டுக் குடும்பம் அனுபவித்து ஒரு நபர் தனது பெயரில் மட்டும் பாகப்பிரிவினை பெற்று அனுபவித்து வரும் சொத்து, கொடை எனப்படும் தான செட்டில்மென்ட் மூலம் பாத்தியப்படுத்திய சொத்து கொடை பெற்ற நபரின் பாத்தியதை எனப்படும் அனுபவத்தில் இருந்துவர வேண்டும்.இந்த சொத்துக்களை ஒரு நபர் உயில் எழுதலாம்.

3. உயில் எழுத ஆண்,பெண் என்று பாகுபாடு உண்டா...? 

கண்டிப்பாகக் கிடையாது வயது வந்த தனது பெயரில் பாத்தியதை கொண்ட சொத்தினை ஆண்,பெண் இரு பாலரும் எழுதலாம்.

4. உறவினர்களுக்கு மட்டும் தான் உயில் எழுதி வைக்க முடியுமா...? 

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது ,உறவினர் அல்லது உறவினர் அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம்.

5. கருவில் உருவாகாத குழந்தைகளுக்கு உயில் எழுதலாமா...? 

எழுதலாம் ஆனால் அது நடை பெறவில்லை என்றால் உயில் செயல் படாது ,வழியுரிமை மூலம் சொத்து தகுந்த வாரிசுகளை சென்றடையும்.

6. உயில் சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா...? 

அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது.பதிவு செய்யலாம் செய்யாமலும் இருக்கலாம்.

7. உயில் சாசனத்தில் கட்டாயம் செய்ய வேண்டியது என்ன...? 

கண்டிப்பாக இரண்டு சாட்சிகள் வேண்டும்,இவர்கள் முன்னிலையில் தான் உயில் சாசனம் இயற்றுபவர் கையொப்பம் இட வேண்டும்,சாட்சிகளும் உயில் சாசனம் இயற்றுபவர் முன்னிலையில் தான் சாசனத்தில் கையெழுத்திட வேண்டும்.

8. உயில் சாசனம் மூலம் சொத்தை அடைபவர் சாட்சி கையெழுத்து போடலாமா...? 

கண்டிப்பாகக் கூடாது சட்டம் இதனை அனுமதிக்கவில்லை.

9. உயிலை ரத்து செய்ய முடியுமா...? 

ஒரு நபர் தனது வாழ் நாளில் தனது சொத்து குறித்து எத்தனை உயில் வேண்டுமானாலும் இயற்றலாம்.கடைசியாக எழுதிய உயில் தான் செல்லும் .ஏற்கனவே எழுதிய உயிலை ரத்தும் செய்யலாம்.

10. உயில் எழுதியவுடன் சொத்தைப் பற்றிய சட்ட விளைவுகள் என்ன...?யாரிடம் சொத்து இருக்கும்...? 

உயில் என்பது எழுதிய நபரின் இறப்புக்குப் பின்னர் தான் சட்ட விளைவை உண்டாக்கும் ,அது வரை அந்த சொத்தின் உரிமை எழுதிய நபரிடம் தான் இருக்கும்.உயிலில் கண்டுள்ள நபர் அந்த சொத்திற்கு உரிமை கோர முடியாது.

11. உயில் எழுதிய பிறகு, அந்த சொத்தினை உயில் எழுதிய நபர் விற்பனை செய்ய முடியுமா...?

கண்டிப்பாக முடியும் ,உயில் சாசனம் இயற்றிய நபர் இறக்கும் வரை அவர் தான் அந்த சொத்தின் உரிமையாளர் ,அவர் அதனை எப்படி வேண்டும் என்றாலும் அனுபவிக்கலாம்.உயில் எழுதி விட்டு, அதை அவரே விற்று விட்டால், உயில் மூலம் பயனடைபவருக்கு எவ்வித சொத்தும் கிடைக்காது. உரிமையும் இல்லை. 

12. கொடை சாசனத்திற்கும், உயில் சாசனத்திற்கும் என்ன வித்தியாசம்...?

