Wednesday, December 16, 2020

நிலஅளவை தொடர்பான ஆவணங்களும் அவை பாதுகாக்கப்படும்* *அலுவலகங்களின் விவரமும்*


பொது தகவல் அலுவலர் விவரம்* -
*மேல்முறையீட்டு அலுவலர் விவரம்*

1. ஆரம்ப நிலஅளவை புலப்படச் சுவடிகள்
(Blue Print Copies)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது)
மாவட்ட வருவாய் அலுவலர்
2. கிராம படங்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது)
மாவட்ட வருவாய் அலுவலர்
3. அச்சிடப்பட்ட பழைய செட்டில் மெண்ட் அ பதிவேடுகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட வருவாய் அலுவலர்
4. நிலவரித்திட்ட அலுவலர் அலுவலக வழக்கு கோப்புகள்
மாவட்டஆட்சியர்
அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட வருவாய் அலுவலர்
5. நிலவரித்திட்ட அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட நிலவரித்திட்ட நிலப் பதிவேடு நகல்
(S.L.R. COPy)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட வருவாய் அலுவலர்
6. நகர நில அளவை மூல ஆவணங்கள்
நிலஅளவை மத்திய அலுவலகம்
உதவி இயக்குநர் (வரைபடம்) மத்திய நிலஅளவை அலுவலகம் சென்னை
இணை இயக்குநர் மத்திய நிலஅளவை அலுவலகம்
7. நிலஉடைமை பதிவேடு திட்ட புலப்படச் சுவடி
வட்டாட்சியர் அலுவலகம்
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
8. நில உடைமை பதிவேடு திட்ட அ- பதிவெடு
வட்டாட்சியர் அலுவலகம்
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
9. நில உடைமை பதிவேடு திட்ட சிட்டா
வட்டாட்சியர் அலுவலகம்
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
10 . நில உடைமை பதிவேடு திட்ட கிராம படங்கள்
வட்டாட்சியர் அலுவலகம்
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
11 . நில உடைமை பதிவேடு திட்ட மூல ஆவணங்கள் (புலப்படம்)
நிலஅளவை மத்திய அலுவலகம்
உதவி இயக்குநர் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம் சென்னை
இணை இயக்குநர் மத்திய நில அளவை அலுவலகம் சென்னை
12. வட்ட வரைபடங்கள் (விற்பனை பிரதிகள்)
நில அளவை பதிவேடுகள் துறை.உதவி இயக்குநர் அலுவலகம்
ஆய்வாளர் நில அளவை
உதவி இயக்குநர்
13 மாவட்ட வரைபடங்கள்
(விற்பனை பிரதிகள்)
நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகம்
ஆய்வாளர் நில அளவை
உதவி இயக்குநர்

Tuesday, December 15, 2020

கூட்டுறவுத்துறை கொள்கை விளக்கம் & மக்கள் சாசனம்





கூட்டுறவுத்துறை கொள்கை விளக்கம்









கூட்டுறவு துறை மக்கள் சாசனம்


Monday, December 14, 2020

நில அளவீடு இணைய வழி விண்ணப்பித்து வரவில்லையா ? இதை செய்யுங்கள்

ஐயா, வணக்கம்.
 தமிழ்நாட்டில் வருவாய்த்துறை தொடர்பான சேவைகள் பெரும்பாலும் இணையவழி விண்ணப்பித்தல் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றான, பட்டா நிலங்களில்  கட்டணம் செலுத்தி நில அளவீடு(survey) செய்யும் சேவைக்கு கட்டணம் செலுத்திய நாளில் இருந்து முப்பது நாட்களுக்குள் அளந்து தரவேண்டும் என விதிகள் உள்ளது. எனினும் நம் மாநிலத்தின் பல இடங்களில் வருவாய் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள நில அளவையர்கள்(surveyors) முறையாக விண்ணப்பித்தும் ஏதாவது காரணங்கள் சொல்லி பல மாதங்கள் அளந்து தராமல் விண்ணப்பதாரர்களை அழைக்கழிக்கின்றனர். இது தொடர்பாக வட்டாச்சியர் மற்றும் மாவட்டஆட்சியர் அவர்களிடம் புகார்  அளித்தாலும் சரியான நடவடிக்கை இல்லை மற்றும் அந்த புகார் மனுக்கள் சம்பத்தப்பட்ட  நில அளவையர்கள் அவர்களிடமே செல்வதால் எந்த நியாயமும் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் மாண்பமை.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆசை தம்பி எதிர் வருவாய் அலுவலர் W.P(MD).NO-13465 OF 2020 and WMP(MD).NO.11228 OF 2020 தீர்ப்பு நாள்: 05.10.2020. என்ற வழக்கில், கட்டணம் செலுத்தி 30 நாட்களில் நில அளவீடு பணியை முடிக்காத வருவாய்த்துறை பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை/பணிநீக்கம்  செய்ய வேண்டும்  என்றும், இந்த தீர்ப்பில்‌ கூறப்படுள்ளதை நிறைவேற்றும்பொருட்டு அனைத்து பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 215 ன் படி ஒரு உயர்நீதிமன்ற தீர்ப்பு அந்த மாநிலம் முழுவதும் செயலாற்றல் பெறும். எனினும் சில அரசு பணியாளர்கள் மேற்கண்ட தீர்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை என வாதம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும், மாண்பமை.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பினை நடைமுறை படுத்தும் வகையிலும் பட்டா நிலங்களை   நில அளவீடு(survey) செய்வது தொடர்பாக ஒரு தெளிவான சுற்றறிக்கையை வெளியிட ஆவண செய்ய வேண்டும் என மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் அவர்களையும் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர்கள்/அதிகாரிகள் அவர்களையும் நான் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கிராம நிர்வாக அலுவலர் அரசாணை ஆண்டுகள்...!

வணக்கம் நண்பர்களே...!

VAO முக்கிய வருடங்கள்
1. கிராம நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்பட்ட ஆண்டு: 1980 (14.11.1980)
2. கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு: 1980 (13.11.1980)
3. கிராம தலையாரி, வெட்டியான் மற்றும் கிராம உதவியாளர்கள் பணி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1995
4. கிராம உதவியாளர் பணி வரையறுப்பு: 1998
5. கிராம நிர்வாக அலுவலர் பதவி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்த ஆண்டு: 1980 (12.12.1980)
6. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அலுவல் ரீதியாக சொந்தமாக புதிய கட்டடம் கட்டப்பட்ட ஆண்டு: 1999
7. கிராம நிர்வாக அலுவலர்கள் பணி, மற்றும் கடமைகள் பற்றிய அரசானை 581 வெளியிடப்பட்ட ஆண்டு: 1987
8. தமிழ் நாடு வருவாய் வசூல் சட்டம்: 1864
9. தமிழ் நாடு இனாம் ஒழிப்பு சட்டம்: 1963
10. தமிழ் நாடு ஜமீன் ஒழிப்பு சட்டம்: 1948
11. தமிழ் நாடு இந்து சமய அறக்கட்டளை சட்டம்: 1951
12. தமிழ் நாடு தேவதாசி இனாம் ஒழிப்பு சட்டம்: 1951 (பிரிவு 34)
13. தமிழ் நாடு நில உச்சவரம்பு சட்டம்: 1963 (காமராசர், அதிகபட்சம் 30 ஏக்கர்)
14. தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம்: 1905
15 . தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் திருத்தும் செய்யப்பட்ட ஆண்டு : 1976
16. CT Act (Cattle Tresspass): 1871
17. TT ACt (Treasure Trove): 1878
18. தமிழ் நாடு நகர்ப்புற நில வரிச் சட்டம்: 1966
19. குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம்: 1955
20. பட்டா நிலங்களை அரசு கையகப்படுத்தும் சட்டம்: 1894
21. கலிலியோ வெப்ப மானிய கண்டுபிடித்த ஆண்டு: 1607
22. ஈரமானி கண்டுபிடிக்க பட்ட ஆண்டு: 1825
23. தந்தி வழியே வானிலை தகவல் அனுப்பும் முறை கண்டுபிடிக்க பட்ட ஆண்டு: 1844
24. தமிழ் நாடு பிறப்பு இறப்பு கட்டாய சட்டம்: 1969
25. அச்சடிக்கப்பட்ட நிரந்தர சாதி சான்றிதல் முறை கொண்டு வரப்பட்ட ஆண்டு: 1988

