Wednesday, November 4, 2020

VAO அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள்

தமிழகத்தை பொறுத்த வரை நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்றாலே பத்திரபதிவு அலுவலகம் வட்டாசியர் அலுவலகம் தான் என்று பெரும்பாலான மக்கள் மனதில் நினைவுக்கு வருகிறது.

ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்றாலே முதலில் எந்த ஒரு மக்களுக்கும நினைவுக்கு வர வேண்டிய அலுவலகம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் ஆகும்.

பல்லாயிரம் ஆண்டுகளாக பல அரசுகளால் பல முடிசூடா மன்னர்களின் ராஜ்ஜியங்களால் இஸ்லாமிய பேரரசுகளால்,ஆங்கிலேயர் ஏகாதிபத்தித்தால் நமது தமிழக மண் ஆளப்பட்டு பல்வேறு தரப்பினர்களுக்கு பல்வேறு வகையில் உரிமையாகி இந்த நிலங்கள் ஆளப்பட்டு வந்தது.

ஆனால் 1980 களில் மேற்படி நிலங்கள் எல்லாம் இறுதியாக யார் கையில் இருக்கிறதா இதனை விரிவாக தொகுத்து நில உடைமை மேம்பட்டு திட்ட ஆவணமாக உருவாக்கி இந்த ஆவணங்கள் கிராம நிர்வாக அதிகாரி அலுவலர் மூலம் பாரமரித்து சரிபார்த்து பாதுகாத்து வருகின்றனர்.

உதாரணமாக வங்கிகளில் கணினி (அ) கம்ப்யூட்டர் காலத்திற்கு முன் கம்ப்யூட்டர் காலத்திற்கு பின் என்று அனைத்து MANUAL ரெகார்டுகளையும் சரிபார்த்து அதனை இறுதி மற்றும் சரியான தகவல்களை கம்ப்யூட்டரில் ஏற்றி வைப்பார்கள். 

அதன் பிறகு வருகின்ற எல்லா அலுவகங்களில் வேலைகளும் மேற்படி ஆவணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவார்கள் .

அதே போல் தான் நில உடைமை மேம்பாட்டு திட்டத்திற்கு முன்பு இருகின்ற அனைத்து ஆவணங்களையும் ஒழுங்குப் படுத்தி சீர் செய்து அதனை இறுதி ஆவணமாக அதாவது –யு . டி .ஆர் நில உடைமை மேம்பாட்டு திட்ட ஆவணமாக உருவாக்கி நடைமுறையில் கிராம நிர்வாக அலுவலகம் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்படி கிராம நிர்வாக அலுவலகங்களில் கிராம கணக்குள் 24 இருக்கிறது. 

இதை 28 லச்சராக பிரித்து உள்ளது. இந்த 24ம் தெரிந்தால் ஓட்டு மொத்த தமிழகத்தின் நில நிர்வாகம் பற்றி புரிந்து விடும். அந்த 24 கிராம கணக்குள் பற்றி விளக்கம் பின்வருமாறு.

வ.எண்.1. கிராம கணக்குள்.எண். அ. பதிவேடு.

வ.எண்.2. கிராம கணக்கு எண்.1 (சாகுபடி பற்றியது)

வ.எண்.3. கிராம கணக்கு எண்.1A (அறுவடை பற்றியது)

வ.எண்.4. கிராம கணக்கு எண்.2 (அடங்கல் பற்றியது)

வ.எண்.5. கிராம கணக்கு எண்.2C (மரங்களை பற்றியது)

வ.எண்.6. கிராம கணக்கு எண்.2D (பாசன வசதிகளை பற்றியது)

வ.எண்.7. கிராம கணக்கு எண்.2F (கிராம தரிசு நிலங்களை பற்றியது)

வ.எண்.8. கிராம கணக்கு எண்.3 (பட்டா பற்றியது)

வ.எண்.9. கிராம கணக்கு எண்.3A (பட்டா மற்றிதல் பற்றியது)

வ.எண்.1௦. கிராம கணக்கு எண். 4 (நில கழிவுகள் பற்றியது)

வ.எண்.11. கிராம கணக்கு எண் 5 (நில வரி பற்றியது)

வ.எண்.12. கிராம கணக்கு எண் 6 (தண்ணீர் தீர்வை பற்றியது)

வ.எண்.13. கிராம கணக்கு எண் 7 (நில ஆக்கிரமிப்பு பற்றியது)

வ.எண்.14. கிராம கணக்கு எண் 8 (நீர் பாசன நிலங்களில் கிடைக்க கூடிய மொத்த வருவாய் பற்றியது )

