நோக்கம் :
ஏழை மக்களின் வீட்டின் தேவையை பூர்த்தி செய்வதோடு பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையிலும் வீடு கட்டிக் கொடுப்பதே முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் நோக்கமாகும்.
நிதி ஆதாரம் :இத்திட்டத்திற்கு தேவையான நிதி முழுவதையும் மாநில அரசே வழங்குகிறது.
அலகுத் தொகை - ரூ.2,10,000
ஒரு வீட்டிற்கான கட்டுமானத் தொகை ரூ. 1,80,000
சூரிய மின் சக்தி விளக்கு பொருத்துவதற்கான தொகை ரூ. 30,000
மொத்தம் ரூ. 2,10,000
சிறப்பு அம்சங்கள் :
1. ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும்.
2. ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, தாழ்வாரம் மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும்.
3. ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
4. ஒவ்வொரு வீட்டிலும் சூரிய மின் சக்தியில் எரியும் 5 ஒளி உமிழும் டையோடு விளக்குகள் (டுநுனு) பொருத்தப்படும்.
5. கூடுதல் வசதியாக பயனாளியின் விருப்பத்தின்படி தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திலிருந்து மின் இணைப்பு பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
6. வீடுகள் கட்டும் பணி நேரடியாக பயனாளிகளால் மேற்கொள்ளப்படும்.
7. சூரிய மின் சக்தி விளக்குகள் அமைக்கும் பணிகளை செயல்படுத்துவதற்கு
தொடர்புடைய மாவட்ட திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
பொறுப்பாவார்.
8. பசுமை வீடுகள், பயனாளியின் தற்போது குடியிருப்பு அமைந்துள்ள மனையில் (ஏற்கெனவே உள்ள குடியிருப்பு அமைப்பினை அகற்றிவிட்டு) அல்லது கிராம ஊராட்சியின் பிற பகுதியில் அமைந்துள்ள பயனாளிக்கு சொந்தமான மனையில் கட்டப்பட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கான நில எடுப்பு ஏதும் செய்யப்படமாட்டாது. வீட்டுமனைப்பட்டா உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர்.
9. அமைக்கப்படும் சூரிய மின் சக்தி விளக்குகள் மற்றும் அத்துடன் கூடிய இதர உபகரணங்களை பயனாளிகள் முறையாக பயன்படுத்தும் விவரங்களைத் தெரிவிக்கும் பிரசுரங்கள், பயிற்சி விபரங்கள் மற்றும் கையேடுகள் விநியோகம் செய்யப்படும்.
10. ஒவ்வொரு பசுமை வீடும் அனுமதிக்கப்பட்ட பரப்பளவான 300 சதுர அடிக்கு
மிகாமல் ஏற்கெனவே இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவாறு
கட்டப்படவேண்டும். இதன் வடிவமைப்பில் மாறுதல்கள் அனுமதிக்கப்
படமாட்டாது.
11. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட வீட்டின் பரப்பளவான 300 சதுர அடியில் வீட்டின் வடிவமைப்பில் மாறுதல் செய்யாமல், சமையலறை மற்றும் படுக்கை அறை ஆகியவற்றை இட அமைவிற்கேற்ப மாற்றி அமைக்க அனுமதிக்கப்படும்.
12. இத்திட்டத்திற்கான சின்னம் செராமிக் ஓடுகளில் வடிவமைக்கப்பட்டு
அனைத்து வீடுகளிலும் அனைவரும் பார்க்கும் வகையில் பதிக்கப்பட
வேண்டும்.
13. கட்டி முடிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும் திட்டத்தின் பெயர், பயனாளியின் பெயர் மற்றும் வீடு கட்டப்பட்ட ஆண்டு ஆகிய விபரங்கள் தெளிவாகத் தெரியும் வகையில் வண்ணத்தினால் எழுதப்பட வேண்டும்.
14. பயனாளிகளால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகளுக்கான பட்டியல்
தொகை கீழ்கண்டவாறு நான்கு நிலைகளில் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட வேண்டும்.
i. அடித்தள நிலை
ii. ஜன்னல் மட்ட நிலை
iii. கூரை வேயப்பட்ட நிலை
iஎ. முடிவுற்ற நிலை
15. ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.2.10 இலட்சம் அலகுத் தொகையுடன் மற்ற
திட்டங்களுடன் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் கூடுதலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 90 மனித சக்தி நாட்களுக்கான அறிவிக்கப்பட்ட தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.
(90 ரூ.229 = ரூ. 20,610)
16. மேலும் பயனாளிக்கு தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிக்கு ரூ.12,000 மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து வழங்கப்பட வேண்டும்.
17. இவை தவிர, பயனாளிகளுக்கு மான்ய விலையில் சிமெண்ட் கம்பிகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பயனாளிகளின் தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. இப்பொருட்களுக்கான கிரையத் தொகை, பயனாளிகளுக்கு வழங்கப்படும் பட்டியல் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
தகுதி வாய்ந்த பயனாளிகள் :
கிராமப் பகுதிகளில் வாழும் வீடு இல்லாத வீட்டு மனை பட்டா உடைய ஏழை மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகள் ஆவர்.
பயனாளிகளின் தகுதி :
பயனாளி கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
1. சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. 300 சதுர அடிக்கு குறையாத வீட்டு மனை சொந்தமாக இருக்க வேண்டும்.
3. குடும்ப தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் பெயரிலோ வில்லங்கமற்ற வீட்டு மனைப்பட்டா இருக்க வேண்டும்.
4. தொடர்புடைய கிராம ஊராட்சியில் அல்லது வேறு எங்கும் கான்கிரீட் கூரை போடப்பட்ட சொந்த வீடு எதுவும் இருக்கக் கூடாது.