நன்றி...!

வருவாய் துறை முக்கிய அரசாணைகள்

வணக்கம் நண்பர்களே...!

[1]- தனியார் ஒருவருக்கு 0.14.0 ஹெக்டேர் (35 செண்ட்) க்கு கூடுதலாக மனைவரிப் பட்டா வழங்கப்படுவதில்லை. 

அரசாணை எண் 808 வருவாய் (நி. அ. 2-1) துறை, நாள் - 5.10.1998.

[2]- நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் துறைத் தலைவரான நில நிர்வாக ஆணையருக்கு கொடுக்கப்படும் மனுக்களை பரிசீலித்து, மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த ஆணைகளில் தவறு இருப்பின் அதைச் சுட்டிக்காட்டி திருத்துவதற்கும், மாற்றி அமைப்பதற்கும், அதுபோல் மற்றைய மனுக்களையும் தேவையானால் தன்னிச்சையாக ஏற்று திருத்துவதற்கும், மாற்றி அமைப்பதற்கும் நில நிர்வாக ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. 

அரசாணை எண். 396 வருவாய் (நி. அ. 2(1))துறை, நாள் - 18.9.2003.

[3]- பட்டா நிலத்தில் மனை வாங்கி வீடு, கட்டிடம் கட்ட உள்ளாட்சி ஒப்புதல் பெறுவதற்கு 1971ம் வருட நகர ஊரமைப்பு திருத்த சட்டப் பிரிவு 47-A - 2(3)ன்படி மாவட்ட ஆட்சியரிடம் N. O. C பெற வேண்டும். 

(Director of Town and Country Planning Circular 24935/2010 G. R. DT - 23.9.2011).

[4]- பட்டா தாக்கல் செய்யப்படும் இனங்களில் பட்டாவின் உண்மைதன்மை குறித்து வருவாய்த்துறையிலிருந்து விவரங்கள் கேட்டறியும் வரை பதிவுக்கு வந்துள்ள ஆவணத்தை பதியாமல் நிலுவையில் வைக்க வேண்டும். 

(பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை கடித எண் 18339/C 1/2012, DT - 25.4.2012) .

[5]-சொத்து பதிவிற்காக தாக்கல் செய்யப்படும் அடையாள அட்டையில் உள்ள எழுத்துகளில் உள்ள தட்டச்சு பிழை, ஆவணத்திலுள்ள தற்போதைய முகவரி மாற்றம் ஆகிய காரணங்களுக்காக சார்பதிவாளர் பதிவுக்கு மறக்கக்கூடாது. 

(ப. து. த. ஆணை எண் 21236/இ1/2001,நாள் - 4.2.2003).

[6]- சொத்து மதிப்பு ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் இருக்குமானால் PANCARD அல்லது படிவம் 60ல் உறுதிமொழி தாக்கல் செய்ய வேண்டும். 

(ப. து. த ஆணை எண் 5031/இ1/1998,நாள்-7.12.1998).

[7]- கிரையம் பெற்றவரின் சொத்து, விற்றவரின் பெயரில் கிராம கணக்கில் இருந்தால், மேற்படி கிரைய ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யலாம். 

(CLA Lr. K4/369/2013, DT - 5.2.2013).

[8]- நிலத்தை மாற்றம் செய்பவர் பெயரும், 10(1) சிட்டாப்படி பதிவு செய்யப்பட்டவர் பெயரும் வெவ்வேறாக இருந்தால் நிலத்தை வாங்குபவர், விற்பவர் ஆகியோரை அலுவலகத்தில் விசாரணை செய்ய வேண்டும். 

ஆவணச் சான்றுகள், முந்தைய விற்பனை பத்திரங்கள், தீர்வை ரசீதுகள், கிராம நிர்வாக அலுவலரின் நேர்முக சாட்சியங்கள் முதலியவற்றை பரிசீலனை செய்து 10(1) சிட்டாப்படி பதிவு பெற்ற நிலச்சுவான்தாரர் மற்றும் நிலத்தை தன் பெயருக்கு மாற்றி கேட்பவர் ஆகியோர்களுக்கிடையே உள்ள தொடர்பை கண்டறிந்து ஆணை பிறப்பிக்க வேண்டும். 

(நிலவரித்திட்ட இயக்குநர் கடிதம் எண் H 1.113.287/1981,dt - 4.4.1981).

[9]- அனுபவத்தை பிரித்து காண்பிக்கும் வகையில் பூமியில் அத்துகள் இல்லையென்றாலும் பத்திரத்தில் கண்ட அளவு மற்றும் எல்கைமால்களின் படி சம்மந்தப்பட்ட நபர்களின் ஒப்புதலின் பேரில் உட்பிரிவு செய்து பட்டா வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும். 

(CLA/K2/46562/1984, DT - 12.9.1985) (10)- உட்பிரிவுக்கு ஆட்பட்ட பட்டா மாறுதல் இனங்களில் வட்டாட்சியர் ஆணையிட வேண்டும். (G. O. Ms. 916 C. T & R. E, DT - 23.8.1984).

நன்றி...!

Wednesday, December 9, 2020

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி




பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்பிவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா மாறுதல் மனுவின் நிலையை கேட்டால் பட்டா மாறுதல் நடக்கும்

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன. கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்

விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

 கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

 புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: மூலபத்திரம்  ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

 இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.

23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் போதுமானது அல்ல
: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்

Monday, December 7, 2020

பதிவேடுகள்

A– பதிவேடு : கிராம கணக்கு மற்றும் சம்பந்தப்பட்ட வட்டம் ஆகிய இரு நிலைகளில் பராமரிக்கப்படும். இந்த பதிவேட்டில் புல எண், உட்பிரிவு மாற்றம், நிலம் ஒப்படைப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். (இது கிராமக் கணக்கில் இருக்கும்)

B–பதிவேடு : பழைய கால எஸ்டேட் இனாம் நிலங்கள் மற்றும் 1963–ம் ஆண்டுக்கு முன்பாக கிராமக் கணக்கில் உள்ள நிலங்கள் பற்றி இந்தப்பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம்.

