வீட்டுக்கு வரைபடம் போடுவது முதல் வேலை வீட்டுக்கான வரைபடத்தை வைத்துதான் வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்
வங்கியிலிருந்து வீட்டுக் கடன் வாங்காமல் வீடு கட்டுவதானாலும் வரைபடம்தான் முதல் தேவை.
இந்த வரைபடத்தை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு அனுப்பி அவர்கள் வழங்கும் அனுமதியின் பேரில்தான் கட்டுமான வேலைகளைத் தொடங்க முடியும்.
நமது பட்ஜெட் எவ்வளவு அல்லது நமக்கு எத்தனை சதுர அடியில் வீடு தேவைப்படுகிறது என்பதன் அடிப்படையில் வீட்டுக்கான வடிவமைப்பைச் செய்து கொள்ள வேண்டும்.
நமது மனையின் பரப்பளவு அதில் அனுமதிக்கப்பட்ட கட்டுமானப் பரப்பளவு இவற்றைப் பொறுத்து நம் கனவு வீட்டை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். அரசு அங்கீகாரம பெற்ற ஒரு வடிவமைப்பாளரிடம் நமது தேவைகளுக்கேற்ப இந்த வடிவமைப்பைக் கேட்டு வாங்க வேண்டும்.
அடுத்ததாக மின் இணைப்பு பெறுவதும், தண்ணீருக்கான ஏற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும் நமக்கு உடனடி மின் இணைப்பு தேவைப்படுகிறது என்று அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தால், மின்வாரிய ஊழியர்கள் வந்து இடத்தைப் பார்வையிட்ட பிறகுதான் மின் இணைப்புப் பெற எவ்வளவு செலவாகும் என்பதைச் சொல்வார்கள் ஏனென்றால், மனைக்கு அருகிலேயே மின் கம்பங்கள் இருந்தால் அதிச் செலவாகாது, உடனடியாக இணைப்பு எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், அருகே மின்பாதைகள் இல்லாத இடாக இருந்தால், நமது இடம் வரை மின்கம்பங்கள் நட்ட பிறகுதான் மின் இணைப்பு கிடைக்கும்.
மின் இணைப்புப் பெற, நம்மைப் பற்றிய விவரங்களுடன், கிராம நிர்வாக அலுவலரிடம், வாங்கிய சான்று, பட்டா மற்றும் ஆவணங்களின் நகல்கள் போன்றவற்றின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த இடத்தில் வசிக்கிறோம் என்பதற்கான சான்று நமக்கு எதுவும் இருக்காது என்பதால், இந்த ஆவணங்களை இணைப்பது அவசியமாகும்.
இந்தக் காலகட்டத்தில் கட்டட வரைபட அனுமதி வாங்கப்பட்டிருந்தால், அதில் ஒரு நகலையும் சேர்த்து இணைப்பது நல்லது. மின்வாரிய ஊழியர்கள் வந்து பார்வையிட்டு, மின் இணைப்புக்கான முன் ஏற்பாடுகளை வலியுறுத்துவார்கள்.
அடுத்ததாக தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொள்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். நிலத்தடி நீரை போர் மூலமாக எடுத்துப் பயன்படுத்தலாம் அல்லது லாரிகளில் வாங்கி கட்டுமானத்திற்குப் பயன்படுத்தலாம். அது அவரவர் வசதியைப் பொறுத்தது. அடுத்ததாக குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் இணைப்பு பெறும் வசதி உங்கள் பகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி இருந்தால் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம். காலி மனைக்கு CMDA அல்லது DTCPயிடம் இருந்து பெறப்பட்ட அங்கீகார நகல், சொத்துவரி கட்டிய ரசீது, வீட்டின் வரைபடத்துடன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வெளியேறச் செய்யப்பட்டுள்ள வசதிகள் என்னென்ன போன்ற விஷயங்களை அரசு அங்கீகாரம் பெற்ற பிளம்பர் ஆய்வு செய்த சான்றுடன், விண்ணப்பிக்க வேண்டும்.
இல்லையென்றால் நாமே பிரத்யேகமாக வசதிகளைச் செய்து கொண்டு, அரசாங்கச் செலவில் குடிநீர், கழிவுநீர் இணைப்பு வசதி வரும்வரை காத்திருக்க வேண்டும்.
நாம் வீடு கட்டப்போகும் இடத்துக்கு இதுவரை சொத்துவரிதான் கட்டி வந்திருப்போம் அதாவது காலி மனை என்கிற அடையாளம்தான் இருக்கும். இதை மாற்றி வீட்டு வரி என்கிற வகைக்குள் கொண்டுவர வேண்டும்.
கட்டட வரைப்பட அனுமதி மற்றும் விற்பனைப் பத்திரத்துடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பை அணுகினால், இந்த மாற்றத்தைச் செய்து நமது வீட்டுக்குச் சொத்து வரி விதிப்பார்கள்.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்...!