5. அரசின் எந்தவொரு வீடு
கட்டும் திட்டத்திலும் பயன் பெற்றவராக இருக்கக்
கூடாது.
பயனாளிகள் தேர்வு :
1. பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும் போது, மாற்றுத் திறனாளிகள்,
விதவைகள், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்,
பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், முன்னாள்
இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் துணை இராணுவ படையினர், ஊரகப் பகுதிகளில் வாழும் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் துறையால் (ஐஊனுளு) அடையாளம் காணப்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், துணை இயக்குநரால் (மருத்துவப் பணிகள்) சான்றிதழ் வழங்கப்பட்ட ஹெச்ஐவி/எய்ட்ஸ்/காசநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீ விபத்து, வெள்ளம் போன்ற இதர பிற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை
அளிக்கப்படவேண்டும். மேலும், மனநலம் குன்றியோர் உள்ள குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
2. ஒவ்வொரு கிராம ஊராட்சியில் வாழும் ஏழை மக்களிலிருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் அப்போதைய புது வாழ்வு திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட நலிவுற்றவர்கள் பட்டியலில் (ஞஐஞ) இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தயார் செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல்களில் அவர்களின் ஏதுநிலைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில், கிராம சபையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.
வீடுகள் ஒதுக்கீடு செய்தல் :
1. மாநில அளவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கட்டப்படவுள்ள வீடுகளின் எண்ணிக்கையை
மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்வார்.
2. மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் கிராம ஊராட்சிகளுக்கான வீடுகளை
ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்க வேண்டும்.
3. தகுதிவாய்ந்த பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்வதற்கு கிராம அளவிலான குழு அமைக்கப்பட வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர் / தனி அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு, கிராம ஊராட்சியில் உள்ள ஏழை மக்களிலிருந்து வழிகாட்டி நெறிமுறைகளின்படி பயனாளிகளை தேர்வு செய்து, அவ்வாறு குழுவால் இறுதி செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலை கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிராம அளவிலான குழுவில் சிறப்பு அழைப்பாளராக இருப்பார்.
4. கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமைப்பிரிவின் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), வீடுகள் ஒதுக்கீடு செய்வார்.
இன வாரியான ஒதுக்கீடு :
மொத்த ஒதுக்கீட்டில் வீடுகள் கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
1. ஆதிதிராவிடர் - 29ரூ
2. பழங்குடியினர் - 1 ரூ
3. இதர பிரிவினர் - 70ரூ
மாவட்ட வாரியான ஒதுக்கீட்டில் 4 விழுக்காடு மாற்றுத் திறனாளிகளுக்கு
பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.
பணிகளுக்கான உத்தரவு வழங்குதல்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களால் நில உரிமை, இடம் ஆகியவை சரிபார்க்கப்பட்டதை உறுதி செய்த பிறகு தகுதியுள்ள பயனாளிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) வேலை உத்திரவினை வழங்குவார்.
திட்ட செயலாக்கம்
1. ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில்
திட்டத்திற்கான நிர்வாக அனுமதி மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட வேண்டும்.
2. திட்ட செயலாக்கம், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (வட்டார ஊராட்சி)
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
3. இடத்தை குறியீடு செய்தல்: சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியின் ஒன்றிய
மேற்பார்வையாளர் / உதவிப் பொறியாளர் / இளநிலைப் பொறியாளர் அரசினால் ஒப்புதலளிக்கப்பட்ட வடிவமைப்புக்கேற்றவாறு வேலையைத் துவக்குவதற்காக நிலத்தில் குறியீடு செய்வார்.
4. வீடுகளைக் கட்டுவதற்கும் மற்றும் இதர தொழில்நுட்ப அம்சங்களுக்கும்
அரசாணை (நிலை) எண்.111, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ஞசு.1) துறை நாள்.
21.08.2018-ன்படி ஒன்றிய மேற்பார்வையாளர்கள் / உதவிப் பொறியாளர்கள் /
இளநிலைப் பொறியாளர்கள் பொறுப்பாவார்கள். ஒன்றிய மேற்பார்வையாளர்கள் நிலத்தை குறியீடு செய்வதற்கும், மாதிரி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப குறியீடுகளின்படி வீடுகள் கட்டும் பணிகளை மேற்பார்வையிடவும் உதவியாக இருப்பார்கள்.
5. உதவி செயற்பொறியாளர்களால் (ஊ.வ) வீடுகள் கட்டுவதை சரிபார்த்து மேல் அளவீடு செய்யப்பட வேண்டும்.
6. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்கள், செயற் பொறியாளர்கள் (ஊ.வ) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் (ஊ.வ)
வீடுகளின் பணி முன்னேற்றத்தை அடிக்கடி ஆய்வு செய்து வீடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாதிரி வடிவமைப்பிலும் அல்லது இத்திட்டத்திற்கான செயல்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள்/அறிவுரைகளிலிலிருந்து மாறுபாடாக இல்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
7. பசுமை வீடுகளின் கட்டுமானத்தை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உதவியுடன் பயனாளிகளே மேற்கொள்வர்.
8. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் சூரிய மின்சக்தி விளக்கு அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்:
மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர், சென்னை-15. :
மாவட்ட அளவில் :
1. மாவட்ட ஆட்சித் தலைவர் :
2. திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை.
3. உதவி திட்ட அலுவலர் (வீட்டு வசதி (ம) சுகாதாரம்)
வட்டார அளவில் :
1. வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) .
2. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)
கிராம ஊராட்சி அளவில் : கிராம ஊராட்சித் தலைவர்
No comments:
Post a Comment