B –1 பதிவேடு : இந்த பதிவேட்டில் தர்ம காரியங்கள் சம்பந்தமாகவும், கோவில்கள் மற்றும் இதர வழிபாட்டு தலங்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலம் பற்றிய தகவல்களும், அறக்கட்டளை மற்றும் கிராம நலன் பொருட்டு அளிக்கப்பட்ட நிலங்கள் பற்றியும் தகவல்கள் பதியப்பட்டிருக்கும்.

C–பதிவேடு : அரசின் குத்தகை நிலங்கள் பற்றிய தகவல்கள் இந்த பதிவேட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

D–பதிவேடு : பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்கள் இந்த பதிவேட்டில் இருக்கும்.

F–பதிவேடு : அரசின் ஒரு துறையிலிருந்து, மற்றொரு துறைக்கு நில உரிமை மாற்றம் செய்தது பற்றிய தகவல்கள் இந்த பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

G – பதிவேடு : வாரிசுதாரர்கள் இல்லாததால் அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலங்களின் விவரங்கள் இந்தப் பதிவேட்டில் பராமரிக்கப்படும்.

மேற்கண்டவை தவிர இன்னும் பல உட்பிரிவுகளில் பதிவேடுகள் வட்ட அளவில் அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஆடு, மாட்டு கொட்டகை அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act )கீழ் ஏழை எளிய மக்களுக்கு ஆடு மாடு கொட்டகை கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் த்திட்டமானது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
தகுதிகள்
பயனாளிகள் கண்டிப்பாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்திருக்கவேண்டும்.
அதுமட்டுமல்லாமல் குறைந்தது 10ஆடுகள் அல்லது 2 மாடு இருக்க வேண்டும்.
கொட்டகைக் கட்டுவதற்கான நிலம் பயனாளிகளின் பெயரில் இருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
ஆதார் அட்டை
ரேஷன் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
ஆகியவற்றை இந்த விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
உங்கள் பகுதி கால்நடை மருத்துவரிடம் அல்லது ஊராட்சி செயலாளரிடம் தொடர்பு கொண்டு, இந்த திட்டத்தினைப் பற்றியக் கூடுதல் விபரங்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
மானியம் எவ்வளவு?
2 மாடுகள் வைத்திருந்தால் ரூ.53,425 வழங்கப்படும்
5 மாடுகள் வைத்திருந்தால் ரூ. 81,580 வழங்கப்படும்
10ஆடுகள் வைத்திருந்தால் ரூ.1லட்சத்து 2135 வழங்கப்படும்
20ஆடுகள் எனில் 1லட்சத்து 40,520ரூபாய் வழங்கப்படும்

கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் ( VAO DUTIES)



கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.

கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

என்னதான் பணிகள் ?

பட்டா பெயர் மாற்றுதல்.

கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.

நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.

பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.

தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.

கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.

காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.

இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.

கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.

கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.

கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.

புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.

முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.

பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.

முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.

வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.

உழவர்கள் நிலப் பட்டாக்களை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.

பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.

சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.

நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.

முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.

அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.

கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை.

இப்படி ஏராளமானப் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ. க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


“கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்யமுடியும்.

கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) போன்றோர்கள், பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறும் பட்சத்தில் அவர்களின் மேல் துறைச் சார்ந்த நடவடிக்கை எடுக்கக் மேல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.

கிராம வரைபடத்தில் உள்ள குறியீடுகள்

Friday, December 4, 2020

வருவாய்த்துறை முக்கிய அரசாணைகள்



1.  கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No - 581, வருவாய்த்துறை, நாள் - 3.4.1967 என்ற அரசாணை உள்ளது. 

2. வருவாய் ஆய்வாளர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No - 581, வருவாய்த்துறை, நாள் - 3.4.1987 என்ற அரசாணை உள்ளது. 

3. மண்டல துணை வட்டாட்சியர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No - 921, வருவாய்த்துறை, நாள் - 15.6.1991 என்ற அரசாணை உள்ளது. 

4.  வட்டாட்சியர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No - 921,  வருவாய்த்துறை, நாள் - 15.6.1991 என்ற அரசாணை உள்ளது. 

5.  வருவாய் கோட்டாட்சியர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No - 581, வருவாய்த்துறை, நாள் - 3.4.1987 என்ற அரசாணை உள்ளது. 

6.  நில உடமைப் பதிவேடு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்பட்ட தவறுகளை (Rectification of defects in the updating of registry cases) மாவட்ட வருவாய் அலுவலர் தீவிர விசாரணை செய்த பின்னரே சரிசெய்ய வேண்டும். மண்டல துணை வட்டாட்சியருக்கு இந்த அதிகாரம் இல்லை என்று G. O. Ms. No - 385, வருவாய் (பொது - 3)துறை, நாள் - 17.8.2004 அரசாணை உள்ளது. 

7.  தனியார் ஒருவருக்கு 0.14.0 ஹெக்டேர் (35 சென்ட்) மேற்பட்ட இடங்கள் மனைவரிப்பட்டா வழங்கப்படுவதில்லை என G. O. Ms. No - 808, வருவாய் (நி. அ. 2-1)துறை, நாள் - 5.10.1998 என்ற அரசாணை உள்ளது. 

8.  தனி வட்டாட்சியரின் ஆணையை எதிர்த்து 30 நாட்களுக்குள் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். கோட்டாட்சியரின் ஆணையை எதிர்த்து 30 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என G. O. Ms. No - 693, Revenue, LA 2 (1) Dept, DT - 24.7.1997 அரசாணை உள்ளது. 

9. மாவட்ட வருவாய் அலுவலரின் ஆணையை எதிர்த்து 30 நாட்களுக்குள் C. L. A யிடம் இரண்டாவது மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என G. O. Ms. No - 396, Revenue (L. A. (1))Dept, DT - 18.9.2003 அரசாணை உள்ளது.

Wednesday, December 2, 2020

பதிவுத்துறை சம்பந்தப்பட்ட கேள்வி - பதில்கள்.....

1)- பத்திரம் பதிய எவ்வளவு செலவாகும்? 

 பதில்: நீங்கள் என்ன வகை ஆவணம் என்பதை இங்கே குறிப்பிடவில்லை. ஆகையால் விற்பனை ஆவணம் (Sale Deed) என்று எடுத்துக்கொண்டால், அந்தச் சொத்தின் சந்தை மதிப்பில் (அரசு வழிகாட்டி மதிப்பு) 7 சதவிகிதம் முத்திரை கட்டணமாகவும், 1 சதவிகிதம் பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.  

2. சொத்தின் மதிப்பு எவ்வளவுக்கு அதிகமாக இருந்தால், அந்தச் சொத்தை பதிவு செய்ய வேண்டும்? 

பதில்: ரூ. 100 க்கு அதிகமான மதிப்பு கொண்ட அசையாத சொத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும்.  