தமிழகத்தில் சுமார் 27,000 அங்கீகாரமில்லாத லே அவுட்டுகளில் சுமார் 13.5 லட்சம் மனைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 20.10.16-க்குமுன் மனையை பதிவுசெய்திருந் தால் மனைகளின் உரிமையாளர்கள், அதனை இப்போது யாருக்கு வேண்டுமானா லும் விற்கலாம். இந்த மனைகளை வாங்கு பவர்களும் யாருக்கு வேண்டுமானலும் விற்பனை செய்யலாம். ஆனால் பிற்காலத்தில் வீடு கட்டும்போது, அப்ரூவல் மனை என்கிற அங்கீகாரம் தேவைப்படும். அப்போது, மனையின் உரிமையாளர் அல்லது லேஅவுட் போட்டிருப்பவர், தங்களுடைய மனையை முறைப்படுத்தக்கோரி விண் ணப்பிக்கலாம். இதற்கு அந்த லேஅவுட்டின் உரிமையாளர், 20.10.16-க்கு முன் ஒரு மனையையாவது பதிவு செய்து தந்திருக்க வேண்டும்.
அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க அந்த மனையானது அனைவருக்கும் உரிமையுள்ள பொதுச் சாலையில் அமையப் பெற்றிருக்க வேண்டு ம் என்ற விதிமுறையைத் தளர்த்தி, பொதுச் சாலையிலிருந்து மனையை இணைக் கும் வழிப்பாதையைப் பயன்படுத்த மனை உரிமையாளருக்கு உரிமை இருந்தால் போதும் என இப்போது மாற்றப் பட்டுள்ளது.
அங்கீகாரம்பெறாத லேஅவுட்டுகளில், ஏற்கெனவே 20.10.16 தேதிக்குள் பத்திரப்பதி வு செய்தது, அந்த லேஅவுட்டில் மூன்றில் இரண்டு பங்காக இருக்க வேண்டும் என் று ஆரம்பத்தில் விதிமுறை வகுக்கப்பட்டது. அது 20.10.16-க்குள் ஒரு லே அவுட்டில் ஒரே ஒரு மனை கிரயம் செய்யப்பட்டிருந்தால் கூட முழுமையாக அந்த மனைப் பிரிவையே டி.டி.சி.பி மூலம் முறைப் படுத்தலாம் என விதிமுறை மாற்றப்பட்டிரு க்கிறது. மேலும், திறந்தவெளி ஒதுக்கீட்டுக் கட்டணம் நீக்கப்பட்டு உள்ளது.
அதிகக் கட்டணங்கள்...?
தற்போதைய நிலையில், மேம்பாட்டுக் கட்டணம் (Development charge), ஒழுங்கு முறைக் கட்டணம் (Regularisation Charge) மற்றும் சீராய்வுக் கட்டணம் (Scrutiny Fees) ஆகிய மூன்று கட்டணங் களைச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
மேம்பாட்டுக் கட்டணம்...?
மேம்பாட்டுக் கட்டணம், மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து ஒரு சதுர மீட்டருக்கு மாநகராட்சி எனில் ரூ.500-ம், சிறப்பு மற்றும் தேர்வுநிலை மாநகராட்சி எனில் ரூ.250, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை மாநகராட்சி எனில் ரூ.150-ம், நகர பஞ்சாயத்து எனில் ரூ.75-ம், கிராமப் பஞ்சாயத்து ரூ.25-ம் வசூலிக்கப்படுகிறது.
இப்படி வசூலிக்கப்படும் மேம்பாட்டுக் கட்டணம் அந்த உள்ளாட்சி அமைப்புகளின் தனிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, குடிநீர், சாலை, தெரு விளக்குகள் போன் ற அடிப்படை வசதிகளை வழங்க செலவிடப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறைக் கட்டணம்...!
இக்கட்டணமும் மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து, சதுர மீட்டருக்கு மாநகராட்சி எனில் ரூ.100-ம், சிறப்பு மாநகராட்சி எனில் ரூ.60-ம், முதல்நிலை மற் றும் இரண்டாம் நிலை மாநகராட்சி எனில் ரூ.60, நகரப் பஞ்சாயத்து எனில் ரூ.30, கிராமப் பஞ்சாயத்து எனில் ரூ.30-ம் கட்ட வேண்டும்.
சீராய்வுக் கட்டணம்...!
சீராய்வுக் கட்டணமாக மனை ஒன்றுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். ஒருவர் ஒரு லே அவுட்டில் மூன்று சென்ட் வீதம் 10 மனைகள் என மொத்தம் 30 சென்ட் வாங்கி யிருந்தால், அவர் சீராய்வுக் கட்டணமாக மட்டுமே ரூ.5,000 செலுத்த வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் ஒருவர், 1,200 சதுர அடி மனையை டி.டி.சி.பி அப்ரூவல் மனையாக மாற்ற ரூ.67,700-யைக் கட்டணமாக செலுத்த வேண்டிவரும். இதுவே கிராமப் பஞ்சாயத்து என்றால் ரூ.6,500 கட்ட வேண்டும்.
இதுதவிர, அதிகாரிகளை மனை இருக்கும் இடத்துக்கு அழைத்துவரும் செலவுகளும் இருக்கின்றன.
நன்றி....!
No comments:
Post a Comment