கொடை சாசனம் எழுதியவுடன், அதில் கண்ட கொடை பெறுபவர் அந்த சொத்தின் அனுபவ பாத்தியத்தை பெற்றுக் கொள்ளலாம்,கொடை எழுதிய நபருக்கு அந்த சொத்தில் அதற்கு பின்னர் எந்த உரிமையும் கிடையாது.கொடை பெறுபவர் அந்த சொத்தினை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் கொடை கொடுத்தவர் அந்த சொத்தின் மீது உரிமை கொண்டிருப்பார்.உயில் என்பது, அதை எழுதியவர் மறைவுக்கு பிறகு, நடைமுறைக்கு வரும்.

13. கொடை சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா...?

100ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால் கட்டாயம் கொடையை பதிவு செய்ய வேண்டும் ஆனால் உயிலை அப்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

14.எப்படிப்பட்ட சமூக சூழ்நிலைகளில் உயில் எழுதப்படலாம்...?

சட்டத்தில் இப்படிப்பட்ட சமூக சூழ்நிலையில் தான் உயில் எழுதப்பட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

பொதுவாக ஒரு நபருக்கு பல குழந்தைகள் இருந்து தனது இறப்பிற்கு பின்னர் யார் யார் எந்தெந்த சொத்துக்களை அடைய வேண்டும் என்று ஒரு முடிவை எடுத்து அதனை உயில் சாசனப் படுத்தினால் வருங்காலத்தில் குழந்தைகளுக்கிடையே சொத்திற்காக சண்டை சச்சரவு தேவையில்லாமல் ஏற்படாது.

15.உயில் எழுதவில்லை என்றால் என்ன நடக்கும்...?

ஒரு சொத்துக்குரிய நபர் தனது சொத்துக்களைப் பொறுத்து உயில் சாசனம் ஏதும் எழுதி வைக்கவில்லை என்றால் அவரது இறப்பிற்கு பின்னர் சட்டம் கூறும் வழியுரிமைப்படி சொத்து வாரிசுகளைச் சென்றடையும்.

16. எல்லா மதத்தினரும் உயில் எழுத முடியுமா...?

முடியும்.

17. உயிலை முத்திரைதாளில்தான் எழுத வேண்டுமா...?

சாதாரண தாளிலும் எழுதலாம். ஆனால், ஒருவர் சாவுக்கு பின்பே, இது நடைமுறைக்கு வருவதாலும், நீதிமன்றத்தில் பின்னாளில் குறியீடு செய்ய தேவைப்படும் என்பதாலும், முத்திரைத்தாளில் எழுதினால் நல்லது, பதிந்தால்,அதை விட நல்லது.

18.சாட்சி யாரை போடலாம்...?

நம்பிக்கையான, இள வயதுள்ளவர்கள் இருப்பது நல்லது.

பின்னாளில் நீதிமன்றம், வழக்கு என்று வந்தால், வயதானவர்களை சாட்சி போட்டால், இறந்துவிட்டால், பிரச்சினை வரலாம். 

19.உயிலை probate செய்ய வேண்டுமா...?

தமிழ்நாட்டில் சென்னை தவிர, அனைத்து இடங்களிலும், probate செய்ய தேவை இல்லை.

20.உயிலை நோட்டரி பப்ளிக் முன் எழுதி வைத்துக்கொண்டால் செல்லுமா...?

எழுதலாம். ஆனால், பின்பு, அவரையும், பிரச்சினை என்று வந்தால், சாட்சியாக விசாரிக்க வேண்டும், நீதிமன்றத்தில்.

21.உயிலை பத்திர அலுவகத்தில் பதிய என்ன நடைமுறை...?

எந்த பத்திர அலுவகத்திலும் பதியலாம்.ஸ்டாம்ப் தேவை இல்லை. சொத்து மதிப்பில் 1% கட்டணம் அதிகபட்சம் 500 ரூபாய்

 22. உயிலை பத்திர அலுவகத்தில் வைத்திருக்க முடியுமா...?