3. குறிப்பிட்ட மதிப்புக்கு கீழ் இருந்தால், மனையை பதிவு செய்ய கட்டணம் கிடையாது என்று என் நண்பன் சொன்னான். அந்தத் தொகை எவ்வளவு என்று குறிப்பிட முடியுமா? 

பதில்: ஆம், அந்தக் குறிப்பிட்ட தொகை ரூ. 25,000. 

4. நான் வாங்கப் போகிற மனையின் அரசு மதிப்பு சதுர அடி ரூ. 1,000. சந்தை விலை ரூ. 500. எந்த மதிப்புக்கு நான் பத்திரம் பதிவு செய்ய வேண்டும்?

பதில்: நீங்கள் அரசு வழிகாட்டி மதிப்புக்குத்தான் ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் குறைந்த மதிப்பிற்குப் பதிவு செய்திருந்தால் சார் பதிவாளர் அந்த ஆவணத்தை, சிறப்பு துணை மாவட்ட ஆ ட்சியர் (முத்திரைத்தாள்) அலுவலகத்திற்கு அந்தச் சொத்தின் சந்தை மதிப்பை அறிய அனுப்பி வைப்பார். அவர் கண்டறிந்த மதிப்பும் நீங்கள் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள மதிப்பும் ஒன்றாக இருந்தால், உங்கள் ஆவணம் உங்களிடம் ஒப்படைக்கப்படும். ஒருவேளை அந்த மதிப்பு நீங்கள் குறிப்பிட்டுள்ள மதிப்பை விட அதிகமாக இருந்தால், கூடுதல் மதிப்புக்கு முத்திரை, பதிவு கட்டணம் நீங்கள் தனியே செலுத்த வேண்டியிருக்கும். மேலும், சில நேரங்களில் அப்போதைய சந்தை நிலவரத்தை வைத்து சந்தை மதிப்பை சிறப்பு துணை மாவட்ட ஆட்சியர் அரசு வழிகாட்டி மதிப்பை விட அதிகமாகக் கணக்கிட வாய்ப்பும் உள்ளது. 

5. கடந்த 5 வருடங்களுக்கு முன் வீட்டு மனை ஒன்று வாங்கினேன். அதனை இப்போது விற்க முயற்சிக்கும் போது சர்வே எண் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதற்கு திருத்தல் பத்திரம் போட வேண்டும் என்கிறார்கள். 2010-ல் சதுர அடி அரசு மதிப்பு 1000 ரூபாய். இப்போது ரூ. 2,000. வித்தியாசப்படும் தொகைக்கு முத்திரைத் தீர்வை பதிவு கட்டணம் அலுவலகத்தில் கட்டச் சொல்கிறார்கள். இந்தத் தொகையை எனக்கு தவறாக பதிவு செய்து கொடுத்த எனக்கு இடத்தை விற்றவரிடம் கேட்க முடியுமா?

பதில்: பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் எந்தத் திருத்தம் செய்யப்படுவதாக இருந்தாலும் பிழை திருத்தல் ஆவணம் மூலம் தான் செய்யப்படும். எல்லா பிழை திருத்தல் ஆவணத்திற்கும், அதிலுள்ள கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகளுக்காக கூடுதல் முத்திரை வரியோ கட்டணமோ வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் தாய் பத்திரத்தில் சர்வே எண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் ஆகிய மற்ற குறிப்பிட்ட விஷயங்கள் தாய் பத்திரத்தில் உள்ளபடியே இருந்தால், பிழை திருத்துவதற்கு ரூ. 200 முதல் 300 வரை செலவாகலாம். ஒருவேளை ஆவண மதிப்பில் உள்ள புதிய விகிதப்படி சார் பதிவாளர், கூடுதல் முத்திரை கட்டணத்தை கட்ட சொன்னால், நீங்கள் உயர் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்யலாம். உங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

6. புதிதாக ஃபிளாட் பதிவு செய்யும்போது, பத்திரப் பதிவுக்கு என்னென்ன கட்டணங்கள் செலுத்த வேண்டி இருக்கும்? விரிவாக விளக்கவும்.

புதிய ஃபிளாட்டுக்கு, முதலில் நீங்கள் கட்டுமான உடன்படிக்கைப் பத்திரத்தைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு கட்டட மதிப்பில் 1 சதவிகிதம் முத்திரை கட்டணமாகவும், 1 சதவிகிதம் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். பின்னர், பிரிபடாத மனை விற்பனை ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பிரிபடாத மனை (யூடிஎஸ்) வழிகாட்டி மதிப்பில் 7 சதவிகிதத்தை முத்திரை கட்டணமாகவும் 1 சதவிகிதத்தைப் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.  

7. நான்கு வருட பழைய அடுக்குமாடி குடியிருப்பை வாங்குகிறேன். வீட்டின் பரப்பு 1000 சதுர அடி. யூடிஎஸ் 600 சதுர அடி. வீட்டை 35 லட்ச ரூபாய்க்கு வாங்குகிறேன். எனக்கு பத்திரப் பதிவுக்கு எவ்வளவு செலவாகும்?

 

நீங்கள் வாங்கும் கட்டடம் எவ்வளவு பழையதாக இருந்தாலும், பொதுப்பணி துறையினர் வழங்கியுள்ள மதிப்பின் அடிப்படையில் உங்கள் கட்டடம் மதிப்பிடப்படும். இந்த மதிப்பு ஒவ்வொரு வருடமும் இவ்வாறு கணக்கிடப்படும். இதன் விவர அட்டவணை சார் பதிவாளரிடம் இருக்கும். இதன்படி சொத்தின் தற்போதைய மதிப்புக்கு 7% முத்திரை கட்டணமும் 1% பதிவு கட்டணமும் செலுத்த வேண்டும். 

முதலில் நீங்கள் அந்த நிலத்தின் பிரிபடாத பங்கின் அரசு வழிகாட்டி மதிப்பையும் அந்தக் கட்டத்தின் ஒரு சதுர அடிக்கான விலையையும் கேட்டு அறிந்து அதற்கேற்ப பத்திரத்தை உருவாக்க வேண்டும். அந்த பழைய ஃப்ளாட்டை பதிவிற்கு பின் சார் பதிவாளர் நேரில் வந்து சோதனை செய்வார். அவர் இடும் மதிப்பு ஆவண மதிப்பை விட கூடுதலாக இருந்தால் அதற்கு எவ்வளவு கூடுதல் முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை சொல்வார். மதிப்பு சரியாக இருந்தால் ஆவணத்தை அப்படியே திருப்பி தருவார். 

8. என் பெயரில் இருக்கும் சொத்தை என் மனைவிக்கு தானமாக கொடுக்க விரும்புகிறேன். சொத்தின் மதிப்பு ரூ. 40 லட்சம். என் மனைவியின் பெயருக்கு சொத்தை மாற்ற எவ்வளவு செலவாகும்? 

 

அசையாத சொத்து மனைவி பெயருக்கு மாற்றப்படும்போது, அதன் மதிப்பு ரூ 40 லட்சமாக இருந்தால் ரூ. 25,000 முத்திரை கட்டணமாகவும், ரூ. 5,000 பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். 

