1. கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No - 581, வருவாய்த்துறை, நாள் - 3.4.1967 என்ற அரசாணை உள்ளது.
2. வருவாய் ஆய்வாளர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No - 581, வருவாய்த்துறை, நாள் - 3.4.1987 என்ற அரசாணை உள்ளது.
3. மண்டல துணை வட்டாட்சியர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No - 921, வருவாய்த்துறை, நாள் - 15.6.1991 என்ற அரசாணை உள்ளது.
4. வட்டாட்சியர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No - 921, வருவாய்த்துறை, நாள் - 15.6.1991 என்ற அரசாணை உள்ளது.
5. வருவாய் கோட்டாட்சியர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No - 581, வருவாய்த்துறை, நாள் - 3.4.1987 என்ற அரசாணை உள்ளது.
6. நில உடமைப் பதிவேடு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்பட்ட தவறுகளை (Rectification of defects in the updating of registry cases) மாவட்ட வருவாய் அலுவலர் தீவிர விசாரணை செய்த பின்னரே சரிசெய்ய வேண்டும். மண்டல துணை வட்டாட்சியருக்கு இந்த அதிகாரம் இல்லை என்று G. O. Ms. No - 385, வருவாய் (பொது - 3)துறை, நாள் - 17.8.2004 அரசாணை உள்ளது.
7. தனியார் ஒருவருக்கு 0.14.0 ஹெக்டேர் (35 சென்ட்) மேற்பட்ட இடங்கள் மனைவரிப்பட்டா வழங்கப்படுவதில்லை என G. O. Ms. No - 808, வருவாய் (நி. அ. 2-1)துறை, நாள் - 5.10.1998 என்ற அரசாணை உள்ளது.
8. தனி வட்டாட்சியரின் ஆணையை எதிர்த்து 30 நாட்களுக்குள் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். கோட்டாட்சியரின் ஆணையை எதிர்த்து 30 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என G. O. Ms. No - 693, Revenue, LA 2 (1) Dept, DT - 24.7.1997 அரசாணை உள்ளது.
9. மாவட்ட வருவாய் அலுவலரின் ஆணையை எதிர்த்து 30 நாட்களுக்குள் C. L. A யிடம் இரண்டாவது மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என G. O. Ms. No - 396, Revenue (L. A. (1))Dept, DT - 18.9.2003 அரசாணை உள்ளது.
No comments:
Post a Comment