தமிழ்நாட்டில் வருவாய்த்துறை தொடர்பான சேவைகள் பெரும்பாலும் இணையவழி விண்ணப்பித்தல் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றான, பட்டா நிலங்களில் கட்டணம் செலுத்தி நில அளவீடு(survey) செய்யும் சேவைக்கு கட்டணம் செலுத்திய நாளில் இருந்து முப்பது நாட்களுக்குள் அளந்து தரவேண்டும் என விதிகள் உள்ளது. எனினும் நம் மாநிலத்தின் பல இடங்களில் வருவாய் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள நில அளவையர்கள்(surveyors) முறையாக விண்ணப்பித்தும் ஏதாவது காரணங்கள் சொல்லி பல மாதங்கள் அளந்து தராமல் விண்ணப்பதாரர்களை அழைக்கழிக்கின்றனர். இது தொடர்பாக வட்டாச்சியர் மற்றும் மாவட்டஆட்சியர் அவர்களிடம் புகார் அளித்தாலும் சரியான நடவடிக்கை இல்லை மற்றும் அந்த புகார் மனுக்கள் சம்பத்தப்பட்ட நில அளவையர்கள் அவர்களிடமே செல்வதால் எந்த நியாயமும் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் மாண்பமை.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆசை தம்பி எதிர் வருவாய் அலுவலர் W.P(MD).NO-13465 OF 2020 and WMP(MD).NO.11228 OF 2020 தீர்ப்பு நாள்: 05.10.2020. என்ற வழக்கில், கட்டணம் செலுத்தி 30 நாட்களில் நில அளவீடு பணியை முடிக்காத வருவாய்த்துறை பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை/பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இந்த தீர்ப்பில் கூறப்படுள்ளதை நிறைவேற்றும்பொருட்டு அனைத்து பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 215 ன் படி ஒரு உயர்நீதிமன்ற தீர்ப்பு அந்த மாநிலம் முழுவதும் செயலாற்றல் பெறும். எனினும் சில அரசு பணியாளர்கள் மேற்கண்ட தீர்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை என வாதம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும், மாண்பமை.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பினை நடைமுறை படுத்தும் வகையிலும் பட்டா நிலங்களை நில அளவீடு(survey) செய்வது தொடர்பாக ஒரு தெளிவான சுற்றறிக்கையை வெளியிட ஆவண செய்ய வேண்டும் என மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் அவர்களையும் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர்கள்/அதிகாரிகள் அவர்களையும் நான் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
நில அளவைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புர...
-
வணக்கம் நண்பர்களே...! [1]- தனியார் ஒருவருக்கு 0.14.0 ஹெக்டேர் (35 செண்ட்) க்கு கூடுதலாக மனைவரிப் பட்டா வழங்கப்படுவதில்லை. அரசாணை எண் 808 வர...
-
பொது தகவல் அலுவலர் விவரம்* - *மேல்முறையீட்டு அலுவலர் விவரம்* 1. ஆரம்ப நிலஅளவை புலப்படச் சுவடிகள் (Blue Print Copies) மாவட்ட ஆட்சியர் அலுவலகம...
-
அரசாணை எண் : 540-ன் கீழ் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரும் மனு. அனுப்புனர் :- XXXXXXXXXX ...
No comments:
Post a Comment