9. நான் வாங்கும் சொத்துக்கு அரசு வழிகாட்டி மதிப்பு, சந்தை மதிப்பை விட இரு மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனை குறைத்து, சரியான சந்தை மதிப்பில் பத்திரம் பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?

பதில்: 4வது கேள்விக்கான பதிலை பார்க்கவும். 

10. நான் புதிதாக ஒரு வீடு வாங்க இருக்கிறேன், வீட்டின் மதிப்பு 50 லட்சம் ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவுக் கட்டணமாக சொத்து மதிப்பில் 12 சதவிகிதம் பில்டர் கேட்கிறார். சரி தானா? 

 

பதில்: 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டுக்கு முத்திரைக் கட்டணம் 3,50,000 ரூபாய், பதிவுக் கட்டணம் 50,000 ரூபாய் மட்டுமே. 

11. நான் 28 வருடங்களுக்கு முன் ஒரு வீட்டை என் பெயரில் வாங்கினேன், தற்போது என் மகனின் பெயருக்கு அதை மாற்றி பதிவு செய்ய வேண்டும் அதற்கு என்ன நடைமுறைகள் என்று விளக்கவும்? அதோடு எவ்வளவு செலவாகும் என்பதையும் குறிப்பிடவும்.

 

பதில்: உங்கள் பெயரில் உள்ள வீட்டை உங்களுடைய மகன் பெயருக்கு மாற்ற தான ஏற்பாடு பத்திரம் எழுதி பதிவு செய்ய வேண்டும். இதற்கு முத்திரைக் கட்டணம் தற்போதைய சந்தை மதிப்பில் 1 சதவிகிதமாக இருக்கும். ஆனால், இந்த கட்டணம் அதிகபட்சம் 25,000 ரூபாய் மட்டுமே. இதைத் தவிர்த்து சொத்து மதிப்பில் 1 சதவிகிதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் அதிகபட்சம் 5,000 ரூபாய் மட்டுமே. 

12. சொத்து பதிவு மற்றும் முத்திரைக் கட்டணம் யாருக்கு செல்கிறது. இதனால், பொது மக்களுக்கு என்ன நன்மை?

 

பதில்: முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் அரசின் வருவாய்க்கு செல்கிறது. இது பொது நோக்கங்களுக்காக வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) மூலம் செலவழிக்கப்படுகிறது. 

 

13. நில மோசடிகளில் கிரிமினல் வழக்கு எப்படி தொடுப்பது? எந்தெந்த சட்டப் பிரிவுகளில் தொடுப்பது?

 

பதில்: நில மோசடி, நில அபகரிப்பு ஆகியவற்றில் இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி)பிரிவு 120 பி (குற்றச்சதி), பிரிவுகள் 405, 406 (நம்பிக்கை மோசடி), பிரிவுகள் 441, 447 (குற்ற ஆக்கிரமிப்பு), பிரிவுகள் 465, 466, 468 (ஃபோர்ஜரி) பிரிவுகள் 472, 473, 474, 475, 476 (போலி உருவாக்கல்), 416, 419 (ஆள்மாறாட்டம்), பதிவுச்சட்டம் பிரிவு 81, 82, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் முதலில் காவல் நிலையத்தில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகாரை சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்தால் அவர் அதை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அருகில் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பார். 

14. நான் ஒரு ஆவணத்தைக் கையெழுத்து வாங்கி உடனடியாக பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது. இந்த ஆவணம் எதுவரை செல்லுபடி ஆகும்?

 

ஒரு ஆவணத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்துப் போட்டுவிட்டால் நான்கு மாதங்களுக்குள் சார் பதிவாளர் முன்பாக பதிவுக்கு தாக்கல் செய்யவேண்டும். இயலாதவர்கள் அரசு விதித்த விகிதச்சாரப்படி அபராதம் கட்டி மேலும் நான்கு மாத காலம் முடிவதற்குள் தாக்கல் செய்துகொள்ளலாம். ஆவணத்தை எழுதிக்கொடுத்தவர்களில் எவராவது சார் பதிவாளர் முன்பு தோன்றி ஒப்புதல் கையெழுத்து செய்யவும், ரேகை பதிவு செய்யவும் இயலாவிட்டால் மேலும் நான்கு மாதங்கள் அபராதம் கட்டுவதன் மூலம் காலத்தை நீட்டிக்கலாம். எனவே ஆவணத்தைத் தாக்கல் செய்வதற்கு எட்டு மாதங்களும் சார் பதிவாளர் முன்பு தோன்றுவதற்கு நான்கு மாதங்களும் ஆகமொத்தம் ஒரு ஆவணத்தின் ஆயுள் ஒரு ஆண்டு காலம் ஆகும். கையெழுத்து போடப்பட்டு எட்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் சார் பதிவாளர் தாக்கல் செய்யப்படாத ஆவணம் செல்லாமல் போய்விடும். அதே போல் சார் பதிவாளர் முன் தாக்கல் செய்யப்பட்ட பின் நான்கு மாதங்களுக்குள் கையெழுத்திட்ட அனைவரும் வந்து ஒப்புதல் கையெழுத்து, கைரேகை இடுதல் முதலியன செய்யாவிட்டால் ஆவணம் பதிவு செய்ய மறுக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும். 

15. பதிவு செய்த விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா?

 

பதிவு செய்த ஆவணத்தை ஒருதலைபட்சமாக விற்பவர் மட்டும் வந்து ரத்து செய்ய இயலாது. விற்றவர், வாங்கியவர் இருவரும் வந்து ரத்து செய்தாலும் கூட அந்த ரத்து முறைப்படியான மறுவிற்பனை ஆவணத்தின் மூலமே செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மேற்படி பதிவானது, சட்டப்படி நடைமுறைப்படுத்தப்படாது என்று ஆவணத்தில் மேற்குறிப்பு செய்யப்படும். 

 

16. நில அபகரிப்பைப் பற்றி காவல் துறையில் புகார் செய்யும்போது சிவில் கேஸ் என்று சொல்லி சிவில் கோர்ட்டுக்கு போங்கள் என்று சொல்கிறார்கள், இது சரியா?   

 

பதில்: சில நிகழ்வுகளில் இது சரியாக இருக்கலாம். ஒரு சொத்தின் மீது பங்காளி சண்டை இருந்தால் அந்தச் சொத்தின் மீது உரிமையுள்ள ஒருவர் தனக்கு மட்டும் நிலத்தை அபகரித்துக்கொண்டு மற்றவர்களை விரட்ட முயற்சி செய்தால் அதில் யாருக்கு உண்மையான உரிமை உள்ளது என்பதை சிவில் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாத ஒருவர் உங்கள் சொத்தை ஃபோர்ஜரி, ஆள்மாறாட்டம், போலி ஆவணம் முதலிய வழிகளில் அபகரிக்க முயற்சிக்கும்போது அது முழுக்க முழுக்க கிரிமினல் குற்றம் ஆகும்.  

17. மைனர் சொத்தை அவரது தந்தை அல்லது காப்பாளர் விற்பனை செய்தால் வாங்கலாமா?

 

இளையவர் சொத்தை நீதிமன்றத்தின் அனுமதியோடுதான் விற்பனை செய்ய முடியும். அதே போல் அறக்கட்டளைகள் சொத்தையும் நீதிமன்ற அனுமதியோடுதான் விற்பனை செய்ய முடியும்.