மாவட்ட பதிவாளர் அலுவகத்தில், ஒரு உரையிட்ட கவரில் டெபாசிட் செய்து வைக்கலாம். அப்போது பதிய தேவை இல்லை. உயில் எழுதியவர் இறந்த பிறகு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், அதை திறந்து பார்க்க விண்ணப்பித்து, அதை பதியலாம்.

உயில் எழுதுவது எப்படி...?

      ******************************

ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).

உயில் என்பதே உறவுகளைச்சிதற விடாமல் பார்த்துக் கொள்ளும் கவசம்தான்.அதைச் சரியாகப் பயன் படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.

உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. 

உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!

இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்!

உயில் — கட்டாயம் என்ன...?

உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்ப-தால் எழுதிவிடுவது நல்லது.

‘‘தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்’’ என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா.

உயில் – எப்படி எழுதுவது...?

‘‘உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.

உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.

உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்’’

உதாரணமாக....!

எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன்.

கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்’ என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம்.

‘‘சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்-களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்’’ என்றும் சொன்னார்.

உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ‘‘உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!’’ என்றார்.

உயில் அமல்படுத்து-நராக ஒருவரை நியமிப்-பது அவசி-யம். உயிலில் குறிப்பிடப்-பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்-வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்-களை உயில் அமல்படுத்-துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார்.

• நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும்.

• உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.

உயில்கள் பலவிதம்...!

குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.

உயில் எப்போது செல்லாமல் போகும்...?

குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.

சில டெக்னிக்கலான வார்த்தைகள்...!

Will உயில் (விருப்ப ஆவணம்)
Testator உயில் எழுதியவர்
Executor உயில் அமல்படுத்துநர்
Codicil இணைப்புத் தாள்கள்
Attested சரிபார்க்கப்பட்டது.
Probate
நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல்.
Beneficiary, Legatee வாரிசு
Intestate உயில் எழுதாமல் இறந்து போனவர்
Succession Certificate வாரிசு சான்றிதழ்
Hindu Succession Act இந்து வாரிசு உரிமைச் சட்டம்
Muslim personal Act முஸ்லிம் தனிநபர் சட்டம்
Guardian பாதுகாவலர்
Witness சாட்சி

‘ஆன் லைன்’ உயில்...!

உயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.

ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.

உயில்களை வருமான வரியை மிச்சப் படுத்தும் ஒரு சாதனமாகவும் கையாளலாம்!

ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.

ஓருவர் தான் எழுதிய உயிலை எப்போது வேண்டுமானாலும் மாற்றி எழுத முடியும்.

உயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை...!

      ******************************

சொத்தை பங்கீடு செய்வதற்கு நடைமுறையில் இருக்கும் ஆவணங்களில் உயிலுக்கும் இடம் உண்டு. தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய சொத்து தான் விருப்பப்பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உயில் எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாக ஒருவருடைய சொத்து அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கு போய் சேரும்.

சுயசம்பாத்திய சொத்து...!

ஆனால் உயில் அப்படிப்பட்டதல்ல. தன்னுடைய வாரிசுகளுக்கும் எழுதி வைக்கலாம். மற்றவர்களுக்கும் எழுதி வைக்கலாம். வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு எழுதி வைத்தால் வாரிசுகள் அதை எதிர்க்க முடியாது. ஆதலால் பிரியமானவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் உயிலை எழுதி வைக்கலாம்.

எனினும் உயில் எழுதுவதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. ஒருவர் தான் உரிமை கொண்டாடும் அத்தனை சொத்தையும் உயிலாக எழுதிவைக்க முடியாது. தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்துக்கு மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும். தன்னுடைய தந்தை வழியில் வந்த பூர்வீக  சொத்துக்கு உயில் எழுதி வைக்க முடியாது.

விருப்பப்பட்ட நபர்கள்...!

