நண்பர் ஒருவரின் பேஸ்புக் பதிவில் படித்தது
நிலத்தின் வழிகாட்டி மதிப்பை விஷம் போல ஏற்றி சட்டப்படி திருடுவது எப்படி?
"சட்டப்படி" வங்கிக் கடனா.... எப்படி?
ஊருக்கு வெகு தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் 100 ஏக்கர் பூமி வாங்குவார்கள். அந்த பூமி வறண்டு காய்ந்து போய் இருக்கும். சும்மா கொடுத்தால் கூட யோசிப்பார்கள். இத்தகைய இடங்களில் ஏக்கர் ஒரு லட்சம் என வாங்கி விடுவார்கள். 100 ஏக்கரும் சேர்ந்து மொத்தம் ஒரு கோடிதான்.
பின்னர் அதன் ஒரு பகுதியில் ஒரு ஏக்கரை தங்களது உறவினர் பெயரில் ஏக்கர் 50 லட்சம் என பல மடங்கு அதிக விலைக்கு விற்று அதன் விற்பனை விலையான 50 லட்சத்துக்கே முத்திரைத்தாள் வாங்கி பதிவு செய்துவிடுவார்கள். இனி அந்த பகுதியில் ஏக்கர் 50 லட்சம் என்பது தான் அரசு வழிகாட்டி மதிப்பீடு ஆகிவிடும்.
பத்திரப்பதிவு அலுவலக முத்திரைத்தாள் விதிகளின்படி குறைத்துதான் மதிப்பீடு செய்யக்கூடாது, அரசுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அதிகமாக மதிப்பீடு செய்ய தடையில்லை.
100 ஏக்கர் பூமியின் சர்வே எண்ணிலேயே விற்பனை செய்யப்பட்ட இந்த ஒரு ஏக்கர் பூமியும் வருவதால் மீதி 99 ஏக்கர் விலையும் இனிமேல் ஏக்கர் 50 லட்சம்தான்.
அதாவது "சட்டப்படி" இந்த 99 ஏக்கர் பூமியின் வழிகாட்டு மதிப்பீடு 49 கோடி 50 லட்சம்.
இதன் அடிப்படையில் வங்கியில் கடன் கேட்டால் ஒரு கோடி மதிப்பு பூமிக்கு "சட்டப்படி" சுமார் 15 -20 கோடி ரூபாய் கடன் கிடைக்கும்.
பின்னர் "கட்ட முடியாத சூழ்நிலை" ஏற்பட்டால் கடன் வாங்கியவர்க்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு கோடி தான் நட்டம் மீதி 14 கோடி லாபம் தான்.
இந்த பூமியை வங்கி ஏலத்தில் விற்க போனால் மொத்த பூமியும் சேர்த்து வாங்கிய ஒரு கோடி விலை சொன்னாலும் வாங்க ஆள் வர மாட்டார்கள்.
அந்த நிறுவனத்தின் இதர சொத்துக்களும் "சட்டப்படி" இந்த நிலையில்தான் இருக்கும். எனவே கடனை மீட்க முடியாமல் போய்விடும். இதுதான் வராக்கடன்.
எல்லாமே ஆவணங்களின்படி சட்டப்படி சரியா இருக்கும். எனவே யாரையும் குற்றம்சாட்ட முடியாது.
நிலத்தை பார்வையிட செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தெரியும் இந்த இடத்தில் இந்த விலை இல்லை என்று.
இருந்தும் சட்டப்படி அரசின் வழிகாட்டி மதிப்புதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அப்புறம் என்ன Write Off தள்ளி வைப்புதான். இது போன்ற அர்த்தமற்ற இயந்திரத்தனமான கடன் வழங்கும் செயல்பாடுகளை திருத்தி அமைத்தால் வராக்கடன் என்பது இருக்காது.
பெரிய கார்பொரேட் கம்பெனிகள் கூட குறுக்கு வழியில் இப்படித்தான் வங்கி அடமான சொத்துக்களை அதன் சொத்து மதிப்பு ஆவணங்களை பெருமதிப்பு வருமாறு தயாரிக்கின்றனர்,
வங்கி மேலாளரின் அனுபவமின்மை, அந்த ஊர் நகரம் பற்றிய பரிச்சயமின்மை, ஆவணங்கள் சரியாக இருத்தல் மேலிடத்து அழுத்தம், லஞ்சம் , டார்கெட், வருமான ,சொத்துவரி சரியாக இருத்தல்,போன்ற பல சாத்தியக் கூறுகளால் வங்கி இந்த திடீர் மதிப்பு கூடரடப்பட்ட நிலங்களுக்கு கடன் தரும் நிலைக்கு தள்ளப்பட்டுகிறது,
No comments:
Post a Comment