 

18. என் வீட்டின் உண்மையான மதிப்பு 32 லட்சம் தான் ஆனால் சந்தை விலை 41 லட்சமாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த பிரச்னையை யாரிடம் சொல்லி புரிய வைத்து என் வீட்டின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய முடியும்?

 

விடை கேள்வி 4-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

19. இரண்டு மாதங்களுக்கு முன், என் வீட்டின் சந்தை மதிப்பை விட 5 லட்சத்திற்கு கூடுதலாக பதிவு மற்றும் முத்திரைக் கட்டணத்தை செலுத்திவிட்டேன். இதை திரும்பப் பெற வழி இருக்கிறதா? 

 

நீங்களாக முன் வந்து வற்புறுத்தலின்றி செலுத்தியிருந்தால் அதைத் திரும்பப் பெற சாத்தியமில்லை. மாறாக வலியுறுத்தலின் பேரில் எதிர் உணர்வின் அடிப்படையில் (under protest) செலுத்தியிருந்தால் மேலதிகாரிக்கு முறையீடு செய்து திருப்புத் தொகை (refund) பெறலாம். 

20 என் மனைவியின் அப்பா எனக்கு 10 சென்ட் வீட்டு மனையை தருவதாக சொல்கிறார். இதற்கு நான் எப்படி முத்திரை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்?

 

உங்கள் மனைவியின் பெயரிலோ அல்லது உங்கள் பிள்ளைகள் பெயரிலோ சொத்தை எழுதிக்கொடுப்பதாக இருந்தால், கேள்வி 8-க்கான பதிலை பார்க்கவும். 

உங்களுக்கு நேரடியாக எழுதிக்கொடுப்பதாக இருந்தால் கேள்வி 1-க்கான பதிலைப் பார்க்கவும்.

 

21. அரசு மதிப்பை விட மனையின் சந்தை விலை குறைவாக இருந்தால், எந்த மதிப்புக்கு நான் பதிவு செய்வது?

 

கேள்வி 4-க்கான பதிலைப் பார்க்கவும்

 

22.பதிவு செய்த விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. கட்டிய முத்திரை மற்றும் பதிவு கட்டணம் திரும்பக் கிடைக்குமா?

 

ஒரு ஆவணம் பதிவு செய்யப்பட்டுவிட்டால் முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது. ஆவணம் பதிவு செய்யப்படாமல் நிலுவை ஆவணமாக வைக்கப்பட்டு அப்படியே திருப்பி பெறப்பட்டால் முத்திரைத்தீர்வை பதிவுக் கட்டணத்திற்கு திருப்பு தொகை பெறலாம்.

23.பத்திரப் பதிவிற்கு செல்லும்போது சார்பதிவாளர்கள் அதைக் கொண்டு வா? இதை கொண்டு வா என்று அழைக்கழிக்கிறார்கள். பதிவிற்கு நாம் என்னென்ன கையில் கொண்டு செல்ல வேண்டும்?

அ. தயாரிக்கப்பட்ட ஆவணம்

ஆ. வீடு இருந்தால் அதன் முழு விவரம் அடங்கிய படிவம், வரைபடம், மனைப்பிரிவின் அங்கீகாரம் பெற்ற நிலப்படம்.

இ. ஆவணதாரர்களின், சாட்சிகளின் புகைப்பட அரசு/அரசுசார்பு அடையாள அட்டைகள் அசலில் மற்றும் சீராக்கப்படிவத்துடன்.

ஈ. பதிவுக் கட்டணம் ரூ. 1000/-க்கு மேல் இருந்தால் கேட்பு காசோலை, முத்திரைத் தீர்வை இட்டது குறைவாக இருப்பின் குறைவுத் தொகை ரூ. 1000/-க்கு மிகுமானால் அதற்கான கேட்பு காசோலை

உ. ஆவணரதாரர்களை நன்கு அறிந்த இரண்டு சாட்சிகள் (சாட்சிகளை அழைக்காது சென்றுவிட்டு யாரிடமாவது ரூ. 50, ரூ 100 கொடுத்து சாட்சி கையெழுத்து போட வைக்க வேண்டாம். ஏனெனில் பின்னர் சொத்துப் பிரச்சனை வந்தால் சாட்சி சொல்ல ஆளைத் தேடிப் போனால் கிடைக்கமாட்டார்கள். கிடைத்தாலும் சாட்சி சொல்ல ரூ. 1 லட்சம் கொடு ரூ. 2 லட்சம் கொடு என்று கேட்ட முன் உதாரணங்கள் உண்டு)

ஊ. தாய்ப்பத்திரங்கள் அல்லது தாய்ப்பத்திரங்கள் வங்கியில் இருப்பின் அதற்கான வங்கிச்சான்று மற்றும் தொலைந்து போயிருந்தால் அதற்கான காவல்துறை சான்று

எ. விவசாய நிலம் என்றால் அரசு வழங்கிய பட்டா முதலிய வருவாய்த்துறை சான்றுகள்

ஏ. வீடு என்றால் விற்பவர், எழுதிக்கொடுப்பவர் பெயரில் உள்ள சொத்துவரி முதலிய விவரங்கள். 

ஐ. வாரிசு முறைப்படி சொத்து வந்திருந்தால் சொத்து உரிமையாளரின் வாரிசு இவர்தான் என்பதை நிலைநாட்ட வாரிசுச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ்

ஒ. சொத்து பற்றிய நடப்பு வில்லங்கச் சான்று விற்பவர், எழுதிக்கொடுப்பவர் பெயரில் இருக்க வேண்டும் (கடந்த 10 நாட்களுக்குள் வாங்கி இருக்க வேண்டும்)

ஓ. ஆலய, வக்பு நிலம் என்றால் தடையின்மைச் சான்று (NOC)

ஒள. விவசாய நிலம் மனைப் பிரிவு ஆக்

கப்படுமானால் மாவட்ட ஆட்சியரின் தடையின்மை சான்று 

ஃ. மனைப்பிரிவுக்கான DTCP/CMDA ஏற்பளிப்பு.

அஅ. ஆவணதாரர்களில் வயோதிகம் காரணமாக வர இயலாதவர்கள் மருத்துவமனைகளில் உள்ளவர்கள் பொருட்டு பதிவாளர் அங்கே வர வேண்டுமென்றால் முன்பே மருத்துவர்களிடம் சான்று பெற்று உரிய கட்டணம் செலுத்தி பதிவாளரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று இருக்க வேண்டும்.

அஆ. குறைவு முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டுமென்றால் அதற்கு தனியான விண்ணப்பம்

அஇ. இரண்டாம், மூன்றாம் படி ஆவணங்கள் (Duplicate,Triplicate) பதிவு செய்ய தனியே விண்ணப்பம்.

அஈ. ஆவணதாரர்களில் எவரேனும் பதிவு அன்று வர இயலாவிட்டால் அவர்களுக்காக ஆவணத்தை (வந்தவர்கள் பொறுத்து பதிவை முடித்து) நிலுவையில் வைக்க தனியே விண்ணப்பம்.