அந்த சொத்தை பாக பிரிவினை மூலம் தனது பெயருக்கு பதிவு செய்து இருந்தாலும் அதற்கு உயில் எழுதி வைக்க முடியாது. அந்த சொத்துக்கு வாரிசுகள்தான் உரிமை கொண்டாட முடியும். ஆனால் முழுக்க, முழுக்க தன்னுடைய சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்க முடியும். எனினும் அது தன்னுடைய உழைப்பினால் மட்டுமே சேர்க்கப்பட்ட சொத்து என்பதை உறுதிபடுத்தி கொண்டால் மட்டுமே எழுதும் உயில் செல்லுபடியாகும்.

ஒருவர் சுயமாக சேர்த்த சொத்தை தன்னுடைய வாரிசுகளுக்கு எழுதி வைப்பதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அவர் தன்னுடைய வாரிசுகளை மட்டுமே கருத்தில் கொண்டு உயில் எழுதி வைத்தால் அந்த சொத்தை பங்கு பிரிப்பதற்கு வாரிசு கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். அந்த சொத்து மனைவிக்கு கிடைப்பதில் சிக்கல் எழுந்துவிடும்.

மனைவிக்கு சொத்து...!

வாரிசுகளுக்கு எழுதி வைத்தால் மனைவிக்கும் அதில் பங்கு கிடைத்துவிடும் என்று கருத முடியாது. அந்த சொத்துக்கு மனைவி எந்த வகையிலும் உரிமை கோர முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே ஒருவர் சுய சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்த சொத்தை தன்னுடைய வாரிசுகளுக்கு உயில் எழுதி வைப்பதாக இருந்தால் மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதுவது நல்லது.

அதேபோல் தன்னுடைய சுய சம்பாத்திய சொத்து முழுவதையும் மனைவி பெயரில் மட்டும் எழுதி வைப்பதும் சிக்கலை ஏற்படுத்தும். உயிலில் மனைவி பெயரை மட்டும் குறிப்பிட்டால் வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது. தனது மனைவி பெயரில் எழுதி வைத்தால் வாரிசுகளுக்கு சொத்து போய் சேர்ந்துவிடும் என்று கருதிவிட முடியாது. அது அவருடைய மனைவிக்கு மட்டுமே உரிய சொத்தாக மாறிவிடும்.

விருப்பப்படி சொத்து பங்கீடு...!

அவர் அந்த சொத்தை யாருக்கு கொடுக்க விரும்புகிறாரோ அவருக்குதான் அந்த சொத்து போய் சேரும். நான்கு வாரிசுகளில் மூன்று பேருக்கு மட்டுமே சொத்தை  பாகம் பங்கிட்டு பகிர்ந்து கொடுத்தால் அது செல்லுபடியாகும். நான்காவது வாரிசு தனக்கு பாகம் பிரித்து தரவில்லை என்று எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. மேலும் வாரிசுகளுக்கும் சம அளவில் சொத்து பிரிக்கப்பட வேண்டும் என்று நிர்பந்திக்கவும் முடியாது. மனைவி தனது காலத்துக்கு பிறகு ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பங்கு  என்று குறிப்பிடுகிறாரோ அந்த பங்கை மட்டுமே பெற முடியும்.

ஒருவருக்கு அதிகமாக கிடைத்தால் மற்றவர் அதை எதிர்க்க முடியாது. இதனால் வாரிசுகளுக்கு இடையே தேவையற்ற பிரச்சினைகள் எழக்கூடும். மேலும் மனைவி வாரிசுகளை தவிர மற்ற வேறு யாருக்கு வேண்டுமானாலும் சொத்தை பிரித்து கொடுக்கலாம். அது அவருடைய சொத்தாகவே கருதப்படுவதால் அவருடைய விருப்பப்படியே உயில் சொத்துக்கான பங்கீடு அமையும். ஆகவே உயில் எழுதும்போது யாருக்கு சொத்து கிடைக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

பூர்வீக சொத்துக்கு உயில் எழுதலாமா...?

    ******************************

தான் பாடு பட்டு சேர்த்த சொத்து தனது காலத்துக்கு பிறகு தன் பிள்ளைகள் பிரச்சினை இன்றி அனுபவிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எண்ணமாக இருக்கும். 