வ.எண்.15. கிராம கணக்கு எண் 9 (நீர் பாசனம் பற்றியது)

வ.எண்.16. கிராம கணக்கு எண் 1௦ ( சிட்டா பற்றியது)

வ.எண்.17. கிராம கணக்கு எண் 11 (பட்டா வடிவம்பற்றியது)

வ.எண்.18. கிராம கணக்கு எண் 12 (நில தொகை பற்றியது)

வ.எண்.19. கிராம கணக்கு எண் 13 (தினசரி வசூல் பற்றியது)

வ.எண்.2௦. கிராம கணக்கு எண் 14 (அபராத தொகை பற்றியது)

வ.எண்.21. கிராம கணக்கு எண் 15 ( அரசு கருவுல பணம் செலுத்தும் விபரம் பற்றியது)

வ.எண்.22. கிராம கணக்கு எண் 16 (நிலுவை தொகை பற்றியது)

வ.எண்.23. கிராம கணக்கு எண் 17 (தண்ட தொகை பற்றியது)

வ.எண்.24. கிராம கணக்கு எண் 18 (ரசீது சம்பந்தப்பட்டது)

வ.எண்.25. கிராம கணக்கு எண் 19 (பிறப்பி இறப்பு சம்பந்தப்பட்டது)

வ.எண்.26. கிராம கணக்கு எண் 2௦ (மலை பற்றிய விவரம்)

வ.எண்.27. கிராம கணக்கு எண் 21 (கால் நடை பற்றியது )

வ.எண்.28 கிராம கணக்கு எண் 22 (கூட்டு பட்டா பற்றியது)

மேற்ண்ட 28 லெட்ஜரை சில கணிணி மயமான பிறகு அரசு பராமரிக்க வேண்டாம் என அறிவித்துள்ளது…அவை பின்வருமாறு

சாகுபடி(Cultivation) பற்றிய மாதாந்திர பதிவேடு (Monthly Register) அடங்கல் பதிவேட்டின கணினி மயம உடன் இக்கணக்கை நீக்கலாம்
1.ஏ சாகுபடி செய்யப்பட்ட பயிர்களின் பரப்பையும், விளைச்சல் மதிப்பையும் பற்றிய சுருக்கமான விவரப்பட்டி. அடங்கல் பதிவேட்டின கணினி மயம உடன் இக்கணக் நீக்கலாம்.

2டி. கிராமத்தில் சில பாய்ச்சல் ஆதாரங்களின் கீழ் பாய்ச்சப்பட்ட பரப்பில் விவரங்களை காட்டும் விவரப்பட்டி இக்கணக்குக விவரங்கள் க எண் 2 இலும் ம “அ”பதிவேட்டில் சேகரிக்கக் படுவதினால் நீக்கலாம்.

2எப். கிராமத்தில் பல்வேறு வகை நில வகுப்புகளின் பரப்புகளைக் காண்பிக்கும் விவரப்பட்டி இக்கணக்குக விவரங்கள் க எண் 2இலும் ம “அ”பதிவேட்ட சேகரிக்கக் படுவதினால் நீக்கலாம்.

அனைத்து வகை அரசிறைக்கழிவுகளைக் காட்டும் விவரப்படி. அத்தகைய அர சிறைகழிவுகள் தற்சமயம் கிராமங்களி செய்யப்படுவதால் எனவே நீக்கலாம்
8 ஏ. I மற்றும் II -|||ஆம் வகுப்பு நீர்ப்பாய்ச்சல் ஆதாரங்களின் கீழ் நீர்ப்பாய்ச்சப்பட்ட நிலங்களைக் காண்பிக்கும் விவரப்படி. இக்கணக்கு “அ” பதிவேட்ட காணப்படுவ இதனை நீக்கலாம்

10சி மற்றும் 10டி. வருவாய் பதிவுகளை மாற்றுவதற்காக (Transfer of Registry) கிராம நிர்வாக அலுவலரால் சமர்ப்பிக்கப்பட்டு வரும் துணைப் பதிவேடு (Subsidiary Register) கிராம கணக்கில் இதன் விவரம் பெறப்படுவதால் இவைகள் நீக்கப்படுகின்றது

பலவகை மதிப்புள்ள கைப்பற்றுகளின் எண்ணிக்கையைக் காட்டும் விவரப்பட்டி. 

இக்கணக்கு, க எண்10(1) கணக்கைசேர்த்து பேண ஆணையிடப்பட்டதால் நீக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நில அளவைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது  மனையையோ அளக்க  முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புர...