அஉ. பொது அதிகார ஆவணத்தின் மூலம் பதிவு செய்ய வரும்பொழுது பொது அதிகாரம் வழங்கிய முதல்வர் (பிரின்சிபால்) உயிரோடிருக்கிறார் என்பதற்கான சான்று.

24. எனக்கு கிரயம் எழுதிக்கொடுத்தவர் எழுதிக்கொடுத்த பின் பின் வாங்குகிறார். என்ன செய்வது?

எழுதிக்கொடுத்தவர் திடீரென பின்வாங்கினால் பதற வேண்டாம். ஆவணத்தை எழுதி வாங்கியவர் அதைத் தாக்கல் செய்து வராமலிருப்பவருக்கு அழைப்பானை அனுப்பும் "கட்டாயப் பதிவு" என்று அழைக்கப்படும் நடைமுறையைப் பின்பற்றலாம். இதில் எழுதிக்கொடுத்தவர் சார் பதிவாளர் முன்பு வந்து எழுதிக்கொடுத்தது உண்மைதான் ஆனால் இப்பொழுது எனக்கு விற்க சம்மதமில்லை அல்லது கூடுதல் தொகை வேண்டும் என்று கேட்பாரானால் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் ஒப்புதல் கையெழுத்து போடாமலேயே ஆவணத்தைப் பதிவு செய்து வில்லங்கச் சான்றில் இடம்பெறச் செய்ய சட்டத்தில் வழி உள்ளது.    

 

25. உயிலை எழுதி வைத்தவர் அதனை பதிவு செய்யாமலேயே இறந்துவிட்டார். அதனை தற்போது பதிவு செய்ய இயலுமா?

 

உயில் மட்டுமல்ல கிரயம் போன்ற ஆவணங்களைக் கூட எழுதிக்கொடுத்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களது சட்டபூர்வமான வாரிசுகள், சாட்சிகள், ஆவண எழுத்தர் முதலியவர்களை அழைத்து விசாரித்து ஆவணம் இறந்து போனவரால்தான் எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது குறித்து பதிவாளர் மனநிறைவடைந்தால் அந்த உயிலையோ அல்லது கிரய ஆவணத்தையோ பதிவு செய்து வில்லங்கச் சான்றில் ஏற்ற முடியும்.

 

26. வில்லங்கம், வில்லங்கச் சான்று என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன?

 
உங்கள் அசையாச் சொத்தின் மீது எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் வில்லங்கக் குறிப்பு என்றே அழைக்கப்படும். அது வில்லங்கச் சான்றில் குறிக்கப்படும். உதாரணமாக உங்கள் தந்தை பூர்விகமாக அனுபவித்து வந்த ஒருவரிடமிருந்து அறுபது ஆண்டுகளுக்கு முன் சொத்து ஒன்றை வாங்கியிருந்தால் அந்தக் குறிப்பும் அதன் பின் உங்கள் தந்தையார் வாங்கிய கடன் மீதான அடைமானம், அது செல்லடித்ததற்கான ரசீது அனைத்தும் பதிவு செய்யப்பட்டால் வில்லங்கச் சான்றில் இடம்பெறும். இதே சொத்தை அவர் உங்களுக்கு தான பத்திரம் எழுதி கைமாற்றிக்கொடுத்திருந்தால் அதுவும் வில்லங்கச் சான்றில் இடம்பெறும். எனவே சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், அவர் சம்மதம் இல்லாமல் சொத்தின் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதுதான் உண்மையான வில்லங்கம் ஆகும். மற்றவையெல்லாம் சாதாரண பதிவு குறிப்புகளே. எனவே வில்லங்கச் சான்றை பதிவு குறிப்பு சான்று என்று அழைப்பதே சரி.

Tuesday, December 1, 2020

லஞ்ச_ஒழிப்புப்_புகார்_அளிப்பது_எப்படி…?


ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது.

லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில் இயங்கி வரும் CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும், சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள,ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கிவரும்,DVAC என்றழைக்கப்படும் “Directorate of Vigilance and Anti-Corruption” என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும்தான் செயல்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், மேற்சொன்ன மாவட்ட அதிகாரிகளின் செயல் பாடுகளையே கண்காணித்து, தவறு இறுப்பின் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டவர்கள்.

லஞ்ச ஒழிப்புச்சட்டம்

லஞ்ச ஒழிப்புச்சட்டம்-என்று அழைக்கப்படும் PREVENTION OF CORRUPTION ACT 1988- பிரிவு-2 பிரகாரம், அரசுப்பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களால் பொதுப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும், பஞ்சாயத்துப் போர்டு தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகரம், மாவட்டம் மற்றும் முனிசிபல் கவுன்சிலர்கள், சேர்மேன் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்- “PUBLIC SERVANTS” என்ற வரையரறைக்குட்பட்டதால், கடைநிலையில் உள்ள ஒரு வி.எ.ஓ.-வை எப்படி நூறுக்கும், இருநூறுக்கும், அந்தச்சட்டத்தின் கீழ், எளிதில் பொறி வைத்துப் பிடிக்கிறார்களோ, அதேபோல் பொறிவைப்பு நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள்தான்.

சமீபத்தில், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் பல மாவட்டங்களில், பஞ்சாயத்துபோர்டு தலைவர்களைக்கூட லஞ்சஒழிப்பு போலீஸார் பொறிவைத்து பிடித்துள்ளார்கள்.

லஞ்சத்தில் நான்கு வகைகள் 

அவை பின்வருமாறு:

(a) Demanding bribe from any individual, either to do any official act, or to do any service or disservice to any one

(b) Mega Level-Organised Corruption, by colluding with each other, viz. the whole team of officials right from bottom to top, the contractors and the middle men, would be colluded with each other. In this type of corruption, the Public/Govt money alone will be siphoned

(c) Minor Level-Organised Corruption, wherein the enforcing officials in the field and the organised criminals in the same area, would collude with each other for sharing the ill-gotten money.
 
(Example- The Corrupt Officials would collude with the Prohibition Offenders, Gamblers, Brothel-house-runners, Smugglers and other anti social elements in their jurisdictions for ill-gotten money)
 
(d) Petty corruption ( Mostly practiced by Corruptive Traffic Police men with the road side vendors and the Last grade servants, almost in all the Government offices, wherein only a meager amount of Rupees, viz. Rs- 100/ to 500/ are involved)

இந்த நான்கு வகையில்,

1-வது வகையான லஞ்சத்தில் ஈடுபடுபவர்கள்தான் அடிக்கடி “பொறி வைப்பு” நடவடிக்கையில் சிக்குவார்கள்.ஏனெனில், இதில் பாதிக்கப்பட்ட நபர் Motivate-ஆகி புகார் அளிக்க தயாராக இருப்பார்.