அதற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளில் முக்கியத்துவம் பெறுவது உயில். அதில் யார் யாருக்கு எந்த சொத்து போய் சேர வேண்டும் என்ற விவரத்தை தெளிவாக குறிப்பிட்டு எழுதி வைத்தால் தனது மறைவுக்கு பிறகு சொத்தை வாரிசுகள் பாகப்பிரிவினை செய்வதில் சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

தெளிவாக குறிப்பிட வேண்டும்
சொத்தை தனது விருப்பத்துக்கு ஏற்ப பிடித்தமானவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுதி வைக்கும் ஆவணமான இந்த உயில் எழுதியவர் மறைவுக்கு பிறகு தான் நடைமுறைக்கு வரும் என்பதால் அதில் இருக்கும் விஷயங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். அதனால் பின்னாளில் பிரச்சினை எழுந்து விடக்கூடாது. 

உயில் எழுதுபவர் நல்ல மனநிலை கொண்டவராக இருக்க வேண்டும். மனநிலை சரியில்லாத நிலையில் எழுதப்படும் உயில் செல்லாததாகி போய்விடும். குடிபோதையில் எழுதப்பட்ட உயிலும் செல்லாததாகி விடும்.

மேலும் உயிலில் குறிப்பிடப்படும் சொத்து மாடி வீடாக இருந்து அது இரண்டு பாகமாக வாரிசுகளுக்கு பிரிக்கப்பட வேண்டும் என்றால் இரண்டு பேருக்கும் சரிபாதி எடுத்து கொள்ள வேண்டும் என்று எழுதாமல் தரைத்தள வீடு யாருக்கு...? 

முதல் தளத்தில் இருக்கும் வீடு யாருக்கு? என்பதை விளக்கமாக எழுதி வைக்க வேண்டும். அதுபோல் நிலத்தை பிரிப்பதிலும் எந்த பகுதி யாருக்கு கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட வேண்டும்.

பூர்விக சொத்துக்கு உயில் எழுதக்கூடாது
அத்துடன் யார் பெயருக்கு எழுதுகிறோமோ அவருடைய பெயரை தெளிவாக குறிப்பிடவேண்டும். 

முக்கியமாக செல்லமாக அழைக்கும் பெயரை உயிலில் எழுதிவிடக்கூடாது. அது குழப்பத்தையும், பிரச்சினையையும் விளைவிக்கும். இப்படி உயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. 

அதில் முக்கியமானது எந்த சொத்தை உயில் மூலம் எழுதி வைக்கலாம் என்பது பற்றியது.  அதாவது ஒருவர் தான் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தை தனது வாரிசுகளுக்கு உயிலாக எழுதி வைக்கலாம். 

ஆனால் வழிவழியாக இருந்து வரும் பூர்வீக சொத்துக்கு எக்காரணம் கொண்டும் உயில் எழுதி வைத்து விடக்கூடாது. அப்படி எழுதி இருந்தால் அந்த உயில் செல்லாது.

செல்லாததாகி விடும்
ஏனெனில் தனிப்பட்ட தன் சொந்த சொத்தை மட்டுமே உயில் எழுதி வைப்பதற்கு உரிமை இருக்கிறது. அதை விடுத்து வேறு சொத்துக்களை எழுதி வைத்தால் அந்த உயில் செல்லாததாகி விடும். மேலும் தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்தை தன்னுடைய வாரிசுகளுக்கு தான் உயிலாக எழுதி வைக்க வேண்டும் என்று இல்லை தனக்கு பிடித்தமானவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம்.

அவர்கள் தன் உறவுமுறைக்கு சம்பந்தமில்லாதவர்களாகவும் இருக்கலாம். அறக்கட்டளைகளுக்கும் எழுதி கொடுக்கலாம். மைனர் பெயருக்கு உயில் எழுதப்படுவதாக இருந்தால் காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். அதேசமயத்தில் சொந்த சம்பாத்திய சொத்துக்கு உயில் எழுதி வைக்கவில்லை என்றால் அந்த சொத்து சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு உரிமையுடைய சொத்தாக மாறிவிடும்.

நில அளவைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது  மனையையோ அளக்க  முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புர...