2-வது வகையான லஞ்சம் வொயிட்காலர் (white color) லஞ்சம் எனப்படும். இந்த வகை லஞ்சத்தில் இழப்புக்குண்டாவது அரசாங்கம்தான். இழப்புக்குண்டாகும் அரசுப்பணத்தின் அளவு கற்பனைக்கு எட்டாததாக இருக்கும். எப்போதாவது சில நேரங்களில் அத்திபூத்தார் போல சிலநேர்மையான அதிகாரிகளின் கண்களில் படும்போது மட்டும் திடீரென வெடித்து பரபரப்பாகும்.இந்த வகையான லஞ்சத்தால் எற்படும் பாதிப்பு கேன்ஸர் போன்றது. ஏனெனில், இதன் பாதிப்பு, கண்களுக்கு உடனடியாகத்தெரியாது,

ஆனால், நாளடவில் ஏற்படும் பாதிப்பு மரணத்திற்கு ஒப்பானது.
 
3-வது வகையான லஞ்சத்தில்தான், சமூகம் சீரழிவது கண்ணுக்கு எதிரேயே தெரியும். கள்ளச்சாரயம், சூதாட்டங்கள், ப்ராத்தல்-ஹவுஸ்கள், கலப்படங்கள், கட்டப்பஞ்சாயத்துக்கள், இன்னும் பல.

4-வது வகை லஞ்சம் பொதுமக்களுக்கு அன்றாடத் தொல்லைகள் தரும் வகையைச் சேர்ந்தது.100ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் லஞ்சத்தில் ஈடுபடும் ஒரு கடை நிலை ஊழியரை தண்டிப்பது பரிதாபத்துக்கு உரியதாகத்தெரிந்தாலும், பொது இடங்களில் அச்செயல் மிகுந்த தொல்லைக்குரியதாகவே தெரியும்.4-வது வகையில் சொல்லப்பட்டுள்ள Petty-Corruption என்பது பிச்சைக்காரர்கள் அதிகார தொனியில், பிச்சை எடுப்பது போலத்தான்.

அதே போல, லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையிலும்,மூன்று வகைகள் உண்டு.

1) Trap Case.( பொறி வைத்துப்பிடித்தல் )

2) Regular case. (FIR will be registered later based on the outcome of (a)Detailed enquiry (b) Preliminary enquiry(c) Surprise Check (d) even sometimes from Vigilance reports.

3)Regular case for D.P Assets ( FIR will be registered by DVAC for the possession of Disproportionate Assets by the public servants.FIR will be registered ,only after the Vigilance Commision and the DVAC satisfied from the preliminary enquiry or Detailed enquiry that there is a case of prima facie of D.P.Assets against the corruptive public servants. )

எப்படி புகார் அளிப்பது:

இதில், லஞ்சம்கொடுத்தால்தான் வாயையே தொறப்பேன் என்று செயல் படும் சில Corruptive Officials மீது பொறிவைப்பு நடவடிக்கை வேண்டுவோர், அந்தந்த மாவட்ட தலைநகரில் ஒரு டி.எஸ்.பி தலைமையில் செயல் படும் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு நேரில் சென்று விபரம் கூறினால் போதும். பொறி வைத்து முடித்து, அந்த லஞ்ச அதிகாரிகளை கைதுசெய்யும் வரை அவர்களே உடனிருந்து செயல் படுவார்கள். பொதுமக்கள் தாங்கள் அவ்வாறு புகார் அளித்தால், ‘நம் அரசு வேலையை முடித்துக் கொடுக்க மாட்டார்களே என்று கவலைப்பட வேண்டாம். பொறிவைப்பு நடவடிக்கை முடிந்ததும், அந்த வேலையை செய்து கொடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீஸாரே உரிய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு,ஆவன செய்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது.

2, மற்றும் 3-வது வகையான லஞ்சம் தொடர்பான குற்றங்களுக்கு, பெரும்பாலும் பொறிவைப்பு நடவடிக்கைகான புகார்கள் வராது. காரணம், இது ஒரு Collusive Corruption. இவற்றை Whistle-Blower கள்தான் வெளிக்கொண்டுவரவேண்டும்.

இந்த வகையான Collusive Natured Corruption- தொடர்பான குற்றங்களுக்குஎதிராக, FIR போடுவதற்கு அடிப்படையாகத்தேவைப்படுகின்ற Detailled Enquiry/ Preliminary Enquiry/ Surprise Check செய்வதற்கு தேவையான தகவல்கள், லஞ்சப்பணம் transaction நடைபேறும் இடம், Illegal Assets பற்றிய செய்திகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்த தரமற்றஅரசுப்பணிகள் (Sub-standard Works) பற்றிய தகவல்கள், மாமூல் நடைபெறும் விதம், அவை நடைபெறும் இடம் மற்றும் அதில் Colludeஆகியுள்ள Corrupt Officials மற்றும் வாங்கிக் கொடுக்கும் Middle men மற்றும் சமூகவிரோதக்குற்றங்கள் செய்யும் Organised Offenders பற்றிய விபரங்களை, அனுப்புபவர் பெயர் முகவரி எதுவும் குறிப்பிடாமல், புகாராகவோ அல்லது இமெயில் மூலமகவோ,சென்னையில் இதனடியில் கூறிஉள்ள அதிகாரிகளுக்கு அனுப்பினால் நிச்சயம் அது உரிய நடவடிக்கைகு வரும்.

ஆனால், இந்த வகையான வழக்குகளில், வழக்கின் தன்மையைப்பொறுத்துத்தான், கைது போன்ற நடவடிக்கைகள் செய்வார்கள். இதில், பொறிவைப்பு நடவடிக்கை போல உடனடி கைது இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட லஞ்சப்பேர்வழி காலப்போக்கில் சட்னியாகிவிடுவார்.

விஜிலன்ஸ் கமிஷனர் மற்றும் DVAC- முகவரிகள் பொதுமக்கள் பயன் பாட்டுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

1) Vigilance Commissioner
Personnel and Administrative Reforms Department Secretariat, Chennai 600 009 PBX No. 044-25665566
Email: parsec@tn.gov.in

(2)The Director,
Vigilance and Anti-Corruption,
293,MKN Road, Collectors Nagar, Alandur,Chennai,Tamil Nadu-600016.
Chennai – 600 028.
Phone-044-22321090/22321085/22310989/
22342142
E-mail: dvac@nic.in

மத்திய அரசுப்பணியில் உள்ளவர்கள் மீது லஞ்சப்புகார்களை அளிக்கும்பட்சத்தில், மாநில அரசுகட்டுப்பட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை எடுக்க முன்வர மாட்டார்கள். அப்புகார்களை கீழே அளிக்கப்பட்டுள்ள CBI-Anti-Corruption பிரிவிற்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தாலே போதும். அவர்களேஉங்கள் இடத்திற்கு, உங்களைத்தேடி வந்து புகாரைப்பெற்று சம்பந்தப்பட்ட Corrupt Officer-மீது பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

CHENNAI ZONE

Joint Director and Head of Zone,
III Floor, E.V.K., Sampath Building, College Road, Chennai 600006.
044-28232756 (Direct),
044-28272358(General),
044-28232755 (FAX) hozchn[at]cbi[dot]gov[dot]in 09444446240
State of Tamil Nadu, Kerala & Pondicherry.
     *இதையெல்லாம் நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் இலஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது. உரிய முறையில் உரிய இடத்தில் தொடர்பு கொண்டு இலஞ்சம் இல்லாத தேசம் அமைப்போம்...!*

நில அளவைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது  மனையையோ அளக்க  முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புர...